பெருந்தோட்டத் தொழிலாளரின் சம்பளம் அதிகரிக்கப்படுவது உறுதியானது என நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் மாதத்தில் 10 கிலோகிராம் அரிசியும் மே மாதத்தில் 10 கிலோகிராம் அரிசியும் வழங்க திட்டம்.
நாட்டின் பொருளாதாரம் மற்றும் வரிக் கொள்கையின் அண்மைய நிலவரத்தை அறிவிப்பதற்காக நிதியமைச்சில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
வருடத்தின் தொடக்கத்தில் இருந்து இலங்கை ரூபாய் அமெரிக்க டொலருக்கு எதிராக சுமார் 19% குறிப்பிடத்தக்க உயர்வை சந்தித்துள்ளது.
விண்ணப்பதாரர்களில் தகுதியானர்கள் மாத்திரம் தெரிவு செய்யப்பட்டு, அவர்களுக்கான நிவாரணத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.