விளையாட்டு

ஆசிய கோப்பை 2025: ஹாங்காங்கை 94 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆப்கானிஸ்தான்

Admin செப்டெம்பர் 10, 2025 0
Asia Cup 2025

அபுதாபி: 2025 ஆம் ஆண்டு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில், ஆப்கானிஸ்தான் அணி ஹாங்காங்கை 94 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. அபுதாபியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

ஆப்கானிஸ்தானின் பேட்டிங்: முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணிக்கு தொடக்க வீரர்கள் ரஹ்மத்துல்லா குர்பாஸ் 5 பந்துகளில் 8 ரன்களிலும், இப்ராஹீம் சார்டன் ஒரு ரன்னிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். எனினும், மற்றொரு தொடக்க வீரரான செதுக்குல்லா அட்டல் பொறுப்புடன் விளையாடி அணியின் இன்னிங்ஸை கட்டமைத்தார். அவர் 41 பந்துகளில் அரை சதம் அடித்ததுடன், 52 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 73 ரன்கள் குவித்தார்.

அனுபவ வீரர் முகமது நபி 26 பந்துகளில் 33 ரன்கள் சேர்த்தார். குலாப்தீன் நைப் 5 ரன்களில் வெளியேற, அஸ்மத்துல்லா உமர்சாய் முதல் பந்திலிருந்தே அதிரடி காட்டினார். அவர் ஹாங்காங் பந்துவீச்சை சிதறடித்து, 20 பந்துகளில் அரை சதம் அடித்து, 5 சிக்ஸர்கள் மற்றும் 2 பவுண்டரிகளுடன் 21 பந்துகளில் 53 ரன்கள் சேர்த்தார். கரீம் ஜன்னத் 2 ரன்களும், ரஷித் கான் 3 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர்.

இறுதியில், ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்தது. ஹாங்காங் பந்துவீச்சு தரப்பில், ஆயுஸ் சுக்லா 4 ஓவர்களில் 54 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளையும், கின்சீட் ஷா 3 ஓவர்களில் 24 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். ஈசான் கான் 4 ஓவர்களில் 28 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.

ஹாங்காங்கின் தடுமாற்றம்: 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஹாங்காங் அணி பேட்டிங்கில் கடுமையாகத் தடுமாறியது. அந்த அணியின் முன்வரிசை வீரர்கள் வந்த வேகத்தில் நடையைக் கட்டினர். பாபர் ஹாயத் மட்டுமே அதிகபட்சமாக 39 ரன்கள் எடுத்தார், மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால், ஹாங்காங் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 94 ரன்கள் மட்டுமே எடுத்தது.

ஆப்கானிஸ்தான் பந்துவீச்சு தரப்பில், ஃபரூக்கி மற்றும் குலாப்தீன் நைப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு உதவினர். இந்த வெற்றியின் மூலம் ஆப்கானிஸ்தான் அணி ஆசிய கோப்பை தொடரை சிறப்பாகத் தொடங்கியுள்ளது.

Tags

ஆசிய-கோப்பை-2025 2025-Asia-Cup Asia-Cup-2025
Popular post
புதன் நட்சத்திர பெயர்ச்சி - இந்த 3 ராசிகளுக்கு வெற்றியும், செல்வமும் குவியப்போகுது...

ஜோதிடத்தில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படுபடும் புதன், ஆகஸ்ட் மாதத்தில் மகம் நட்சத்திரத்திற்கு செல்லவுள்ளார். அதுவும் இந்த மக நட்சத்திரத்திற்கு ஆகஸ்ட் 30 ஆம் தேதி செல்லவிருக்கிறார். இந்த மகம் நட்சத்திரத்தில் புதன் செப்டம்பர் 06 ஆம் தேதி வரை இருப்பார். நட்சத்திரங்களில் மகம் 10 ஆவது நட்சத்திரமாகும். இது முன்னோர்களைக் குறிக்கிறது. மகம் நட்சத்திரத்தின் அதிபதி கேது.  புதன் கேதுவின் நட்சத்திரத்திற்கு செல்வதால், அதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும். அதில் சில ராசிக்காரர்களுக்கு மோசமாக இருந்தாலும், சிலருக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது.  ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு புதனின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. புத்திசாலித்தனத்தால் பல வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். இதுவரை உணர்வுகளை மற்றவர்களிடம் தெரிவிக்காமல் மறைத்திருந்தால், இக்காலத்தில் வெளிப்படுத்துவீர்கள். உங்களின் தைரியம் அதிகரிக்கும். மனதில் பட்டதை மறைக்காமல் வெளிப்படையாக பேசுவீர்கள். உணர்ச்சி ரீதியாக சிறப்பாக உணர்வீர்கள். வியாபாரிகளுக்கு சிறப்பாக இருக்கும். எடுக்கும் வேலைகளில் வெற்றி கிடைக்கும். சிம்மம் சிம்ம ராசிக்காரர்களுக்கு புதனின் நட்சத்திர பெயர்ச்சியால் தொழில் ரீதியாக சிறப்பாக இருக்கும். அறிவாற்றல் மேம்படும். புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வீர்கள். உங்களின் பேச்சு மிகவும் சுவாரஸ்மாக இருக்கும். பேச்சால் பல வேலைகளை சிறப்பாக முடிப்பீர்கள். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். நிதி நிலை மேம்படும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தேவையற்ற விஷயங்களில் நுழைந்து மன அழுத்தப்படுவதைத் தவிர்த்திடுங்கள். மேலும் இக்காலத்தில் மன அழுத்தத்தைக் குறைக்க யோகா, உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள். விருச்சிகம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு புதனின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கப் போகிறது. புத்திசாலித்தனம் அதிகரிக்கும். பேச்சால் பல வேலைகளில் வெற்றி பெறுவீர்கள். நீண்ட காலமாக இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். நிதி நிலை நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் ரீதியாக பல சிறப்பான பலன்களைப் பெறுவீர்கள். தொழிலதிபர்கள் எதிர்காலத்தில் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும்.

ரணில் கைது: நீதிமன்ற வளாகத்தில் கடும் பாதுகாப்பு

கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, கோட்டை நீதவான் நீதிமன்றத்தைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நான்கு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த வாக்குமூலத்திற்குப் பிறகு,   விக்ரமசிங்க கைது செய்யப்பட்டார். இதனையடுத்து, அவர் விரைவில் அவர் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆசிய கோப்பை: இந்திய அணியை தேர்வு செய்த ஹர்பஜன்

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அணிகளை அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்து வரும் நிலையில், இந்திய அணி நாளைய தினம் அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்புகள் உள்ளன.  இந்நிலையில் இத்தொடருக்கான இந்திய அணியை முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கணித்துள்ளார். இதில் சஞ்சு சாம்சனை அணியில் சேர்க்காமல் விட்டுவிட்டு ஷ்ரேயாஸ் ஐயருக்கு இடம் வழங்கியுள்ளார்.  அதே நேரத்தில் அவர் தனது அணியில் சுப்மன் கில்லையும் சேர்த்துள்ளார். இந்த தொடருக்கான இந்திய அணியில் கில் இடம்பிடிக்க மாட்டார் என்று கூறப்படும் நிலையில் கில் நிச்சயமாக ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் கில் இடம்பிடிப்பார் என்று ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். ஹர்பஜன் சிங் தேர்வு செய்த இந்திய அணி: யஷஸ்வி ஜெய்ஸ்வால், அபிஷேக் சர்மா, சுப்மான் கில், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஹர்திக் பாண்ட்யா, ஷ்ரேயாஸ் ஐயர், வாஷிங்டன் சுந்தர், கேஎல் ராகுல்/ரிஷப் பந்த், ரியான் பராக், குல்தீப் யாதவ், அக்ஸர் படேல், முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங், அர்ஷ்தீப் பும்ரா.

பாடசாலை வேன் விபத்து; இரு மாணவர்கள் உட்பட மூவர் பலி!

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று விபத்துக்குள்ளானதில் பாடசாலை மாணவர்கள் இருவர் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.  இந்த விபத்தில் 13 பேர் காயமடைந்துள்ளனர். குளியாப்பிட்டி, வில்பொல பாலத்திற்கு அருகில் இன்று (27) காலை விபத்து இடம்பெற்றுள்ளது.  பாடசாலை வேனுடன் டிப்பர் ஒன்று நேருக்கு நேர் மோதியமையால் விபத்து சம்பவித்துள்ளது.  பாடசாலை வேன் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.  காயமடைந்த 13 மாணவர்கள், குளியாப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  இந்த விபத்து தொடர்பில் குளியாப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் விசேட அறிவிப்பு

'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவின் செப்டம்பர் மாதத்திற்கான உதவித்தொகை வெள்ளிக்கிழமை (12) அன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது. இந்த மாதம் மொத்தம் 1,421,574 குடும்பங்களுக்கு கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளன. இந்த கொடுப்பனவுகளுக்காக 11.2 பில்லியனுக்கும் அதிகமான ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பயனாளிகள் வெள்ளிக்கிழமை முதல் தங்களின் அஸ்வெசும நலன்புரி வங்கிக் கணக்குகளில் இருந்து நிதியைப் பெற்றுக்கொள்ள முடியும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

விளையாட்டு

View more
Asia Cup 2025
ஆசிய கோப்பை 2025: ஹாங்காங்கை 94 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆப்கானிஸ்தான்

அபுதாபி: 2025 ஆம் ஆண்டு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில், ஆப்கானிஸ்தான் அணி ஹாங்காங்கை 94 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. அபுதாபியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. ஆப்கானிஸ்தானின் பேட்டிங்: முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணிக்கு தொடக்க வீரர்கள் ரஹ்மத்துல்லா குர்பாஸ் 5 பந்துகளில் 8 ரன்களிலும், இப்ராஹீம் சார்டன் ஒரு ரன்னிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். எனினும், மற்றொரு தொடக்க வீரரான செதுக்குல்லா அட்டல் பொறுப்புடன் விளையாடி அணியின் இன்னிங்ஸை கட்டமைத்தார். அவர் 41 பந்துகளில் அரை சதம் அடித்ததுடன், 52 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 73 ரன்கள் குவித்தார். அனுபவ வீரர் முகமது நபி 26 பந்துகளில் 33 ரன்கள் சேர்த்தார். குலாப்தீன் நைப் 5 ரன்களில் வெளியேற, அஸ்மத்துல்லா உமர்சாய் முதல் பந்திலிருந்தே அதிரடி காட்டினார். அவர் ஹாங்காங் பந்துவீச்சை சிதறடித்து, 20 பந்துகளில் அரை சதம் அடித்து, 5 சிக்ஸர்கள் மற்றும் 2 பவுண்டரிகளுடன் 21 பந்துகளில் 53 ரன்கள் சேர்த்தார். கரீம் ஜன்னத் 2 ரன்களும், ரஷித் கான் 3 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர். இறுதியில், ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்தது. ஹாங்காங் பந்துவீச்சு தரப்பில், ஆயுஸ் சுக்லா 4 ஓவர்களில் 54 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளையும், கின்சீட் ஷா 3 ஓவர்களில் 24 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். ஈசான் கான் 4 ஓவர்களில் 28 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். ஹாங்காங்கின் தடுமாற்றம்: 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஹாங்காங் அணி பேட்டிங்கில் கடுமையாகத் தடுமாறியது. அந்த அணியின் முன்வரிசை வீரர்கள் வந்த வேகத்தில் நடையைக் கட்டினர். பாபர் ஹாயத் மட்டுமே அதிகபட்சமாக 39 ரன்கள் எடுத்தார், மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால், ஹாங்காங் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 94 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆப்கானிஸ்தான் பந்துவீச்சு தரப்பில், ஃபரூக்கி மற்றும் குலாப்தீன் நைப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு உதவினர். இந்த வெற்றியின் மூலம் ஆப்கானிஸ்தான் அணி ஆசிய கோப்பை தொடரை சிறப்பாகத் தொடங்கியுள்ளது.

Admin செப்டெம்பர் 10, 2025 0
ஆசியக் கோப்பை

ஆசியக் கோப்பை: இலங்கை அணி தொடர்பில் 3 முக்கிய அறிவிப்புகள்

ஆசிய கோப்பை கிரிக்கெட்

ஆசிய கோப்பை கிரிக்கெட்: முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான்- ஹாங்காங் மோதல்

கார்லஸ் அல்காரஸ்

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: கார்லஸ் அல்காரஸ் சாம்பியன் பட்டம் வென்று அசத்தல்!

ஐபிஎல் டிக்கெட் விலை உயர்வு: ரோஹித், கோலி,தோனியை மைதானத்தில் பார்க்க முடியுமா?

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) போட்டிகளை மைதானத்தில் நேரடியாகக் காணும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக, மத்திய அரசு ஐபிஎல் டிக்கெட்டுகளுக்கான ஜிஎஸ்டி வரியை 40% ஆக உயர்த்தியுள்ளது. இந்த புதிய வரி அமைப்பு செப்டம்பர் 22, 2025 முதல் அமலுக்கு வரும். புதன்கிழமை, ஏப்ரல் 3 அன்று அறிவிக்கப்பட்ட புதிய ஜிஎஸ்டி கட்டமைப்பு மாற்றத்தின்படி, ஐபிஎல் டிக்கெட்டுகள் இனி 28% வரியிலிருந்து 40% வரிக்கு உட்படுத்தப்படும். இந்த உயர்வின் காரணமாக, நாடு முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் கணிசமான விலை உயர்வை சந்திக்க நேரிடும். ₹500 டிக்கெட்: முன்பு 28% வரியுடன் ₹640 ஆக இருந்தது. புதிய 40% வரியுடன் ₹700 ஆக உயரும், அதாவது ₹60 கூடுதல். ₹1,000 டிக்கெட்: முன்பு 28% வரியுடன் ₹1,280 ஆக இருந்தது. புதிய 40% வரியுடன் ₹1,400 ஆக உயரும், அதாவது ₹120 கூடுதல். இது பயனுள்ள செலவில் 12% அதிகரிப்பு ஆகும். ₹2,000 டிக்கெட்: முன்பு 28% வரியுடன் ₹2,560 ஆக இருந்தது. புதிய 40% வரியுடன் ₹2,800 ஆக உயரும், அதாவது ₹240 கூடுதல். ஐபிஎல் ஏன் அதிக வரிப் பிரிவில்? இந்த புதிய ஜிஎஸ்டி கட்டமைப்பு, ஐபிஎல் டிக்கெட்டுகளை ஆடம்பரப் பொருட்கள், குதிரைப் பந்தய மைதானங்கள் (racetracks) மற்றும் சூதாட்ட விடுதிகள் (casinos) ஆகியவற்றுடன் ஒரே உயரிய ஜிஎஸ்டி பிரிவில் வைத்துள்ளது. இந்த புதிய வரி விகிதம், ஐபிஎல் மற்றும் பிற மதிப்புமிக்க விளையாட்டு நிகழ்வுகளை, வரலாற்று ரீதியாக ஆடம்பரமான அல்லது அத்தியாவசியமற்றவையாகக் கருதப்படும் தொழில்களுடன் இணைக்கிறது. விளையாட்டு பொழுதுபோக்குகளின் வரிவிதிப்பில் இது ஒரு குறிப்பிடத்தக்க மாற்றமாகும், இது போட்டிகளைக் காண்பதை புகையிலை போன்ற பொருட்களின் பயன்பாடு அல்லது பந்தயம் போன்ற சேவைகளுடன் பிணைக்கிறது. இந்த வரி உயர்வு, வர்த்தக ரீதியான போட்டிகளுக்கும் (commercial tournaments) அடிமட்ட விளையாட்டுப் போட்டிகளுக்கும் (grassroots sports) இடையே தெளிவான வேறுபாட்டை ஏற்படுத்துகிறது.  ஐபிஎல் மற்றும் பிற பிரீமியம் லீக்குகள் மட்டுமே 40% வரி விகிதத்தால் பாதிக்கப்படுகின்றன. வழக்கமான கிரிக்கெட் போட்டிகளுக்கான டிக்கெட்டுகளுக்கு இன்னும் 18% வரி மட்டுமே பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வரி உயர்வால், ரோஹித் ஷர்மா, விராட் கோலி, எம்.எஸ். தோனி போன்ற முன்னணி வீரர்களை மைதானத்தில் நேரடியாகக் காண்பது இனி ரசிகர்களுக்கு மேலும் செலவு பிடிக்கும் காரியமாக மாறும்.  

Admin செப்டெம்பர் 4, 2025 0
இலங்கை

நிஷங்க, அசலங்க அதிரடி - தொடரை வென்றது இலங்கை!

வாய்ப்பு கிடைக்காததால் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து இந்திய வீரர் புஜாரா ஓய்வு

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி

ஆசிய கோப்பை: இந்திய அணியின் பிளேயிங் லெவனை தேர்வு செய்த கவாஸ்கர்

ஒருநாள் தொடர்- தென் ஆப்பிரிக்கா அணியில் இணைந்த க்வேனா மபாகா

தென் ஆப்பிரிக்கா அணி, ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளது. முதலில் நடந்த டி20 தொடரை ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.  இதனை தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடர் இன்று தொடங்குகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் வேகப்பந்து வீச்சாளர் க்வேனா மபாகா தென் ஆப்பிரிக்கா அணியில் இணைந்துள்ளார். டி20 தொடரில் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தியதன் மூலம் இந்த வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது. அவர் 3 டி20 போட்டிகளில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Admin ஆகஸ்ட் 19, 2025 0
ஆசிய கோப்பை

ஆசிய கோப்பை: இந்திய அணியை தேர்வு செய்த ஹர்பஜன்

ஆசிய கோப்பை: கில்- ஜெய்ஸ்வாலுக்கு இடமில்லை.. முன்னாள் வீரர் அதிரடி

ஆசிய கோப்பை பாகிஸ்தான் அணியில் இருந்து நீக்கப்பட்ட பாபர் அசாம்

0 Comments