அரசாங்கம் முன்னெடுத்து வரும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையால் சிறைச்சாலைகளுக்குள் போதைப்பொருள் விநியோகம் கணிசமாகக் குறைந்துள்ளதாகவும், இதுவும் இந்த கலவரத்துக்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
சிறையிலுள்ளவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான தனது பொறுப்பையும் பொறுப்புக்கூறலையும் அமைச்சர் நிறைவேற்றத் தவறிவிட்டார் என்று எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டினர்.
இந்த சந்திப்பின் போது, தற்போது சிறைச்சாலை கட்டமைப்பு எதிர்கொண்டுள்ள சவால்கள் மற்றும் அவற்றுக்குத் தீர்வுகாண எடுக்கப்பட வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டன.
நாட்டின் சிறைச்சாலை அமைப்பில் அண்மைக்காலமாக ஏற்பட்டுள்ள அழுத்தங்களைக் குறைக்கும் ஒரு முயற்சியாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.