200 பொதுத்துறை தொழிற்சங்கங்கள் இணைந்து முன்னெடுத்துள்ள ‘சிக் லீவ்’ போராட்டம் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் தொடர்கிறது.
ஆசிரியர்கள் நாளை (09) சுகயீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுப்பதாக அறிவித்துள்ளனர்.
தபால் அலுவலகம், அளவையிலாளர், கிராம அலுவலர்கள், உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அரசு அலுவலர்கள் இன்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வுகள் வழங்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து சுங்க அதிகாரிகள் சுகயீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர்.
ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களை கொழும்பிற்கு அழைத்து வந்து ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பல தொழில் பிரச்சினைகளின் அடிப்படையில் இன்று சுகயீன விடுமுறையை அறிவித்து, பணிப் புறக்கணிப்பு நடவடிக்கையை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் ஷானக போபிட்டியகே தெரிவித்துள்ளார்.