இலங்கை

ஜனாதிபதிகளின் சலுகைகளை நீக்கும் சட்டமூலம் நிறைவேற்றம்

Admin செப்டெம்பர் 10, 2025 0
ஜனாதிபதிகளின் சலுகைகளை நீக்கும் சட்டமூலம்

ஜனாதிபதியின் வரப்பிரசாதங்களை (ரத்து செய்தல்) சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு 150 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தச் சட்டமூலம் குறித்த விவாதம் மீதான வாக்கெடுப்பு இன்று (செப்டம்பர் 10, 2025) பிற்பகல் இடம்பெற்றது.

வாக்கெடுப்பில் பிரேரனைக்கு ஆதரவாக 151 வாக்குகளும், எதிராக 1 வாக்கும் அளிக்கப்பட்டன. 
நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க மாத்திரமே ஜனாதிபதியின் வரப்பிரசாதங்களை ரத்து செய்யும் சட்டமூலத்திற்கு எதிராக வாக்களித்திருந்தார்.

இந்த சட்டமூலம் தொடர்பான விவாதம் நேற்றைய தினம் இடம்பெறவிருந்தது. எனினும், நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய இன்று முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரையான காலப்பகுதியில் விவாதம் இடம்பெற்றிருந்தது.

விவாதத்தின் இறுதியில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, ஜனாதிபதியின் வரப்பிரசாதங்களை நீக்கும் சட்டமூலம் 150 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டது.

முன்னதாக, ஜனாதிபதியின் வரப்பிரசாதங்களை நீக்கும் சட்டமூலத்தின் சரத்துகள் அரசியலமைப்பின் எந்தவொரு பிரிவுகளுக்கும்  முரணானது இல்லை என உயர் நீதிமன்றம் வியாக்கியானம் அளித்துள்ளதாக சபாநாயகர் நேற்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

சட்டமூலம் ஜனாதிபதிகளின்-சலுகை
Popular post
புதன் நட்சத்திர பெயர்ச்சி - இந்த 3 ராசிகளுக்கு வெற்றியும், செல்வமும் குவியப்போகுது...

ஜோதிடத்தில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படுபடும் புதன், ஆகஸ்ட் மாதத்தில் மகம் நட்சத்திரத்திற்கு செல்லவுள்ளார். அதுவும் இந்த மக நட்சத்திரத்திற்கு ஆகஸ்ட் 30 ஆம் தேதி செல்லவிருக்கிறார். இந்த மகம் நட்சத்திரத்தில் புதன் செப்டம்பர் 06 ஆம் தேதி வரை இருப்பார். நட்சத்திரங்களில் மகம் 10 ஆவது நட்சத்திரமாகும். இது முன்னோர்களைக் குறிக்கிறது. மகம் நட்சத்திரத்தின் அதிபதி கேது.  புதன் கேதுவின் நட்சத்திரத்திற்கு செல்வதால், அதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும். அதில் சில ராசிக்காரர்களுக்கு மோசமாக இருந்தாலும், சிலருக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது.  ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு புதனின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. புத்திசாலித்தனத்தால் பல வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். இதுவரை உணர்வுகளை மற்றவர்களிடம் தெரிவிக்காமல் மறைத்திருந்தால், இக்காலத்தில் வெளிப்படுத்துவீர்கள். உங்களின் தைரியம் அதிகரிக்கும். மனதில் பட்டதை மறைக்காமல் வெளிப்படையாக பேசுவீர்கள். உணர்ச்சி ரீதியாக சிறப்பாக உணர்வீர்கள். வியாபாரிகளுக்கு சிறப்பாக இருக்கும். எடுக்கும் வேலைகளில் வெற்றி கிடைக்கும். சிம்மம் சிம்ம ராசிக்காரர்களுக்கு புதனின் நட்சத்திர பெயர்ச்சியால் தொழில் ரீதியாக சிறப்பாக இருக்கும். அறிவாற்றல் மேம்படும். புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வீர்கள். உங்களின் பேச்சு மிகவும் சுவாரஸ்மாக இருக்கும். பேச்சால் பல வேலைகளை சிறப்பாக முடிப்பீர்கள். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். நிதி நிலை மேம்படும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தேவையற்ற விஷயங்களில் நுழைந்து மன அழுத்தப்படுவதைத் தவிர்த்திடுங்கள். மேலும் இக்காலத்தில் மன அழுத்தத்தைக் குறைக்க யோகா, உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள். விருச்சிகம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு புதனின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கப் போகிறது. புத்திசாலித்தனம் அதிகரிக்கும். பேச்சால் பல வேலைகளில் வெற்றி பெறுவீர்கள். நீண்ட காலமாக இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். நிதி நிலை நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் ரீதியாக பல சிறப்பான பலன்களைப் பெறுவீர்கள். தொழிலதிபர்கள் எதிர்காலத்தில் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும்.

ரணில் கைது: நீதிமன்ற வளாகத்தில் கடும் பாதுகாப்பு

கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, கோட்டை நீதவான் நீதிமன்றத்தைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நான்கு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த வாக்குமூலத்திற்குப் பிறகு,   விக்ரமசிங்க கைது செய்யப்பட்டார். இதனையடுத்து, அவர் விரைவில் அவர் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆசிய கோப்பை: இந்திய அணியை தேர்வு செய்த ஹர்பஜன்

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அணிகளை அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்து வரும் நிலையில், இந்திய அணி நாளைய தினம் அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்புகள் உள்ளன.  இந்நிலையில் இத்தொடருக்கான இந்திய அணியை முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கணித்துள்ளார். இதில் சஞ்சு சாம்சனை அணியில் சேர்க்காமல் விட்டுவிட்டு ஷ்ரேயாஸ் ஐயருக்கு இடம் வழங்கியுள்ளார்.  அதே நேரத்தில் அவர் தனது அணியில் சுப்மன் கில்லையும் சேர்த்துள்ளார். இந்த தொடருக்கான இந்திய அணியில் கில் இடம்பிடிக்க மாட்டார் என்று கூறப்படும் நிலையில் கில் நிச்சயமாக ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் கில் இடம்பிடிப்பார் என்று ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். ஹர்பஜன் சிங் தேர்வு செய்த இந்திய அணி: யஷஸ்வி ஜெய்ஸ்வால், அபிஷேக் சர்மா, சுப்மான் கில், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஹர்திக் பாண்ட்யா, ஷ்ரேயாஸ் ஐயர், வாஷிங்டன் சுந்தர், கேஎல் ராகுல்/ரிஷப் பந்த், ரியான் பராக், குல்தீப் யாதவ், அக்ஸர் படேல், முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங், அர்ஷ்தீப் பும்ரா.

பாடசாலை வேன் விபத்து; இரு மாணவர்கள் உட்பட மூவர் பலி!

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று விபத்துக்குள்ளானதில் பாடசாலை மாணவர்கள் இருவர் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.  இந்த விபத்தில் 13 பேர் காயமடைந்துள்ளனர். குளியாப்பிட்டி, வில்பொல பாலத்திற்கு அருகில் இன்று (27) காலை விபத்து இடம்பெற்றுள்ளது.  பாடசாலை வேனுடன் டிப்பர் ஒன்று நேருக்கு நேர் மோதியமையால் விபத்து சம்பவித்துள்ளது.  பாடசாலை வேன் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.  காயமடைந்த 13 மாணவர்கள், குளியாப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  இந்த விபத்து தொடர்பில் குளியாப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கச்சதீவை இந்தியாவுக்கு விட்டுக்கொடுக்க மாட்டோம்: வெளிவிவகார அமைச்சர்

“கச்சதீவை ஒருபோதும் இந்தியாவுக்கு விட்டுக்கொடுக்க மாட்டோம்” என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.  கச்சதீவை மீட்டு, தமிழக கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைக்கு பிரதமர் மோடி தீர்வை வழங்க வேண்டும் என நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் அண்மையில் தெரிவித்திருந்தார்.  இதற்கு பதில் அளிக்கும் விதத்திலேயே, அமைச்சர் மேற்படி தெரிவித்தார்.  அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (27) நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகச் சந்திப்பில் இது தொடர்பில் கேள்விகள் கேட்கப்பட்டது.  அதனையடுத்து கருத்து தெரிவித்த அமைச்சர் விஜித ஹேரத், “தென்னிந்தியாவில் இது தேர்தல் காலம். இக்காலத்தில் ஒவ்வொருவரும் ஒன்றைக் கூடுவர். இதை நாம் பொருட்படுத்தத் தேவையில்லை.  “அரச மட்டத்தில் உத்தியோகபூர்வமாக எவரும் கருத்து வெளியிட்டிருந்தால் அது குறித்து கவனம் செலுத்தலாம். எனினும், கச்சதீவை இந்தியாவுக்கு நாம் ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம்” என அவர் மேலும் தெரிவித்தார். 

இலங்கை

View more
மாம்பழம்
இலங்கையில் இரண்டரை இலட்சத்திற்கு ஏலம் போன மாம்பழம்

மட்டக்களப்பு, தேற்றாத்தீவு பால்மணல்மேடு அருள்மிகு ஸ்ரீ பாலமுருகன் ஆலயத்தில் நடைபெற்ற மாம்பழத் திருவிழாவில், நேற்று இரவு மாம்பழம் ஒன்று இரண்டரை இலட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது. மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிக மதிப்பில் ஏலம்போன மாம்பழமாக இது பதிவாகியுள்ளது. ஆலயத்தின் வருடாந்த உற்சவம் நடைபெற்றுவரும் நிலையில், நேற்று மாலை மாம்பழத்திருவிழா சிறப்பாக இடம்பெற்றது. முருகப்பெருமானும் பிள்ளையாரும் மாம்பழத்தினைப் பெறுவதற்காக மேற்கொண்ட செயற்பாடுகளையும், தாய்தந்தையர்களே உலகம் என்பதை வெளிப்படுத்தும் வகையிலும் இந்தத் திருவிழா நடாத்தப்படுகின்றது. ஆலயத்தில் விசேட வழிபாடுகளைத் தொடர்ந்து வசந்த மண்டப பூஜை நடைபெற்று, சுவாமி உள்வீதியுலா மற்றும் வெளிவீதியுலா வந்த பின்னர் மாம்பழத் திருவிழா நடைபெற்றது. இதன்போது, திருவிழாவிற்குப் பயன்படுத்தப்பட்ட மாம்பழம் ஆலயத்தில் ஏலத்திற்கு விடப்பட்டது. இளையதம்பி தவாகரன் என்ற அடியார் சுமார் இரண்டரை இலட்சம் ரூபாய் ஏலத்தொகையினைக் கொடுத்து இந்த மாம்பழத்தை வாங்கிக்கொண்டார்.  

Admin செப்டெம்பர் 10, 2025 0

கொழும்பில் உள்ள அதிகாரப்பூர்வ இல்லத்தை காலி செய்யும் மஹிந்த ராஜபக்ஷ

ஜனாதிபதிகளின் சலுகைகளை நீக்கும் சட்டமூலம்

ஜனாதிபதிகளின் சலுகைகளை நீக்கும் சட்டமூலம் நிறைவேற்றம்

அஸ்வெசும கொடுப்பனவு

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் விசேட அறிவிப்பு

Rajitha Senaratne
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்குப் பிணை

முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்னவுக்கு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் இன்று (செப்டம்பர் 09) பிணை வழங்கியுள்ளது.  அவர் இன்று காலை கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னரே இந்த பிணை வழங்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன, கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.  முன்னதாக, ஓகஸ்ட் 29 அன்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டிருந்த சேனாரத்ன, இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட தனி வழக்கொன்றுடன் தொடர்புடையதாக செப்டம்பர் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். அவரை கைது செய்வதற்கான பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து, ஓகஸ்ட் 29 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.

Admin செப்டெம்பர் 9, 2025 0

பதின்ம வயதுச் சிறுமி பாலியல் வன்புணர்வு: காதலன் கைது

பிரதமர் பதவியில் இருந்து ஹரிணி நீக்கப்படுவாரா...  டில்வின் வெளியிட்ட தகவல்

சூதாட்ட மையத்தில் 15 பேர் கைது: மக்களுக்கு இடையூறு விளைவிப்பதாக முறைப்பாடு

யாழ்ப்பாணத்தில் பிறந்து 21 நாட்களேயான ஆண் குழந்தை உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் பிறந்து 21 நாட்களேயான ஆண் சிசு ஒன்று நேற்று ( 7) உயிரிழந்துள்ளது. சுன்னாகம் - சபாபதிப்பிள்ளை வீதி பகுதியைச் சேர்ந்த யசிந்தன் - லாவண்யா என்ற தம்பதிகளின் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. தாயார் குழந்தைக்கு பாலூட்டி உறங்க வைத்த பின்னர் மதியம் 1.30 மணியளவில் குழந்தையை தூக்கத்தில் இருந்து எழுப்பியபோது குழந்தை வாந்தியெடுத்துவிட்டு அசைவற்று காணப்பட்டது. இந்தநிலையில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை குழந்தை ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். சடலம் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.  

Admin செப்டெம்பர் 8, 2025 0

சட்டவிரோத மதுபான போத்தல்களுடன் சந்தேக நபர் ஹட்டனில் கைது

3500 கிலோகிராம் கழிவு தேயிலையை ஏற்றிச் சென்ற லொறியுடன் இருவர் கைது

ஜனாதிபதி அநுரகுமார தலைமையில் தேசிய மீலாதுன் நபி விழா

0 Comments