நிழல் கிரகமாகக் கருதப்படும் ராகுவும் கும்ப ராசியிலேயே வக்ர நிலையில் சஞ்சரித்து வருகிறார். ராகு சுமார் 18 மாதங்கள் ஒரு ராசியில் தங்குவார்.
ராகு, சுக்கிரன் மற்றும் புதன் ஆகிய கிரகங்கள் கும்ப ராசியில் சஞ்சாரம் செய்து வரும் நிலையில், பிப்ரவரி 13ஆம் தேதி சூரியனும் கும்ப ராசிக்குள் பெயர்ச்சி அடைகிறார்.
ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒவ்வொரு கிரகத்திற்கும் தனித்தனி முக்கியத்துவம் உள்ளது. அவற்றில் கிரகங்களின் அரசனாகக் கருதப்படுபவர் சூரியன். தன்னம்பிக்கை, அதிகாரம், தைரியம் மற்றும் சமூக அங்கீகாரம் ஆகியவற்றின் அடையாளமாக சூரியன் விளங்குகிறார்.