அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானுடனான போரில் வெற்றி பெற்ற பின்னர் ஹார்முஸ் ஜலசந்தியை அமெரிக்கப் பிரதேசமாக அறிவிக்கப்போவதாக கூறியுள்ளார். இதற்கு ஈரான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
வணிக ரீதியிலான விமானப் போக்குவரத்துப் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்கர்கள் எவ்வாறு அந்த நாடுகளை விட்டு வெளியேற முடியும் என்ற கவலை அமெரிக்க பிரஜைகள் மத்தியில் எழுந்துள்ளது.
இஸ்ரேலின் நடவடிக்கைகள் அழிவை ஏற்படுத்தும் போரைப் போன்றது என்று லெபனான் பிரதமர் குற்றஞ்சாட்டினார்.
லெபனான் நாட்டில் 10-க்கும் மேற்பட்ட அகதிகள் முகாம்கள் உள்ளன. இவற்றில் சிடான் என்ற துறைமுக நகரின் தெற்கு பகுதியில் அமைந்த அகதிகள் முகாமில் மோதல்கள் ஏற்பட்டு உள்ளன.