முட்டை இறக்குமதியில் அரசாங்கம் மீண்டும் கவனம் செலுத்தி வருவதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.
முட்டைகளை இறக்குமதி செய்ய அரசாங்க வர்த்தக பல்நோக்கு கூட்டுத்தாபனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவிலிருந்து முட்டை இறக்குமதி செய்வது வரையறுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் திகதி வரை முட்டைகளை இறக்குமதி செய்ய இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
முட்டை இறக்குமதியின் மூலம் சந்தையில் ஏற்பட்டுள்ள முட்டை தட்டுப்பாட்டைப் போக்க முடிந்தது.
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட முதல் முட்டைத் தொகை இலங்கையை வந்தடைந்துள்ளது.