அந்த எண்ணெய் தற்போதைய சந்தை விலையில் விற்கப்படும் என்றும், அதனால் கிடைக்கும் பணம் தமது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.
தொலைபேசி பேட்டியில், டிரம்ப் ரோட்ரிக்ஸை நோக்கி, "அவர் சரியான முடிவெடுக்காவிட்டால், மடுரோவை விடப் பெரிய விலையை செலுத்த நேரிடும்" என்று எச்சரித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டிரம்ப் வெளியிட்ட அறிக்கையின்படி, அமெரிக்க ராணுவம் கராகஸ் நகரில் 7 இடங்களில் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதனால் ராணுவ தளத்திற்கு அருகில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
2025 அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலாவின் மரியா கொரினா மச்சாடோவுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஜனநாயக உரிமைகளுக்கான அவரது போராட்டத்தைப் பாராட்டி, டிரம்ப் பரிந்துரைகளைத் தாண்டி அவருக்கு இந்த விருது கிடைத்தது.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலால் கையகப்படுத்தப்பட்ட சிறைச்சாலையை மீண்டும் கைப்பற்றும் நடவடிக்கையை வெனிசுலா இராணுவம் ஆரம்பித்துள்ளது.