விவசாயி சேற்றில் கால் வைத்தால் தான் மக்கள் சோற்றில் கை வைக்க முடியும் என்பதைக் குறிப்பிட்ட பிரதமர், நாட்டின் சுபீட்சத்துக்காக மேற்கொள்ளப்படும் இந்த அர்ப்பணிப்பான பயணமும் ஒரு நற்பயிரை வளர்ப்பதற்கு ஒப்பானது என விளக்கினார்.
இந்தப் பண்டிகை, சிறந்த விளைச்சலுக்கு நன்றி கூறும் ஒரு நிகழ்வாக மட்டுமல்லாது, எதிர்காலத்தை தைரியத்துடனும் நம்பிக்கையுடனும் எதிர்கொள்ளும் புதிய பயணத்தைத் தொடங்குவதற்கான அழைப்பாகவும் அமைகிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
முல்லைத்தீவின் கேப்பாபுலவில் இராணுவத்தால் நடத்தப்படும் சிகையலங்கார நிலையத்தை மூடுமாறு கரைத்துறைப்பற்று பிரதேச சபை அறிவித்துள்ளது. உள்ளூர்வாசிகளின் முறைப்பாட்டை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இராணுவத்தின் இந்த செயலை பிரதேச சபை தவிசாளர் வன்மையாக கண்டித்துள்ளார்.