லிந்துலை ஹோல்றூட் கொனன் தோட்டத்தில் மின்னல் தாக்கியதில் குடியிருப்பு வீடொன்று பலத்த சேதமடைந்துள்ளது. மின் இணைப்புப் பெட்டி தீப்பிடித்து எரிந்ததுடன், கூரை மற்றும் மின்சார உபகரணங்களும் சேதமடைந்துள்ளன. வீட்டிலிருந்தவர்கள் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.
லிந்துலை பெரிய ராணிவத்தை பகுதியில் இன்று (04) காலை தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.