அடுத்த ஐந்து ஆண்டுகளில் பூமியின் வெப்பநிலை சர்வதேச காலநிலை வரம்பை மீண்டும் மீண்டும் தாண்டும் என்றும், 2024-இல் பதிவான வெப்பமான ஆண்டை விட 2027 அதிக வெப்பமாக இருக்கும் என்றும் உலக வானிலை அமைப்பின் புதிய கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெப்பநிலை மாற்றம் இனி தொலைதூர அச்சுறுத்தல் அல்ல; அது தற்போதைய மற்றும் வளர்ந்து வரும் யதார்த்தமாகும். இதன் தாக்கங்கள் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் ஏற்கனவே உணரப்படுகின்றன. இந்நிலையில், கொழும்பில் பொதுநலவாய காலநிலை நிதி அணுகல் மையத்தின் 8வது தலைமைக் குழுக் கூட்டம் தொடங்கியது.