ADVERTISEMENT

Tag: உயிர்த்த ஞாயிறு தாக்குதல்

உயிர்த்த ஞாயிறு  தாக்குதல் வழக்கில் இன்று தீர்ப்பு; பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்

2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் வழக்கின் இறுதித் தீர்ப்பு புதுக்கடை மேல் நீதிமன்ற மூவரடங்கிய நீதிபதிகள் குழாமினால் இன்று அறிவிக்கப்படவுள்ள நிலையில் நீதிமன்ற வளாகத்தில் விசேட பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டார் முன்னாள் புலனாய்வுப் பிரிவு தலைவர் சுரேஷ் சலே

முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவு தலைவர் சுரேஷ் சலே, சட்ட ஆலோசகரின் அறிவுரையை ஏற்று தனது உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டுள்ளார். அவர் தொடர்ந்தும் மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார்.

கோட்டாபய ராஜபக்ஷவின் ரிட் மனு விசாரணை ஒத்திவைப்பு

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் போது தம்மைக் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்த ரிட் மனு, எதிர்வரும் ஜூலை மாதம் 6 ஆம் திகதி வரை மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கோட்டாபய ராஜபக்ஷவின் மனு மீதான பரிசீலனை ஜூன் 24க்கு ஒத்திவைப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணையில் தன்னைக் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்த மனுவின் பரிசீலனையை மேல்முறையீட்டு நீதிமன்றம் ஜூன் 24 ஆம் தேதி வரை ஒத்திவைத்தது.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான சர்வதேச விசாரணை அறிக்கைகள் வழங்குமாறு கோரிக்கை

ஜேர்மன் ஊடக நிறுவனமான 'Deutsche Welle'இல் தகவல் வெளிவரும் வரையில் தாமோ அல்லது நாட்டு மக்களோ இது பற்றி   அறிந்திருக்கவில்லை என இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவை தெரிவித்துள்ளது