வானிலை ஆய்வுத் திணைக்களம் இன்று (17) வெளியிட்டுள்ள அறிவிப்பில், மேல், சபரகமுவ, வடமேல் மாகாணங்கள் மற்றும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும், ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவகமுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வந்துரம்முல்ல பகுதியில் நேற்று (16) மாலை நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞன் இன்று (17) உயிரிழந்துள்ளார்.