இதில் யாழ். துணை தூதுவர் ஸ்ரீ சாய் முரளீஸ் மற்றும் தூதரக அதிகாரி நாகராஜன் ராம சுவாமி ஆகியோர்கள் கலந்துகொண்டனர்.
இப்படம் யாழ்ப்பாணத்தில் வாழும் முன்னாள் போராளி, வன்னிப் பகுதியைச் சேர்ந்த வரலாற்றாசிரியர், கொழும்பைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் மற்றும் சென்னையைச் சேர்ந்த இளம் ஊடகவியலாளர் ஆகியோரின் பார்வையில், போருக்குப் பின் இலங்கையில் நடந்த உண்மைக் கதைகளை அடிப்படையாகக் கொண்டது.
முன்னாள் மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா ஓய்வுபெற்றதைத் தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவிய அரசாங்க அதிபருக்கான வெற்றிடத்திற்கு அரசு இவரை நியமித்துள்ளது.
தனது ஊடகப் பணியை இலக்கு வைத்து யாரோ இந்தத் திருட்டைத் திட்டமிட்டுள்ளதாக ஊடகவியலாளர் தனது சந்தேகத்தை வெளிப்படுத்துகின்றார்.
எமது நாட்டில் ஊடகவியலாளர்களுக்கு தொழில் பாதுகாப்பு இல்லாமையே, தொழில் வழங்குநர்கள் தாம் நினைத்தவாறு நடந்துகொள்வதற்கு வழிவகுக்கின்றது. ஆகவே, ஊடகவியலாளர்ளாகிய நாம் ஒன்றிணைந்து அதற்காக பாடுபடுவது அவசியம்.
நூல் வெளியீட்டைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், செல்வராசா கஜேந்திரன், இராசபுத்திரன் சாணக்கியன் ஆகியோரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சேனாதிராஜா ஜெயானந்தமூர்த்தி மற்றும் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் ஆகியோர் உரையாற்றவுள்ளனர்.
இரண்டு வயதுக்கு குறைவான சிறுவர்கள் இலத்திரனியல் திரைகளைப் பயன்படுத்துவதால் அவர்களின் மூளை வளர்ச்சிக்கு பாரிய அழுத்தம் ஏற்படுவதாகவும் இதன் தாக்கம் அவர்கள் வளர்ந்து 10 வயது தொடக்கம் 12 வயதை அடையும் போது வெளிப்படுவதாகவும் தெரிவித்தார்.
ஆதவன் தொலைக்காட்சி ஊடகவியலாளர் அருண் பிரசாந்தின் தந்தை அன்பரசன் இன்று(28) மாலை காலமானார்.