இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானால் இதற்கான அமைச்சரவை பத்திரம் முன்வைக்கப்பட்டு, அதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
அரச பெருந்தோட்ட நிறுவனங்களில் பணியாற்றிய தோட்ட தொழிலாளர்களில் பலருக்கு 2002ஆம் முதல் ஈ.பி.எப், ஈ.டி.எப் என்பன செலுத்தப்படாமல் உள்ளன. இவ்வாறு நிலுவையில் உள்ள தொகை செலுத்தப்பட வேண்டும் என இ.தொ.காவின் சார்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.