நிலம், வீடு அல்லது சொத்து தொடர்பாக இருந்த பிரச்சினைகள் தீர்வு காணலாம். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியும், குடும்பத்தில் ஒற்றுமையும் அதிகரிக்கும். உடல்நலத்தில் இருந்த சிறிய பிரச்சினைகளும் படிப்படியாக குறையக்கூடும்.
சுக்கிரன் கடக ராசிக்கு பெயர்ச்சி செய்வதால் குருவுடன் இணைந்து கஜலட்சுமி ராஜயோகம் உருவாகிறது. இந்த அரிய கிரக சேர்க்கையால் மேஷம் முதல் மகரம் வரை 5 ராசிக்காரர்களுக்கு நிதி, தொழில் மற்றும் குடும்ப வாழ்வில் முன்னேற்றம் கிடைக்கலாம் என ஜோதிடர்கள் கூறுகின்றனர்.
வேத ஜோதிடத்தின்படி, 12 ஆண்டுகளுக்குப் பிறகு குரு பகவான் ஜூன் 2ஆம் தேதி கடக ராசிக்குள் நுழைகிறார்.