ரொய்ட்டர்ஸ் செய்தியாளர்கள் கீவ் நகரில் வான் பாதுகாப்பு நடவடிக்கைகள் செயல்பட்டதை நேரில் கண்டதாக தெரிவித்துள்ளனர்.
உக்ரைனின் அடுத்தடுத்த தாக்குதல்களால் கடும் கோபம் அடைந்துள்ள புதின், தக்க பதிலடி கொடுக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
உக்ரைனுக்கு எதிரான ரஷ்ய படையெடுப்பானது ஒன்றரை ஆண்டுகளாக நடந்து வருகிறது. இதில், கிழக்கு உக்ரைன் பகுதியை ரஷ்யா கைப்பற்றி இருந்தது.
உக்ரைனில் ரஷ்ய படைகள் அடுத்தடுத்து நிகழ்த்திய வான்வழித் தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்தனர்.