செவ்வாய்க்கிழமை மாலை நிலவரப்படி, இங்கிலாந்து முழுவதும் நூற்றுக்கணக்கான வெள்ள எச்சரிக்கைகள் அமலில் இருந்தன. இதில் மட்டும் இங்கிலாந்தில் 95 எச்சரிக்கைகள் உள்ளன. ஏற்கனவே ஈரமடைந்த நிலப்பரப்பில் தென்மேற்கு இங்கிலாந்தில் கனமழை பெய்வதால், வெள்ள அபாயம் மேலும் அதிகரித்துள்ளது.
மண்மேடு சரிந்து விழுந்த நிலையில், அப்பகுதியில் வாகனங்களை செலுத்திய வாகன சாரதிகள் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
குறித்த மண்மேட்டை அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், சாரதிகளை மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.