ஈரான் அமெரிக்காவுடன் போர் நிறுத்த பேச்சுவார்த்தை நடத்தவில்லை என உறுதி செய்துள்ளது. அதே சமயம் டிரம்ப் ஹார்முஸ் நீரிணை பாதுகாப்பில் ஒத்துழைப்பு ஏற்படும் என்று கூறினார்.
ஈரானுடனான தாக்குதல்களை ஐந்து நாட்களுக்கு ஒத்திவைப்பதாக அறிவித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வரும் சனிக்கிழமை நேரடிப் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஹார்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் என்றும், அணு ஆயுதப் பயன்பாடு குறித்து ஈரான் உறுதியளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஹார்முஸ் நீரிணையை முழுமையாக மூடிவிடும் என்ற அச்சம் உலக நாடுகளுக்கு ஏற்பட்டிருந்த நிலையில், அதுகுறித்து ஈரான் முக்கிய விளக்கமொன்றை வெளியிட்டுள்ளது.
ஓமன் கடற்கரையில் ஒரு எண்ணெய் கப்பல் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, மோதல் தீவிரமடைந்துள்ளதைக் குறிக்கிறது.