சினிமா

ரத்தம் குடிக்கும் காட்டேரியாக நடித்தது குறித்து நடிகை பளிச் பதில்

Admin செப்டெம்பர் 6, 2025 0

சென்னை: பிரபல இயக்குனர் பிரியதர்ஷன் மற்றும் நடிகை லிசி ஆகியோரின் மகளான நடிகை கல்யாணி பிரியதர்ஷன், சூப்பர் ஹீரோயினாக நடித்த 'லோகா சாப்டர் 1 - சந்திரா' திரைப்படம் திரைக்கு வந்த 10 நாட்களில் 100 கோடி வசூலை எட்டி சாதனை படைத்துள்ளது. 

நடிகர் துல்கர் சல்மான் தயாரிப்பில் உருவான இந்தப் படம், ரசிகர்களிடமிருந்து பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. இதில் துல்கர் சல்மான், கல்யாணி பிரியதர்ஷன், நஸ்லென், சந்து சலீம் குமார், இயக்குனர் டோமினிக் அருண், ஏ.ஜி.எஸ். ஐஸ்வர்யா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

விழாவில், கல்யாணி பிரியதர்ஷனிடம் ஒரு சுவாரஸ்யமான கேள்வி கேட்கப்பட்டது. "இந்த சின்ன வயதிலேயே ரத்தம் குடிக்கும் காட்டேரியாகவும், ஆக்ஷன் காட்சிகளிலும் தைரியமாக நடித்துள்ளீர்களே! வருங்காலத்தில் உங்களது கணவர் படத்தை பார்த்தால் எப்படி உணர்வார்? அதைப்பற்றி நினைத்து பார்த்தீர்களா?" என்பதே அக்கேள்வி.

இதற்குப் பதிலளித்த கல்யாணி பிரியதர்ஷன், "அதைப்பற்றி நான் நினைத்து பார்க்கவில்லை" என்று கூறினார். மேலும், "அப்பாவிடம் சொன்ன போது கூட, 'நீ ஆக்ஷன் காட்சியில் நடிக்க போகிறாயா? கால், கையெல்லாம் ஒழுங்கா பார்த்துக்கொள்' என்று மட்டும்தான் சொன்னார். அதை தாண்டி நான் எதையும் எதிர்பார்க்கவில்லை" என்று தனது தந்தையின் எளிமையான பதிலையும் பகிர்ந்துகொண்டார்.

படத்தின் பிரம்மாண்ட வெற்றி குறித்துப் பேசிய கல்யாணி, "படத்துக்கு இந்த அளவுக்கு பாராட்டும் வெற்றியும் கிடைக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை. ₹100 கோடி வசூலை படம் பெற்றுள்ளது. இதற்கு நான் மட்டும் காரணம் அல்ல. ஒட்டு மொத்த படக்குழுவினர் அனைவரது உழைப்பும்தான் காரணம்" என்று பணிவுடன் தெரிவித்தார்.

'லோகா சாப்டர் 1 - சந்திரா' திரைப்படம், கல்யாணி பிரியதர்ஷனுக்கு ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமைந்துள்ளதுடன், அவரது நடிப்பும் ஆக்ஷன் காட்சிகளும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Tags

கல்யாணி-பிரியதர்ஷன்
Popular post
புதன் நட்சத்திர பெயர்ச்சி - இந்த 3 ராசிகளுக்கு வெற்றியும், செல்வமும் குவியப்போகுது...

ஜோதிடத்தில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படுபடும் புதன், ஆகஸ்ட் மாதத்தில் மகம் நட்சத்திரத்திற்கு செல்லவுள்ளார். அதுவும் இந்த மக நட்சத்திரத்திற்கு ஆகஸ்ட் 30 ஆம் தேதி செல்லவிருக்கிறார். இந்த மகம் நட்சத்திரத்தில் புதன் செப்டம்பர் 06 ஆம் தேதி வரை இருப்பார். நட்சத்திரங்களில் மகம் 10 ஆவது நட்சத்திரமாகும். இது முன்னோர்களைக் குறிக்கிறது. மகம் நட்சத்திரத்தின் அதிபதி கேது.  புதன் கேதுவின் நட்சத்திரத்திற்கு செல்வதால், அதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும். அதில் சில ராசிக்காரர்களுக்கு மோசமாக இருந்தாலும், சிலருக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது.  ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு புதனின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. புத்திசாலித்தனத்தால் பல வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். இதுவரை உணர்வுகளை மற்றவர்களிடம் தெரிவிக்காமல் மறைத்திருந்தால், இக்காலத்தில் வெளிப்படுத்துவீர்கள். உங்களின் தைரியம் அதிகரிக்கும். மனதில் பட்டதை மறைக்காமல் வெளிப்படையாக பேசுவீர்கள். உணர்ச்சி ரீதியாக சிறப்பாக உணர்வீர்கள். வியாபாரிகளுக்கு சிறப்பாக இருக்கும். எடுக்கும் வேலைகளில் வெற்றி கிடைக்கும். சிம்மம் சிம்ம ராசிக்காரர்களுக்கு புதனின் நட்சத்திர பெயர்ச்சியால் தொழில் ரீதியாக சிறப்பாக இருக்கும். அறிவாற்றல் மேம்படும். புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வீர்கள். உங்களின் பேச்சு மிகவும் சுவாரஸ்மாக இருக்கும். பேச்சால் பல வேலைகளை சிறப்பாக முடிப்பீர்கள். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். நிதி நிலை மேம்படும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தேவையற்ற விஷயங்களில் நுழைந்து மன அழுத்தப்படுவதைத் தவிர்த்திடுங்கள். மேலும் இக்காலத்தில் மன அழுத்தத்தைக் குறைக்க யோகா, உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள். விருச்சிகம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு புதனின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கப் போகிறது. புத்திசாலித்தனம் அதிகரிக்கும். பேச்சால் பல வேலைகளில் வெற்றி பெறுவீர்கள். நீண்ட காலமாக இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். நிதி நிலை நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் ரீதியாக பல சிறப்பான பலன்களைப் பெறுவீர்கள். தொழிலதிபர்கள் எதிர்காலத்தில் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும்.

ரணில் கைது: நீதிமன்ற வளாகத்தில் கடும் பாதுகாப்பு

கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, கோட்டை நீதவான் நீதிமன்றத்தைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நான்கு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த வாக்குமூலத்திற்குப் பிறகு,   விக்ரமசிங்க கைது செய்யப்பட்டார். இதனையடுத்து, அவர் விரைவில் அவர் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆசிய கோப்பை: இந்திய அணியை தேர்வு செய்த ஹர்பஜன்

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அணிகளை அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்து வரும் நிலையில், இந்திய அணி நாளைய தினம் அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்புகள் உள்ளன.  இந்நிலையில் இத்தொடருக்கான இந்திய அணியை முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கணித்துள்ளார். இதில் சஞ்சு சாம்சனை அணியில் சேர்க்காமல் விட்டுவிட்டு ஷ்ரேயாஸ் ஐயருக்கு இடம் வழங்கியுள்ளார்.  அதே நேரத்தில் அவர் தனது அணியில் சுப்மன் கில்லையும் சேர்த்துள்ளார். இந்த தொடருக்கான இந்திய அணியில் கில் இடம்பிடிக்க மாட்டார் என்று கூறப்படும் நிலையில் கில் நிச்சயமாக ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் கில் இடம்பிடிப்பார் என்று ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். ஹர்பஜன் சிங் தேர்வு செய்த இந்திய அணி: யஷஸ்வி ஜெய்ஸ்வால், அபிஷேக் சர்மா, சுப்மான் கில், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஹர்திக் பாண்ட்யா, ஷ்ரேயாஸ் ஐயர், வாஷிங்டன் சுந்தர், கேஎல் ராகுல்/ரிஷப் பந்த், ரியான் பராக், குல்தீப் யாதவ், அக்ஸர் படேல், முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங், அர்ஷ்தீப் பும்ரா.

பாடசாலை வேன் விபத்து; இரு மாணவர்கள் உட்பட மூவர் பலி!

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று விபத்துக்குள்ளானதில் பாடசாலை மாணவர்கள் இருவர் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.  இந்த விபத்தில் 13 பேர் காயமடைந்துள்ளனர். குளியாப்பிட்டி, வில்பொல பாலத்திற்கு அருகில் இன்று (27) காலை விபத்து இடம்பெற்றுள்ளது.  பாடசாலை வேனுடன் டிப்பர் ஒன்று நேருக்கு நேர் மோதியமையால் விபத்து சம்பவித்துள்ளது.  பாடசாலை வேன் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.  காயமடைந்த 13 மாணவர்கள், குளியாப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  இந்த விபத்து தொடர்பில் குளியாப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கச்சதீவை இந்தியாவுக்கு விட்டுக்கொடுக்க மாட்டோம்: வெளிவிவகார அமைச்சர்

“கச்சதீவை ஒருபோதும் இந்தியாவுக்கு விட்டுக்கொடுக்க மாட்டோம்” என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.  கச்சதீவை மீட்டு, தமிழக கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைக்கு பிரதமர் மோடி தீர்வை வழங்க வேண்டும் என நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் அண்மையில் தெரிவித்திருந்தார்.  இதற்கு பதில் அளிக்கும் விதத்திலேயே, அமைச்சர் மேற்படி தெரிவித்தார்.  அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (27) நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகச் சந்திப்பில் இது தொடர்பில் கேள்விகள் கேட்கப்பட்டது.  அதனையடுத்து கருத்து தெரிவித்த அமைச்சர் விஜித ஹேரத், “தென்னிந்தியாவில் இது தேர்தல் காலம். இக்காலத்தில் ஒவ்வொருவரும் ஒன்றைக் கூடுவர். இதை நாம் பொருட்படுத்தத் தேவையில்லை.  “அரச மட்டத்தில் உத்தியோகபூர்வமாக எவரும் கருத்து வெளியிட்டிருந்தால் அது குறித்து கவனம் செலுத்தலாம். எனினும், கச்சதீவை இந்தியாவுக்கு நாம் ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம்” என அவர் மேலும் தெரிவித்தார். 

சினிமா

View more
நடிகை ஷில்பா ஷெட்டி
நடிகை ஷில்பா ஷெட்டி தனது நட்சத்திர ஹேட்டலை மூடுகிறாரா?

மும்பை: பாலிவுட்டின் முன்னணி நடிகையும், தொழில் அதிபருமான ஷில்பா ஷெட்டி, தனது நட்சத்திர ஹேட்டலை மூடப்போவதாக வெளியான தகவல்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை என்று திட்டவட்டமாக மறுத்துள்ளார். மாறாக, அவர் தனது தொழிலை விரிவுபடுத்தும் நோக்கில், புதிய உணவகங்களைத் திறக்க திட்டமிட்டுள்ளார். மும்பையின் பாந்த்ரா பகுதியில் ஷில்பா ஷெட்டிக்கு சொந்தமான நட்சத்திர ஹேட்டல் செயல்பட்டு வருகிறது. சமீபத்தில், அவரது கணவரின் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக, இந்த ஹேட்டலை இழுத்து மூட ஷில்பா ஷெட்டி முடிவு செய்துள்ளதாக சமூக வலைத்தளங்களிலும், சில ஊடகங்களிலும் செய்திகள் பரவின. ஆனால், இந்த வதந்திகளை ஷில்பா ஷெட்டி கடுமையாக மறுத்துள்ளார். "எனது நட்சத்திர ஹேட்டலை மூடப் போவதாக வரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கிறது, அதேவேளை சிரிப்பாகவும் வருகிறது. இந்த தகவலில் எந்த உண்மையும் கிடையாது" என்று அவர் கூறியுள்ளார். மேலும், அவர் தனது தொழில் திட்டங்கள் குறித்து விளக்கமளித்துள்ளார். "நட்சத்திர ஹேட்டல் செயல்பட்டு வரும் இடத்துக்கு அருகே புதிதாக தென்னிந்திய உணவுகள் சுடச்சுட கிடைக்கும் வகையில் ஒரு புதிய உணவகத்தை திறக்க முடிவு செய்திருக்கிறோம். அதுமட்டுமல்லாமல், எனது ஹேட்டலின் புதிய கிளை ஜுகு பகுதியில் தொடங்கவும் திட்டமிட்டுள்ளோம்" என்று அவர் தெரிவித்துள்ளார். "இப்படி தொழிலின் அடுத்த கட்டத்தை நோக்கி பயணிக்கும் எங்களிடம் இப்படி கேட்கலாமா?" என்று செல்லமாக கோபித்துக்கொண்டார் ஷில்பா ஷெட்டி. இதன் மூலம், தனது ஓட்டலை மூடும் எண்ணம் இல்லை என்பதையும், மாறாக விரிவாக்கப் பணிகளில் ஈடுபட்டுள்ளதையும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

Admin செப்டெம்பர் 6, 2025 0

ரத்தம் குடிக்கும் காட்டேரியாக நடித்தது குறித்து நடிகை பளிச் பதில்

நடிகைகளை வைத்து விபசாரம் நடத்திய நடிகை கைது: பரபரப்பு சம்பவம்

Box Office

சிவகார்த்திகேயனின் 'மதராசி' முதல் நாள் வசூல் விவரம்

Madharaasi Review: 'மதராசி' திரைப்பட விமர்சனம்

ஏ.ஆர். முருகதாஸின் இயக்கத்தில் வெளிவந்துள்ள 'மதராசி' திரைப்படம், நீண்ட கால மந்தநிலைக்குப் பிறகு ஒரு வலுவான மறுபிரவேசமாக அமைகிறது.  "தீனா, ரமணா, கஜினி, துப்பாக்கி, கத்தி" போன்ற வெற்றிப் படங்களைக் கொடுத்த முருகதாஸ், இன்றும் தனது திறமையைக் கைவிடவில்லை என்பதை 'மதராசி' உறுதிப்படுத்துகிறது.  சிவகார்த்திகேயன் ஒரு நடிகராக தனது பரிணாம வளர்ச்சியை இத்திரைப்படத்தில் வெளிப்படுத்துகிறார், அதே சமயம் வித்யுத் ஜம்வால் தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து உள்ளார். கதைக்களம்: அமைதியான இரவில், தமிழ்நாடு இந்தியாவிலேயே 'துப்பாக்கி தலைநகராக' மாற்றுவதற்கான ஒரு கொடூரமான திட்டம் தீட்டப்படுகிறது, அங்கு துப்பாக்கிகள் நிறைந்த லாரிகள் காவல்துறை உயர் அதிகாரிகளால் சூழப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் முக்கிய வில்லனாக விராட் (வித்யுத் ஜம்வால்) திகழ்கிறார். அவரது தோற்றமே திகிலூட்டுகிறது.  இதற்கு நேர்மாறாக, சிவகார்த்திகேயனின் ரகு, காதலில் தோல்வியுற்று, மதுபோதையில் கூட்டத்தின் முன் நடனமாடிப் பாடுகிறார். இந்த 'வித்தியாசமான' தொடக்கமாக அமைகின்றது. ரகு, மாலதி (ருக்மிணி வசந்த்) மீதான காதலால் ஏற்பட்ட மன உளைச்சலில் தன் வாழ்க்கையை முடித்துக்கொள்ள நினைக்கிறார். போலீஸ் அதிகாரி பிரேம் (பிஜு மேனன்), வில்லன்களின் கூடாரத்திற்கு ஒரு தற்கொலை மிஷனுக்கு யாராவது முட்டாள் தேவை என்று தேடுகிறார். இந்த இருவரின் தேவைகளும் ஒருமிக்கும்போது, படம் ஒரு அதிரடியாக மாறுகிறது. நடிப்பு: வித்யுத் ஜம்வால் விராட் என்ற முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் தனது முத்திரையைப் பதித்து, முழுப் படத்தின் கவனத்தையும் ஈர்க்கிறார். அவரது சண்டைக் காட்சிகளில் அவர் சிறந்து விளங்குகிறார். சிவகார்த்திகேயன் ஒரு அதிரடி ஹீரோவாக தனது வளர்ச்சியை 'மதராசி'யில் வெளிப்படுத்துகிறார்.  ருக்மிணி வசந்த் மாலதி கதாபாத்திரத்தில் ஒரு அற்புதமான நடிப்பை வழங்கியுள்ளார். அவர் துயரில் உள்ள ஒரு பெண்ணாக இல்லாமல், படத்தின் கதையை நகர்த்தும் முக்கிய காரணியாக இருக்கிறார். பிஜு மேனன் உறுதியான அதிகாரி பிரேம் கதாபாத்திரத்தில் தனது இருப்பை உறுதிப்படுத்துகிறார். ஷபீர் கல்லாரக்கல் மற்றொரு வில்லனாக மிரட்டுகிறார். இயக்கம்:  'மதராசி' திரைப்படம் முருகதாஸின் முந்தைய வெற்றிப் படங்களான 'துப்பாக்கி' மற்றும் 'ரமணா'வின் சில பகுதிகளை நினைவுபடுத்துகிறது.  'துப்பாக்கி'யின் இடைவேளைக்கு முந்தைய பிரபலமான காட்சி போல, 'மதராசி'யிலும் பல இடங்களில், துப்பாக்கிகள், ஏறக்குறைய ஒரே நேரத்தில் சுடும் காட்சிகள் என, அவரது சிறந்த படைப்புகளின் ஒரு காட்சித் தொகுப்பாக இத்திரைப்படம் இருக்கிறது. சிவகார்த்திகேயனின் நகைச்சுவை உணர்வு 'ரமணா' வை நினைவுப்படுத்துகின்றது.  

Admin செப்டெம்பர் 5, 2025 0
மெஹ்ரின் பிர்சாடா

ஜெயலலிதா, குஷ்பு இடத்துக்கு வர எதற்கும் தயார்: நடிகை அதிரடி பேச்சு

சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ ஆடியோ லான்ச் அப்டேட்!

விமர்சனங்கள் நன்றாக இருந்தால் திரையரங்குக்கு வந்து ‘பரதா’ பாருங்கள்!

‘கூலி’ திரைப்படத்தில் ரசிகர்களின் கவனம் ஈர்த்த ரச்சிதா ராம்!

ரஜினிகாந்த் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியான ‘கூலி’ திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.    இத்திரைப்படத்தில் நாகர்ஜூனா, உபேந்திரா, சௌபின் சாஹிர், சத்யராஜ், ஸ்ருதிஹாசன், இவர்களுடன் சிறப்பு வேடத்தில் ஆமிர் கான் மற்றும் ஒரு குத்து பாடலுக்கு பூஜா ஹெக்டே என நட்சத்திர பட்டாளமே நடித்திருந்ததால், படத்திற்கு மாஸ் ஓபனிங் கிடைத்தது.    சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்த இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.    படம் வெளியாகி 4 நாட்கள் கடந்த நிலையில் முதல் நாளில் மட்டும் உலகம் முழுவதும் ரூ.151 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக படத் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.    இதுவரை ரூ.300கோடிக்கும்  மேலாக வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் ரூ.400 கோடியை நெருங்கவுள்ளது.    இதனிடையே இப்படம் மூலம் ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளார் நடிகை ரச்சிதா ராம். அண்மையில் ரஜினியுடன் எடுத்திருந்த புகைப்படத்தை தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்து மகிழ்ந்திருந்தார்.   இந்த நிலையில், தனது கதாபாத்திரத்திற்கு கிடைத்த வரவேற்பிற்கு நன்றி கூறி பதிவிட்டிருக்கிறார் ரச்சிதா ராம்.    அவர் வெளியிட்டுள்ள பதிவில், “என் கதாபாத்திரத்திற்கு கிடைத்த விமர்சனங்களாலும் அன்பாலும் நான் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறேன். மீடியாக்கள், விமர்சகர்கள், ட்ரோல்கள் மற்றும் மீம் கிரியேட்டர்கள் என அனைவருக்கும் நன்றி.    “என் மீது நம்பிக்கை வைத்து இந்த வாய்ப்பை கொடுத்த லோகேஷ் கனகராஜுக்கு ஸ்பெஷல் நன்றி. லெஜண்ட்ஸுகளுடன் வேலை பார்த்தது மறக்க முடியாத அனுபவம். பட வெற்றிக்கு குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.  

Admin ஆகஸ்ட் 18, 2025 0

இளம் தெலுங்கு நடிகைக்கு தமிழில் குவியும் வாய்ப்புகள்

0 Comments