உலகம்

தவெக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பில் ட்விஸ்ட் வைத்த விஜய்

Admin ஆகஸ்ட் 21, 2025 0
விஜய்

மதுரை தவெக இரண்டாவது மாநில மாநாட்டில் ஆவேசமாக பேசிய விஜய், வேட்பாளர் பட்டியலை அறிவிப்பதாக கூறினார். இதனால், தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர். 

இதனையடுத்து, மதுரை கிழக்கு தொகுதி வேட்பாளர் விஜய் என்று அறிவித்துவிட்டு சில நொடிகள் இடைவெளி விட்டார். இதைக்கேட்ட தொண்டர்கள் ஆர்ப்பரித்தனர்.

ஆனால், அடுத்த நொடியே, அனைத்து தொகுதிகளிலும் நானே வேட்பாளராக நிற்பதாக கருதுங்கள். 234 தொகுதிகளிலும் விஜய்தான் உங்கள் சின்னம்.” என்று கூறினார்.

வேட்பாளர் பட்டியல் என்று கூறிவிட்டு தனது பெயரை விஜய் கூறியதும் உண்மையாகவே, போட்டியிடும் தொகுதியை விஜய் அறிவித்துவிட்டதாக நினைத்த தொண்டர்களுக்கு, சிறிது நேரம் கழித்துதான் விஜய் பேச்சின் சாராம்சம் புரிந்தது.

மாநாட்டில் விஜய் மேலும் கூறுகையில், நான் ஒன்றும் அடைக்கலம் தேடி அரசியலுக்கு வரவில்லை. படைக்கலத்தோடு அரசியலுக்கு வந்து இருக்கிறேன். எல்லாவற்றிற்கும் தயாராகவே வந்துள்ளேன் என்றார்.

Tags

விஜய் தவெக TVK Vijay
Popular post
ரணில் கைது: நீதிமன்ற வளாகத்தில் கடும் பாதுகாப்பு

கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, கோட்டை நீதவான் நீதிமன்றத்தைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நான்கு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த வாக்குமூலத்திற்குப் பிறகு,   விக்ரமசிங்க கைது செய்யப்பட்டார். இதனையடுத்து, அவர் விரைவில் அவர் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிறைக்கு போவதை தவிர்க்க 4 ஆண்டுகளில் 3 முறை கர்ப்பம் தரித்த பெண்!

சீனாவின் ஷான்சி மாகாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு, மோசடி வழக்கில் 2020ஆம் ஆண்டில் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது அவர் கர்ப்பமாக இருந்ததால், சிறைக்கு வெளியே தண்டனை அனுபவிக்க அனுமதிக்கப்பட்டார். இப்படி ஒரு வசதி இருப்பதைப் பயன்படுத்தி, ஒவ்வொரு முறையும் தனது மகப்பேறு காலம் முடிவடையும்போது அவர் மீண்டும் மீண்டும் கர்ப்பம் தரித்து வந்துள்ளார். இவ்வாறு, அவர் கடந்த 4 ஆண்டுகளில் 3 முறை கர்ப்பம் தரித்து சிறைக்கு போவதை தவிர்த்து வந்துள்ளார். இந்நிலையில், இந்து தொடர்பில் நடத்திய விசாரணையில், சிறைக்கு செல்வதை தவிர்க்க அவர் அவ்வாறு செய்வது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவரை கைது செய்து பொலிஸார் சிறையில் அடைத்தனர். அப்பெண், தான் பெற்ற 3 குழந்தைகளில் 2 குழந்தைகளை விவாகரத்தான கணவரிடமும், மேலும் ஒரு குழந்தையை அவரது சகோதரரிடமும் கொடுத்துள்ளார். சீனாவின் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி, ஒரு பெண் குற்றவாளி கர்ப்பமாக இருந்தால் அல்லது ஒரு குழந்தைக்கு பாலூட்டினால் அவருக்கு வீட்டுக் காவல் வழங்கப்படுகிறது. 

நடிகர் விஜய்யின் கட்சி கொடிக்கம்பம் சாய்ந்து விழுந்ததில் கார் நொறுங்கியது!

நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகத்தின் 2ஆவது மாநாடு, மதுரையில் நாளை வியாழக்கிழமை (21) நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளின் கட்சித் தொண்டர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மதுரை மாநாட்டு திடலில் த.வெ.க.வின் 100 அடி கொடிக்கம்பத்தை இன்று (20) நட ஏற்பாடு செய்யப்பட்டது. இதனால், கிரேன் மூலம் கொடிக்கம்பம் நிறுத்தும் பணி நடைபெற்று வந்தது. அப்போது, யாரும் எதிர்பாராத நேரத்தில், கிரேனின் பெல்ட் திடீரென அறுந்ததில், கொடிக்கம்பம் சாய்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது. கொடிக்கம்பம் சாய்ந்து கார் ஒன்றின் மீது விழுந்ததால், கார் சுக்கு நூறாக நொறுங்கியது. இந்த விபத்தால் மதுரை மாநாட்டு திடலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விபத்தில் யாருக்கும் உயிர் சேதம் இல்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கைக்கு வந்த 15 வயது துணை விமானி!

உலகைச் சுற்றி வந்த இளைய துணை விமானியாக மாறுவதற்கான வரலாற்று முயற்சியில் இறங்கியுள்ள அவுஸ்திரேலியா - பிரிஸ்பேனைச் சேர்ந்த 15 வயதான பைரல் வொல்லர் (Byron Waller) இலங்கை வந்துள்ளார். கொழும்பு, இரத்மலானை விமான நிலையத்தை நேற்று முன்தினம் (17)  வந்தடைந்த அவரை, விமான நிலைய அதிகாரிகள் வரவேற்றனர். இந்தியப் பெருங்கடலில் 11 மணி நேர விமானப் பயணத்திற்குப் பின்னர் நேற்று முன்தினம் பைரன் வாலர் விமான நிலையத்தை வந்தடைந்ததார். பைரன், 45,000 கிலோ மீட்டர்கள், 7 கண்டங்களிலும் 30 நாடுகளை சுற்றிவர சுமார் 2 மாதங்கள் எடுக்கும் ஒரு பயணத்தை மேற்கொள்கிறார். 

தேசபந்து தென்னகோன் கைது!

கொழும்பு (News21Tamil) - முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் இன்று புதன்கிழமை (20) கைது செய்யப்பட்டுள்ளார். காலி முகத்திடல் மற்றும் அலரி மாளிகைக்கு அருகில் 2022 மே 09ஆம் திகதி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக இந்தச் சம்பவம் தொடர்பில் தாம் கைதுசெய்யப்படுவதை, தவிர்க்கும் வகையில் முன்பிணை வழங்குமாறு தேசபந்து தென்னகோன் நீதிமன்றைக் கோரியிருந்தார். எனினும், அவரது முன்பிணை கோரிக்கையை, கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர நிராகரித்தார்.  இந்நிலையிலேயே, குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

உலகம்

View more
நியூயார்க் அதிவேக நெடுஞ்சாலையில் பேருந்து விபத்துக்குள்ளானதில் ஐந்து பேர் பலி

மேற்கு நியூயார்க்கில் உள்ள அதிவேக நெடுஞ்சாலையில் சுற்றுலா பேருந்து விபத்துக்குள்ளானதில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக நியூயார்க் பொலிஸார் தெரிவித்தனர். அமெரிக்க-கனடா எல்லையில் உள்ள நயாகரா நீர்வீழ்ச்சியிலிருந்து நியூயார்க் நகரத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தபோது, ​​வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தாக நேரில் கண்டவர்கள் தெரிவித்ததாக  பொலிஸார் கூறினர். பலியானவர்களில் பெரும்பாலோர் இந்தியா, சீனா மற்றும் பிலிப்பைன்ஸைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். பஃபலோ நகருக்கு கிழக்கே 30 மைல் (48 கிமீ) தொலைவில் உள்ள பெம்ப்ரோக் நகருக்கு அருகில் உள்ள விபத்து நடந்த இடத்திற்கு அம்புலன்ஸ்கள் மற்றும் மருத்துவ ஹெலிகாப்டர்கள் அனுப்பப்பட்டன.

Admin ஆகஸ்ட் 23, 2025 0
விஜய்

தவெக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பில் ட்விஸ்ட் வைத்த விஜய்

நடிகர் விஜய்யின் கட்சி கொடிக்கம்பம் சாய்ந்து விழுந்ததில் கார் நொறுங்கியது!

சிறைக்கு போவதை தவிர்க்க 4 ஆண்டுகளில் 3 முறை கர்ப்பம் தரித்த பெண்!

ஊதா நிற நண்டு பார்த்ததுண்டா?

கருப்பு, வெள்ளை மற்றும் சிவப்பு நிறங்களில் நண்டுகளைப் பார்த்திருக்கலாம். ஆனால், ஊதா நிற நண்டுகளைப் பார்த்ததுண்டா? இந்த அரிய வகை நண்டுகள், தாய்லந்தில் காணப்பட்டுள்ளன. ஊதா நிற நண்டுகளின் படங்களை தாய்லந்தின் தேசியப் பூங்கா, வனவிலங்கு, தாவரப் பாதுகாப்புப் பிரிவு தமது Facebook பக்கத்தில் பதிவேற்றியுள்ளது. நண்டுகளின் உடலில் ஒரு பகுதி வெள்ளையாகவும் இன்னொரு பகுதி ஊதா நிறமாகவும் காணப்படுகிறது. பேட்சபூரி வட்டாரத்தின் Kaeng Krachan National Park பூங்காவில் அவை காணப்பட்டதாக தாய்லந்தின் தேசியப் பூங்கா, வனவிலங்கு, தாவரப் பாதுகாப்புப் பிரிவு தெரிவித்தது.  இந்த அரிய வகை நண்டுகள் அங்கிருப்பது பூங்காவின் பல்லுயிர்ச்சூழல் ஆரோக்கியமாய் இருப்பதைப் பிரதிபலிப்பதாகவும் அப்பிரிவு கூறியது. ஊதா நிற நண்டின் படங்களைக் கண்ட இணையவாசிகள் அதன் அழகில் பிரமித்து, பகிர்ந்து வருகின்றனர். 

Admin ஆகஸ்ட் 20, 2025 0

ஜப்பானில் 1,600 பொருட்களை விற்பனை செய்ய தடை

கழிவறையில் பெண் பயணி; கதவைத் திறந்து பார்த்த விமானி - விமானத்தில் நடந்த சம்பவம்

ஆப்பிள் தனியுரிமை விவகாரத்தில் இங்கிலாந்து பின்வாங்கியதாக அமெரிக்கா தெரிவிப்பு!

மாணவர் விசா
6,000 மாணவர் விசாக்களை ரத்து செய்த அமெரிக்க வெளியுறவுத்துறை

அமெரிக்க சட்ட மீறல்கள் மற்றும் நீண்ட காலம் தங்கியிருப்பதால் 6,000க்கும் மேற்பட்ட சர்வதேச மாணவர் விசாக்களை வெளியுறவுத்துறை ரத்து செய்துள்ளது என்று அந்த துறை பிபிசியிடம் தெரிவித்துள்ளது. மீறல்களில் பெரும்பாலானவை தாக்குதல், செல்வாக்கின் கீழ் வாகனம் ஓட்டுதல் (DUI), கொள்ளை மற்றும் பயங்கரவாதத்திற்கு ஆதரவு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டிரம்ப் நிர்வாகம் குடியேற்றம் மற்றும் சர்வதேச மாணவர்கள் மீதான அதன் அடக்குமுறையைத் தொடர்ந்து வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெளியுறவுத்துறை "பயங்கரவாதத்திற்கு ஆதரவு" என்பதன் அர்த்தம் என்ன என்பதைக் குறிப்பிடவில்லை என்றாலும், டிரம்ப் நிர்வாகம் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக எதிர்ப்புத் தெரிவித்த சில மாணவர்களை குறிவைத்து, அவர்கள் யூத விரோத நடத்தையை வெளிப்படுத்தியதாக வாதிட்டுள்ளது. ரத்து செய்யப்பட்ட 6,000 மாணவர் விசாக்களில், சட்டத்தை மீறியதால் சுமார் 4,000 ரத்து செய்யப்பட்டதாக வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், டிரம்ப் நிர்வாகம் சர்வதேச மாணவர்களுக்கான விசா சந்திப்புகளை திட்டமிடுவதை இடைநிறுத்தியது. ஜூன் மாதத்தில், அவர்கள் சந்திப்புகளை மீண்டும் தொடங்கியபோது, அனைத்து விண்ணப்பதாரர்களும் தங்கள் சமூக ஊடகக் கணக்குகளை பகிரங்கப்படுத்துமாறு கேட்டுக்கொள்வதாக அறிவித்தனர். டிரம்ப் நிர்வாகம் மாணவர் விசாக்களை ரத்து செய்யும் முயற்சியை ஜனநாயகக் கட்சியினர் எதிர்த்துள்ளனர், இது உரிய நடைமுறையின் மீதான தாக்குதல் என்று வர்ணித்துள்ளனர். வெளிநாட்டு மாணவர்கள் பற்றிய தரவுகளை சேகரிக்கும் அமைப்பான ஓபன் டோர்ஸின் கூற்றுப்படி, 2023-24 கல்வியாண்டில் 210 க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 1.1 மில்லியனுக்கும் அதிகமான சர்வதேச மாணவர்கள் அமெரிக்க கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர்.

Admin ஆகஸ்ட் 19, 2025 0
உக்ரைன்

முடிவு இன்னும் 2 வாரங்களில் தெரிந்துவிடும்.. பேச்சுவார்த்தைக்கு பின் டிரம்ப் பேச்சு

குழந்தையை பிரசவிக்கும் ரோபோக்களை உருவாக்கும் சீன விஞ்ஞானிகள்!

நியூயார்க் இரவு விடுதியில் துப்பாக்கிச்சூடு; மூவர் கொலை!

0 Comments