விளையாட்டு

வாய்ப்பு கிடைக்காததால் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து இந்திய வீரர் புஜாரா ஓய்வு

Admin ஆகஸ்ட் 24, 2025 0

இந்திய அணியின் நட்சத்திர வீரர் புஜாரா, அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார். 37 வயதான புஜாரா இந்திய அணிக்காக 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 7195 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் 19 சதங்களும், 35 அரை சதங்களும் அடங்கும்.

புஜாராவின் சராசரி 43 என்று அளவில் இருக்கின்றது.  இதே போன்ற புஜாரா ஐந்து ஒருநாள் போட்டிகளில் விளையாடி மொத்தமாகவே 51 ரன்கள் தான் அடித்து இருக்கின்றார். இந்திய அணிக்காக 2010 ஆம் ஆண்டு பெங்களூரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக புஜாரா அறிமுகமானார்.

அதேபோன்று தனது கடைசி டெஸ்ட் போட்டியும் 2023 ஆம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக லண்டன் ஓவல் மைதானத்தில் விளையாடினார். 

தனது ஓய்வு குறித்து உருக்கத்துடன் பதிவிட்டுள்ள புஜாரா, "ராஜ்கோட்டின் சிறு பையனாக பெற்றோர் உடன் இணைந்து நட்சத்திரத்தை அடைய என் இலக்கை நிர்ணயித்து இந்திய அணியில் இடம்பெற வேண்டும் என்று ஒவ்வொரு நாளும் கனவு கண்டேன்.

ஆனால் இந்த விளையாட்டு எனக்கு இவ்வளவு நல்ல விஷயங்களை கொடுக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. எல்லையற்ற வாய்ப்புகள் எல்லையற்ற அனுபவங்கள் அன்பு பாசம் என அனைத்தையும் இந்த கிரிக்கெட் வழங்கி இருக்கிறது. 

இந்திய ஜெர்சியை அணிந்து ஒவ்வொரு முறையும் தேசிய கீதத்தை பாடும்போது, என்னுடைய சிறந்த செயல்பாட்டை நாட்டிற்காக வழங்கி இருக்கின்றேன். நான் என்ன நினைக்கின்றேன் என்பதை வார்த்தைகளால் சொல்வது மிகவும் கடினம். 

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக முடிவு எடுத்துள்ளேன். எனக்கு வாய்ப்பு வழங்கிய பிசிசிஐ, சௌராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் என அனைவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்” என்று புஜாரா கூறியுள்ளார்.

Tags

Cheteshwar-Pujara cricket Indian-cricket
Popular post
புதன் நட்சத்திர பெயர்ச்சி - இந்த 3 ராசிகளுக்கு வெற்றியும், செல்வமும் குவியப்போகுது...

ஜோதிடத்தில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படுபடும் புதன், ஆகஸ்ட் மாதத்தில் மகம் நட்சத்திரத்திற்கு செல்லவுள்ளார். அதுவும் இந்த மக நட்சத்திரத்திற்கு ஆகஸ்ட் 30 ஆம் தேதி செல்லவிருக்கிறார். இந்த மகம் நட்சத்திரத்தில் புதன் செப்டம்பர் 06 ஆம் தேதி வரை இருப்பார். நட்சத்திரங்களில் மகம் 10 ஆவது நட்சத்திரமாகும். இது முன்னோர்களைக் குறிக்கிறது. மகம் நட்சத்திரத்தின் அதிபதி கேது.  புதன் கேதுவின் நட்சத்திரத்திற்கு செல்வதால், அதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும். அதில் சில ராசிக்காரர்களுக்கு மோசமாக இருந்தாலும், சிலருக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது.  ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு புதனின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. புத்திசாலித்தனத்தால் பல வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். இதுவரை உணர்வுகளை மற்றவர்களிடம் தெரிவிக்காமல் மறைத்திருந்தால், இக்காலத்தில் வெளிப்படுத்துவீர்கள். உங்களின் தைரியம் அதிகரிக்கும். மனதில் பட்டதை மறைக்காமல் வெளிப்படையாக பேசுவீர்கள். உணர்ச்சி ரீதியாக சிறப்பாக உணர்வீர்கள். வியாபாரிகளுக்கு சிறப்பாக இருக்கும். எடுக்கும் வேலைகளில் வெற்றி கிடைக்கும். சிம்மம் சிம்ம ராசிக்காரர்களுக்கு புதனின் நட்சத்திர பெயர்ச்சியால் தொழில் ரீதியாக சிறப்பாக இருக்கும். அறிவாற்றல் மேம்படும். புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வீர்கள். உங்களின் பேச்சு மிகவும் சுவாரஸ்மாக இருக்கும். பேச்சால் பல வேலைகளை சிறப்பாக முடிப்பீர்கள். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். நிதி நிலை மேம்படும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தேவையற்ற விஷயங்களில் நுழைந்து மன அழுத்தப்படுவதைத் தவிர்த்திடுங்கள். மேலும் இக்காலத்தில் மன அழுத்தத்தைக் குறைக்க யோகா, உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள். விருச்சிகம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு புதனின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கப் போகிறது. புத்திசாலித்தனம் அதிகரிக்கும். பேச்சால் பல வேலைகளில் வெற்றி பெறுவீர்கள். நீண்ட காலமாக இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். நிதி நிலை நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் ரீதியாக பல சிறப்பான பலன்களைப் பெறுவீர்கள். தொழிலதிபர்கள் எதிர்காலத்தில் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும்.

ரணில் கைது: நீதிமன்ற வளாகத்தில் கடும் பாதுகாப்பு

கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, கோட்டை நீதவான் நீதிமன்றத்தைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நான்கு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த வாக்குமூலத்திற்குப் பிறகு,   விக்ரமசிங்க கைது செய்யப்பட்டார். இதனையடுத்து, அவர் விரைவில் அவர் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிறைக்கு போவதை தவிர்க்க 4 ஆண்டுகளில் 3 முறை கர்ப்பம் தரித்த பெண்!

சீனாவின் ஷான்சி மாகாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு, மோசடி வழக்கில் 2020ஆம் ஆண்டில் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது அவர் கர்ப்பமாக இருந்ததால், சிறைக்கு வெளியே தண்டனை அனுபவிக்க அனுமதிக்கப்பட்டார். இப்படி ஒரு வசதி இருப்பதைப் பயன்படுத்தி, ஒவ்வொரு முறையும் தனது மகப்பேறு காலம் முடிவடையும்போது அவர் மீண்டும் மீண்டும் கர்ப்பம் தரித்து வந்துள்ளார். இவ்வாறு, அவர் கடந்த 4 ஆண்டுகளில் 3 முறை கர்ப்பம் தரித்து சிறைக்கு போவதை தவிர்த்து வந்துள்ளார். இந்நிலையில், இந்து தொடர்பில் நடத்திய விசாரணையில், சிறைக்கு செல்வதை தவிர்க்க அவர் அவ்வாறு செய்வது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவரை கைது செய்து பொலிஸார் சிறையில் அடைத்தனர். அப்பெண், தான் பெற்ற 3 குழந்தைகளில் 2 குழந்தைகளை விவாகரத்தான கணவரிடமும், மேலும் ஒரு குழந்தையை அவரது சகோதரரிடமும் கொடுத்துள்ளார். சீனாவின் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி, ஒரு பெண் குற்றவாளி கர்ப்பமாக இருந்தால் அல்லது ஒரு குழந்தைக்கு பாலூட்டினால் அவருக்கு வீட்டுக் காவல் வழங்கப்படுகிறது. 

நடிகர் விஜய்யின் கட்சி கொடிக்கம்பம் சாய்ந்து விழுந்ததில் கார் நொறுங்கியது!

நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகத்தின் 2ஆவது மாநாடு, மதுரையில் நாளை வியாழக்கிழமை (21) நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளின் கட்சித் தொண்டர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மதுரை மாநாட்டு திடலில் த.வெ.க.வின் 100 அடி கொடிக்கம்பத்தை இன்று (20) நட ஏற்பாடு செய்யப்பட்டது. இதனால், கிரேன் மூலம் கொடிக்கம்பம் நிறுத்தும் பணி நடைபெற்று வந்தது. அப்போது, யாரும் எதிர்பாராத நேரத்தில், கிரேனின் பெல்ட் திடீரென அறுந்ததில், கொடிக்கம்பம் சாய்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது. கொடிக்கம்பம் சாய்ந்து கார் ஒன்றின் மீது விழுந்ததால், கார் சுக்கு நூறாக நொறுங்கியது. இந்த விபத்தால் மதுரை மாநாட்டு திடலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விபத்தில் யாருக்கும் உயிர் சேதம் இல்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கைக்கு வந்த 15 வயது துணை விமானி!

உலகைச் சுற்றி வந்த இளைய துணை விமானியாக மாறுவதற்கான வரலாற்று முயற்சியில் இறங்கியுள்ள அவுஸ்திரேலியா - பிரிஸ்பேனைச் சேர்ந்த 15 வயதான பைரல் வொல்லர் (Byron Waller) இலங்கை வந்துள்ளார். கொழும்பு, இரத்மலானை விமான நிலையத்தை நேற்று முன்தினம் (17)  வந்தடைந்த அவரை, விமான நிலைய அதிகாரிகள் வரவேற்றனர். இந்தியப் பெருங்கடலில் 11 மணி நேர விமானப் பயணத்திற்குப் பின்னர் நேற்று முன்தினம் பைரன் வாலர் விமான நிலையத்தை வந்தடைந்ததார். பைரன், 45,000 கிலோ மீட்டர்கள், 7 கண்டங்களிலும் 30 நாடுகளை சுற்றிவர சுமார் 2 மாதங்கள் எடுக்கும் ஒரு பயணத்தை மேற்கொள்கிறார். 

விளையாட்டு

View more
வாய்ப்பு கிடைக்காததால் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து இந்திய வீரர் புஜாரா ஓய்வு

இந்திய அணியின் நட்சத்திர வீரர் புஜாரா, அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார். 37 வயதான புஜாரா இந்திய அணிக்காக 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 7195 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் 19 சதங்களும், 35 அரை சதங்களும் அடங்கும். புஜாராவின் சராசரி 43 என்று அளவில் இருக்கின்றது.  இதே போன்ற புஜாரா ஐந்து ஒருநாள் போட்டிகளில் விளையாடி மொத்தமாகவே 51 ரன்கள் தான் அடித்து இருக்கின்றார். இந்திய அணிக்காக 2010 ஆம் ஆண்டு பெங்களூரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக புஜாரா அறிமுகமானார். அதேபோன்று தனது கடைசி டெஸ்ட் போட்டியும் 2023 ஆம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக லண்டன் ஓவல் மைதானத்தில் விளையாடினார்.  தனது ஓய்வு குறித்து உருக்கத்துடன் பதிவிட்டுள்ள புஜாரா, "ராஜ்கோட்டின் சிறு பையனாக பெற்றோர் உடன் இணைந்து நட்சத்திரத்தை அடைய என் இலக்கை நிர்ணயித்து இந்திய அணியில் இடம்பெற வேண்டும் என்று ஒவ்வொரு நாளும் கனவு கண்டேன். ஆனால் இந்த விளையாட்டு எனக்கு இவ்வளவு நல்ல விஷயங்களை கொடுக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. எல்லையற்ற வாய்ப்புகள் எல்லையற்ற அனுபவங்கள் அன்பு பாசம் என அனைத்தையும் இந்த கிரிக்கெட் வழங்கி இருக்கிறது.  இந்திய ஜெர்சியை அணிந்து ஒவ்வொரு முறையும் தேசிய கீதத்தை பாடும்போது, என்னுடைய சிறந்த செயல்பாட்டை நாட்டிற்காக வழங்கி இருக்கின்றேன். நான் என்ன நினைக்கின்றேன் என்பதை வார்த்தைகளால் சொல்வது மிகவும் கடினம்.  சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக முடிவு எடுத்துள்ளேன். எனக்கு வாய்ப்பு வழங்கிய பிசிசிஐ, சௌராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் என அனைவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்” என்று புஜாரா கூறியுள்ளார்.

Admin ஆகஸ்ட் 24, 2025 0
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி

ஆசிய கோப்பை: இந்திய அணியின் பிளேயிங் லெவனை தேர்வு செய்த கவாஸ்கர்

ஒருநாள் தொடர்- தென் ஆப்பிரிக்கா அணியில் இணைந்த க்வேனா மபாகா

ஆசிய கோப்பை

ஆசிய கோப்பை: இந்திய அணியை தேர்வு செய்த ஹர்பஜன்

ஆசிய கோப்பை: கில்- ஜெய்ஸ்வாலுக்கு இடமில்லை.. முன்னாள் வீரர் அதிரடி

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், நேபாள் ஆகிய அணிகள் இடம்பிடித்துள்ளன.  குரூப் பி பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங் அணிகளும் இடம்பிடித்துள்ளன. ஐபிஎல் தொடருக்கு பிறகு இந்திய அணி விளையாடும் டி20 தொடர் என்பதால், இந்த அணியில் யார் யார் இடம் பிடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. இந்த நிலையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், பிரபல வர்ணனையாளருமான ஹர்ஷா போக்லே ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்துள்ளார். தொடக்க வீரர்களாக அபிஷேக் சர்மா மற்றும் சஞ்சு சாம்சனைத் தேர்வு செய்துள்ளார். அதேசமயம் 3-ம் இடத்தில் திலக் வர்மாவையும், 4-ம் இடத்தில் சூர்யகுமார் யாதவை தேர்வு செய்துள்ளார். ஆல் ரவுண்டர்களில் ஹர்திக் பாண்ட்யா, அக்சர் படேல் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோரைத் தேர்ந்தெடுத்துள்ள அவர், பந்துவீச்சாளர்களாக ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்ரவர்த்தி, பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங், ரவி பிஷ்னோய் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோரை அணியில் சேர்த்துள்ளார். இருப்பினும் அவரது அணியில் சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரிங்கு சிங் ஆகியோரை புறக்கணித்துள்ளார். ஹர்ஷா போக்லே தேர்வு செய்த இந்திய அணி அபிஷேக் சர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, ஸ்ரேயாஸ் ஐயர், ஹார்திக் பாண்ட்யா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், சஞ்சு சாம்சன், ஜிதேஷ் சர்மா, ஜஸ்ப்ரீத் பும்ரா, வருண் சக்ரவர்த்தி, பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங், ரவி பிஷ்னோய், குல்தீப் யாதவ்.

Admin ஆகஸ்ட் 18, 2025 0

ஆசிய கோப்பை பாகிஸ்தான் அணியில் இருந்து நீக்கப்பட்ட பாபர் அசாம்

0 Comments