கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த காடாம்புலியூர் நெல்லித்தோப்பு கிராமத்தில் நிலத்தகராறு காரணமாக பெண் ஒருவர் கட்டிவைத்துத் தாக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இது தொடர்பாக ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் மூவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இதே சம்பவத்துடன் தொடர்புடைய மற்றொரு புகாரின் பேரிலும் வழக்குப்பதிவு செய்து காடாம்புலியூர் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லித்தோப்பு கிராமத்தைச் சேர்ந்த ராமர் (வயது 63) என்பவரின் சகோதரர்களான வைத்தியநாதன் மற்றும் சிங்காரவேல் ஆகியோர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டனர். விவசாயிகள் குடும்பத்தைச் சேர்ந்த இவர்களுக்குப் பொதுவான நிலம் ஒன்று உள்ளது. இந்த நிலத்தை பாகப்பிரிவினை செய்வது தொடர்பாக மூன்று பேரின் குடும்பத்தினருக்கும் இடையே நீண்ட நாட்களாகப் பிரச்சினை இருந்து வருகிறது.
இந்த நிலையில், வைத்தியநாதனின் மனைவி சின்னையாள் (47), பிரச்சினைக்குரிய நிலப்பகுதியில் வீடு கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளார். இதற்கு சிங்காரவேலின் மனைவி செல்வராணி (55) எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அப்போது சின்னையாள், அவரது மகள்களான ஜெயசித்ரா, ஜெயந்தி, அனுராதா ஆகியோர் சேர்ந்து செல்வராணியைத் தாக்கியுள்ளனர்.
தாக்குதலின் உச்சகட்டமாக, செல்வராணி அணிந்திருந்த சேலையை அவிழ்த்து, அவரது கை மற்றும் கழுத்து பகுதியுடன் சேர்த்து மரத்தில் கட்டிவைத்து அடித்து உதைத்துள்ளனர். மேலும், உருட்டு கட்டையாலும் தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதல் சம்பவத்தை செல்போனில் காணொளி எடுத்த நபரையும் அவர்கள் தாக்க முயன்றுள்ளனர். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதியைச் சேர்ந்த சில பெண்கள் ஓடிவந்து செல்வராணியை மீட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. செல்வராணியின் மகள் கஸ்தூரி அளித்த புகாரின் பேரில், காடாம்புலியூர் பொலிஸார் சின்னையாள் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர்களில் அனுராதா கைது செய்யப்பட்டுள்ளார். மற்ற 3 பேரையும் பொலிஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இதனிடையே, சின்னையாள் வீட்டின் அருகே நடந்து சென்ற ராமர் என்பவரையும் ஜெயந்தி, அனுராதா மற்றும் அனுராதாவின் மகன் வைத்தீஸ்வரன் ஆகியோர் வழிமறித்துத் தாக்கியுள்ளனர். இதுகுறித்து ராமர் அளித்த புகாரின் பேரிலும் காடாம்புலியூர் பொலிஸார் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜோதிடத்தில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படுபடும் புதன், ஆகஸ்ட் மாதத்தில் மகம் நட்சத்திரத்திற்கு செல்லவுள்ளார். அதுவும் இந்த மக நட்சத்திரத்திற்கு ஆகஸ்ட் 30 ஆம் தேதி செல்லவிருக்கிறார். இந்த மகம் நட்சத்திரத்தில் புதன் செப்டம்பர் 06 ஆம் தேதி வரை இருப்பார். நட்சத்திரங்களில் மகம் 10 ஆவது நட்சத்திரமாகும். இது முன்னோர்களைக் குறிக்கிறது. மகம் நட்சத்திரத்தின் அதிபதி கேது. புதன் கேதுவின் நட்சத்திரத்திற்கு செல்வதால், அதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும். அதில் சில ராசிக்காரர்களுக்கு மோசமாக இருந்தாலும், சிலருக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு புதனின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. புத்திசாலித்தனத்தால் பல வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். இதுவரை உணர்வுகளை மற்றவர்களிடம் தெரிவிக்காமல் மறைத்திருந்தால், இக்காலத்தில் வெளிப்படுத்துவீர்கள். உங்களின் தைரியம் அதிகரிக்கும். மனதில் பட்டதை மறைக்காமல் வெளிப்படையாக பேசுவீர்கள். உணர்ச்சி ரீதியாக சிறப்பாக உணர்வீர்கள். வியாபாரிகளுக்கு சிறப்பாக இருக்கும். எடுக்கும் வேலைகளில் வெற்றி கிடைக்கும். சிம்மம் சிம்ம ராசிக்காரர்களுக்கு புதனின் நட்சத்திர பெயர்ச்சியால் தொழில் ரீதியாக சிறப்பாக இருக்கும். அறிவாற்றல் மேம்படும். புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வீர்கள். உங்களின் பேச்சு மிகவும் சுவாரஸ்மாக இருக்கும். பேச்சால் பல வேலைகளை சிறப்பாக முடிப்பீர்கள். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். நிதி நிலை மேம்படும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தேவையற்ற விஷயங்களில் நுழைந்து மன அழுத்தப்படுவதைத் தவிர்த்திடுங்கள். மேலும் இக்காலத்தில் மன அழுத்தத்தைக் குறைக்க யோகா, உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள். விருச்சிகம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு புதனின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கப் போகிறது. புத்திசாலித்தனம் அதிகரிக்கும். பேச்சால் பல வேலைகளில் வெற்றி பெறுவீர்கள். நீண்ட காலமாக இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். நிதி நிலை நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் ரீதியாக பல சிறப்பான பலன்களைப் பெறுவீர்கள். தொழிலதிபர்கள் எதிர்காலத்தில் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும்.
கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, கோட்டை நீதவான் நீதிமன்றத்தைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நான்கு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த வாக்குமூலத்திற்குப் பிறகு, விக்ரமசிங்க கைது செய்யப்பட்டார். இதனையடுத்து, அவர் விரைவில் அவர் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அணிகளை அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்து வரும் நிலையில், இந்திய அணி நாளைய தினம் அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்புகள் உள்ளன. இந்நிலையில் இத்தொடருக்கான இந்திய அணியை முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கணித்துள்ளார். இதில் சஞ்சு சாம்சனை அணியில் சேர்க்காமல் விட்டுவிட்டு ஷ்ரேயாஸ் ஐயருக்கு இடம் வழங்கியுள்ளார். அதே நேரத்தில் அவர் தனது அணியில் சுப்மன் கில்லையும் சேர்த்துள்ளார். இந்த தொடருக்கான இந்திய அணியில் கில் இடம்பிடிக்க மாட்டார் என்று கூறப்படும் நிலையில் கில் நிச்சயமாக ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் கில் இடம்பிடிப்பார் என்று ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். ஹர்பஜன் சிங் தேர்வு செய்த இந்திய அணி: யஷஸ்வி ஜெய்ஸ்வால், அபிஷேக் சர்மா, சுப்மான் கில், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஹர்திக் பாண்ட்யா, ஷ்ரேயாஸ் ஐயர், வாஷிங்டன் சுந்தர், கேஎல் ராகுல்/ரிஷப் பந்த், ரியான் பராக், குல்தீப் யாதவ், அக்ஸர் படேல், முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங், அர்ஷ்தீப் பும்ரா.
பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று விபத்துக்குள்ளானதில் பாடசாலை மாணவர்கள் இருவர் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் 13 பேர் காயமடைந்துள்ளனர். குளியாப்பிட்டி, வில்பொல பாலத்திற்கு அருகில் இன்று (27) காலை விபத்து இடம்பெற்றுள்ளது. பாடசாலை வேனுடன் டிப்பர் ஒன்று நேருக்கு நேர் மோதியமையால் விபத்து சம்பவித்துள்ளது. பாடசாலை வேன் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். காயமடைந்த 13 மாணவர்கள், குளியாப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பில் குளியாப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவின் செப்டம்பர் மாதத்திற்கான உதவித்தொகை வெள்ளிக்கிழமை (12) அன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது. இந்த மாதம் மொத்தம் 1,421,574 குடும்பங்களுக்கு கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளன. இந்த கொடுப்பனவுகளுக்காக 11.2 பில்லியனுக்கும் அதிகமான ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பயனாளிகள் வெள்ளிக்கிழமை முதல் தங்களின் அஸ்வெசும நலன்புரி வங்கிக் கணக்குகளில் இருந்து நிதியைப் பெற்றுக்கொள்ள முடியும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
நேபாளத்தில் நடந்து வரும் அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்களுக்கு மத்தியில், நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் பெரும் குழப்பம் நிலவி வருகிறது. இந்தக் கலவரங்கள் மற்றும் தப்பியோட்டங்களின் போது, 7,000க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பித்துள்ளனர். மேற்கு நேபாளத்தில் உள்ள ஒரு சிறார் சீர்திருத்த இல்லத்தில் பாதுகாப்புப் படையினருடனான மோதலில் குறைந்தது ஐந்து சிறார் கைதிகள் உயிரிழந்துள்ளனர். நேபாளம் முழுவதும் நடந்து வரும் பாரிய அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்கள், பிரதம மந்திரி கே.பி. ஷர்மா ஓலியை செவ்வாய்க்கிழமை பதவி விலக கட்டாயப்படுத்தின. இதனால், மாவட்டங்கள் முழுவதும் ஒரு கடுமையான சட்டம் ஒழுங்கு சூழ்நிலை ஏற்பட்டது. இதனையடுத்து, நேபாள இராணுவம் புதன்கிழமை நாடு தழுவிய கட்டுப்பாட்டு உத்தரவுகளையும், அதைத் தொடர்ந்து ஊரடங்கு உத்தரவையும் பிறப்பித்தது. இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திக்கொண்டு, கைதிகள் சிறைச்சாலைகளில் இருந்து தப்பிக்க முயன்றனர். இது செவ்வாய்க்கிழமை முதல் பல சிறை வசதிகளில் மோதல்களுக்கு வழிவகுத்தது. நேபாளத்தின் பைஜ்நாத் கிராமப்புற நகராட்சி-3, பாங்கேவில் உள்ள நௌபஸ்தா மண்டல சிறைச்சாலையில் உள்ள நௌபஸ்தா சீர்திருத்த இல்லத்தில் செவ்வாய்க்கிழமை இரவு பாதுகாப்புப் படையினருடன் ஏற்பட்ட மோதலில் ஐந்து சிறார் கைதிகள் உயிரிழந்தனர் என்று "தி ரைசிங் நேபாளம்" செய்தித்தாள் தெரிவித்தது. கைதிகள் சீர்திருத்த இல்லத்தின் பாதுகாப்புப் படையினரின் ஆயுதங்களைக் கைப்பற்ற முயன்றபோது, காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஐந்து சிறார் கைதிகள் கொல்லப்பட்டனர் மற்றும் நான்கு பேர் பலத்த காயமடைந்தனர் என்று நௌபஸ்தா சிறார் சீர்திருத்த இல்ல அலுவலகத்தை மேற்கோள் காட்டி அந்த செய்தித்தாள் கூறியது. இந்தச் சம்பவத்தின் போது, அந்த சிறையில் இருந்த 585 கைதிகளில் 149 பேரும், சிறார் இல்லத்தில் இருந்த 176 கைதிகளில் 76 பேரும் தப்பிச் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இலண்டன்: மறைந்த பிரித்தானிய ராணியின் உறவினர் டியூக் ஆஃப் கென்ட்டின் மனைவியான டியூசெஸ் ஆஃப் கென்ட் (Duchess of Kent), தனது 92வது வயதில் காலமானார் என்று பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது. அவர் கென்சிங்டன் அரண்மனையில் உள்ள தனது இல்லத்தில் வியாழக்கிழமை மாலை அமைதியாக உயிர் நீத்ததாக பக்கிங்ஹாம் அரண்மனை அறிக்கையில் தெரிவித்துள்ளது. பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்டுள்ள ஆழ்ந்த இரங்கல் செய்தியில், "டியூசெஸ் ஆஃப் கென்ட் அரச குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களுடன் சேர்ந்து அவரது மறைவை அனுசரிக்கிறோம். அவர் தனது வாழ்நாள் முழுவதும் தொடர்பு கொண்டிருந்த அமைப்புகள் மீதான பற்று, இசை மீதான ஆர்வம் மற்றும் இளைஞர்கள் மீதான அவரது பரிவு ஆகியவற்றை நினைவு கூர்ந்து வருந்துகிறோம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவுக்குப் பிறகு அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினராக இருந்த டியூசெஸ், அக்டோபர் 2024 இல் சக்கர நாற்காலியில் தோன்றியது அரிதான நிகழ்வாக இருந்தது. அவரது நினைவாக பக்கிங்ஹாம் அரண்மனையில் யூனியன் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. கதரின், 92, விம்பிள்டன் இறுதிப் போட்டிகளில் தோற்றவர்களை, குறிப்பாக 1993 இல் கண்ணீருடன் இருந்த ஜனா நோவோட்னாவைத் தேற்றியதற்காகவும், பல ஆண்டுகளாக சாம்பியன்ஷிப் போட்டிகளில் கோப்பைகளை வழங்கியதற்காகவும் அறியப்பட்டவர். அவர் மிஸ்ஸிஸ் கென்ட் என்று அழைக்கப்பட விரும்பினார் மற்றும் தனது 'HRH' பட்டத்தை துறந்தார். ஒரு தசாப்தத்திற்கும் மேலாக ஹல்லில் உள்ள ஒரு அரசு ஆரம்பப் பள்ளியில் இசை ஆசிரியராக பணியாற்ற ராயல் வாழ்க்கையிலிருந்து விலகினார். கத்தோலிக்க மதத்தை தீவிரமாகப் பின்பற்றிய டியூசெஸ், 1994 ஆம் ஆண்டில் கத்தோலிக்க மதத்திற்கு மாறிய முதல் அரச குடும்ப உறுப்பினர் ஆவார். இது 300 ஆண்டுகளுக்கும் மேலாக அரச குடும்பத்தில் நடந்த முதல் மதமாற்றமாகும். அவருக்கு அரச குடும்ப உறுப்பினர்கள், மன்னர் மற்றும் ராணி உட்பட, கத்தோலிக்க இறுதிச் சடங்குகள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது நவீன பிரிட்டிஷ் வரலாற்றில் அரச குடும்ப உறுப்பினருக்காக நடத்தப்படும் முதல் கத்தோலிக்க இறுதிச் சடங்காக இருக்கும்.
Netflixஇல் அதிகம் பார்க்கப்பட்ட திரைப்படமாக KPop Demon Hunters பதிவாகியுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த ஜூன் மாதம் வெளியான இந்தத் திரைப்படம் 236 மில்லியனுக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது. KPop Demon Hunters திரைப்படத்தின் பாடல்களும் மக்களிடையே மிகவும் பிரபலமாகியுள்ளது. இம்மாதத் தொடக்கத்தில் Golden hit என்ற பாடல் Billboard Hot 100 தரவரிசையில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. திரைப்பபடம் உருவாக்கப்பட்ட விதம், கொரியக் கலாசாரத்தைச் சித்தரித்த முறை ஆகியவற்றைப் பலரும் பாராட்டியுள்ளனர். Netflix - முதல் ஐந்து இடங்களில் உள்ள திரைப்படங்களின் விவர் இதோ: 1) KPop Demon Hunters 2) Red Notice 3) Carry-On 4) Don't Look Up 5) The Adam Project