தென்மேற்கு பருவமழை நிலைகொள்ளும் நிலையில், மேற்கு, சப்ரகமுவ, வடமேற்கு மாகாணங்கள், காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் அடுத்த சில நாட்களில் 75 மி.மீ.க்கு மேற்பட்ட பலத்த மழை எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையின் பல பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு மழையுடனான வானிலை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சில பகுதிகளில் 75 மி.மீ.க்கு மேல் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் பகுதிகளில் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பதிவாகலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பல மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களில் கடுமையான மின்னல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.