உக்ரைன் ரஷியா இடையே கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக முடிவின்றி போர் நடந்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த ஆகஸ்ட் 15 இல் அலாஸ்காவுக்கு ரஷிய அதிபர் புதினை வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்தநிலையில் இன்று, வெள்ளை மாளிகை வந்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை வாஷிங்டனுக்கு வரவழைத்து பேசுவார்த்தை நடத்தியுள்ளார் டிரம்ப்.
முதலில் ஜெலன்ஸ்கியுடன் தனியாக தனது ஓவல் அலுவலகத்தில் டிரம்ப் பேசினார். தொடர்ந்து அமெரிக்கா வருகை தந்த 7 ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களுடன் ஜெலன்ஸ்கி டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், போரை முடிவுக்கு கொண்டு வர ஜெலன்ஸ்கியும் விரும்புகிறார், புதினும் விரும்புகிறார். இந்த போரால் உலக நாடுகள் தளந்துவிட்டன. விரைவில் உக்ரைனில் அமைதி திரும்பும். வெறும் போர் நிறுத்தம் எங்கள் நோக்கமல்ல.
நீண்ட காலத்துக்கு நீடிக்கக்கூடுய அமைதி ஒப்பந்தத்தை மேற்கொள்வோம். இதுவரை 6 போர்களை நிறுத்தியுள்ளேன். இந்த போர் சற்று கடினமானது. இந்த போருக்கு ஜோ பைடன் தான் காரணம்.
பேச்சுவார்த்தையின்போது புதினுடன் போனில் பேசினேன். இதன் பின்னரும் பேச உள்ளேன். ஜெலன்ஸ்கி, புதின் இருவருடனும் முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகளை தொடங்கி உள்ளேன்.புதின் ஒத்துழைப்பு வழங்குவார் என நம்புகிறேன்.
பேச்சுவார்த்தை கடினம், ஆனால் சாத்தியம். உக்ரைனின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும், இன்னும் 2 வாரங்களில் முடிவு தெரிந்துவிடும்" என்று தெரிவித்தார்.
உலகைச் சுற்றி வந்த இளைய துணை விமானியாக மாறுவதற்கான வரலாற்று முயற்சியில் இறங்கியுள்ள அவுஸ்திரேலியா - பிரிஸ்பேனைச் சேர்ந்த 15 வயதான பைரல் வொல்லர் (Byron Waller) இலங்கை வந்துள்ளார். கொழும்பு, இரத்மலானை விமான நிலையத்தை நேற்று முன்தினம் (17) வந்தடைந்த அவரை, விமான நிலைய அதிகாரிகள் வரவேற்றனர். இந்தியப் பெருங்கடலில் 11 மணி நேர விமானப் பயணத்திற்குப் பின்னர் நேற்று முன்தினம் பைரன் வாலர் விமான நிலையத்தை வந்தடைந்ததார். பைரன், 45,000 கிலோ மீட்டர்கள், 7 கண்டங்களிலும் 30 நாடுகளை சுற்றிவர சுமார் 2 மாதங்கள் எடுக்கும் ஒரு பயணத்தை மேற்கொள்கிறார்.
பேலியகொடை ஞானரத்ன மாவத்தை பகுதியில் இன்று (19) காலை நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த ஒருவர் உயிரிழந்தார். பேலியகொடை மீன் சந்தை வளாகத்தில் பணியாற்றும் தொழிலாளி மீது அடையாளம் தெரியாத இருவரால் இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இதன்போது, வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த மற்றொரு நபரும் துப்பாக்கிச்சூட்டுக்கு உள்ளாகியுள்ளார். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இருவரில் ஒருவர், கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
சீனாவின் ஷான்சி மாகாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு, மோசடி வழக்கில் 2020ஆம் ஆண்டில் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது அவர் கர்ப்பமாக இருந்ததால், சிறைக்கு வெளியே தண்டனை அனுபவிக்க அனுமதிக்கப்பட்டார். இப்படி ஒரு வசதி இருப்பதைப் பயன்படுத்தி, ஒவ்வொரு முறையும் தனது மகப்பேறு காலம் முடிவடையும்போது அவர் மீண்டும் மீண்டும் கர்ப்பம் தரித்து வந்துள்ளார். இவ்வாறு, அவர் கடந்த 4 ஆண்டுகளில் 3 முறை கர்ப்பம் தரித்து சிறைக்கு போவதை தவிர்த்து வந்துள்ளார். இந்நிலையில், இந்து தொடர்பில் நடத்திய விசாரணையில், சிறைக்கு செல்வதை தவிர்க்க அவர் அவ்வாறு செய்வது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவரை கைது செய்து பொலிஸார் சிறையில் அடைத்தனர். அப்பெண், தான் பெற்ற 3 குழந்தைகளில் 2 குழந்தைகளை விவாகரத்தான கணவரிடமும், மேலும் ஒரு குழந்தையை அவரது சகோதரரிடமும் கொடுத்துள்ளார். சீனாவின் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி, ஒரு பெண் குற்றவாளி கர்ப்பமாக இருந்தால் அல்லது ஒரு குழந்தைக்கு பாலூட்டினால் அவருக்கு வீட்டுக் காவல் வழங்கப்படுகிறது.
இண்டிகோ விமானத்தில் ஆகஸ்ட் 8 ஆம் திகதி மும்பையைச் சேர்ந்த ரியா சட்டர்ஜி என்ற பெண் பயணம் செய்துள்ளார். இந்தநிலையில் தான் விமானத்தின் கழிவறையில் இருந்தபோது, இணை விமானி ஒருவர் திடீரென கதவைத் திறந்துவிட்டதாகக் அப்பெண் குற்றம் சாட்டியுள்ளார். இந்த சம்பவம் அவர் தனது LinkedIn பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது தனக்கு அதிர்ச்சியையும் அவமானத்தையும் ஏற்படுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார். கதவைத் திறந்த இணை விமானி "ஓ" என்று சொல்லிவிட்டு உடனடியாக கதவை மூடிவிட்டதாகவும், பின்னர் விமானப் பணிப்பெண்கள் இந்த சம்பவத்தை அலட்சியம் செய்ததாகவும் அவர் குற்றம்சாட்டி உள்ளார். விமான ஊழியர்களின் இத்தகைய அலட்சியமான பதில் தனக்கு மேலும் மன உளைச்சலை ஏற்படுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார். சம்பவம் குறித்து விமான நிறுவனத்தின் தலைமை நிர்வாகக் குழுவுக்கு மின்னஞ்சல் அனுப்பியும், நிறுவனம் முறையாகப் பதிலளிக்கவில்லை என்றும், வருத்தம் தெரிவிப்பதற்குப் பதிலாக, இது ஒரு சாதாரண சிரமம் என்று கூறியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தனக்கு இழப்பீடு வேண்டாம் என்றும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க விழிப்புணர்வு ஏற்படுத்துவதே தனது நோக்கம் என்றும் சட்டர்ஜி தெரிவித்துள்ளார். இண்டிகோ நிறுவனம் இந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டு, சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகத்தின் 2ஆவது மாநாடு, மதுரையில் நாளை வியாழக்கிழமை (21) நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளின் கட்சித் தொண்டர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மதுரை மாநாட்டு திடலில் த.வெ.க.வின் 100 அடி கொடிக்கம்பத்தை இன்று (20) நட ஏற்பாடு செய்யப்பட்டது. இதனால், கிரேன் மூலம் கொடிக்கம்பம் நிறுத்தும் பணி நடைபெற்று வந்தது. அப்போது, யாரும் எதிர்பாராத நேரத்தில், கிரேனின் பெல்ட் திடீரென அறுந்ததில், கொடிக்கம்பம் சாய்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது. கொடிக்கம்பம் சாய்ந்து கார் ஒன்றின் மீது விழுந்ததால், கார் சுக்கு நூறாக நொறுங்கியது. இந்த விபத்தால் மதுரை மாநாட்டு திடலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விபத்தில் யாருக்கும் உயிர் சேதம் இல்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.

பல புதுமையான கண்டுபிடிப்புகளை உருவாக்குவதில் சீன விஞ்ஞானிகள் கிள்ளாடிகள். முன்பு பயோ பேக் என்ற பெயரில் உருவாக்கப்பட்ட செயற்கை கருப்பையின் உதவியுடன் ஓர் ஆட்டுக்குட்டியை பெற்றெடுக்க சீன விஞ்ஞானிகள் வெற்றியீட்டினர். இந்நிலையில், கர்ப்பம் தரித்து, 10 மாதங்கள் குழந்தையை சுமந்து, பிரசவிக்கக்கூடிய மனித உருவ ரோபோக்களை சீன விஞ்ஞானிகள் உருவாக்கி வருகின்றனர். சிங்கப்பூரில் உள்ள நான்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டொக்டர் ஜாங் கெஃபெங் தலைமையிலான குழு உலகின் முதல் 'கர்ப்ப ரோபோவை' உருவாக்கி வருகிறது. சீன ஊடக அறிக்கைகளின்படி, கர்ப்ப ரோபோக்கள் தற்போது கிடைக்கும் இன்குபேட்டர்களுடன் தொடர்புடையவை அல்ல. இந்தக் கர்ப்ப ரோபோக்கள் தொழில்நுட்பத்தின் உதவியுடன் செயற்கையாக உருவாக்கப்பட்ட கருப்பைகளைக் கொண்டுள்ளன. செயற்கை அம்னோடிக் திரவத்தால் நிரப்பப்பட்ட இந்தச் செயற்கை கருப்பை, மனித கருப்பை போலவே செயல்படுகிறது. நிஜ வாழ்க்கையில், கருத்தரித்தல் முதல் பிரசவம் வரை முழு செயல்முறையும் கர்ப்ப ரோபோவின் கருப்பையில் நடைபெறுகிறது. கருப்பையில் குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் குழாய்கள் மூலம் வழங்கப்படுகின்றன. இந்த பயோ பேக் தொழில்நுட்பத்தை மேலும் மேம்படுத்துவதன் மூலம் கர்ப்ப ரோபோக்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. கர்ப்ப ரோபோக்களின் மாதிரி அடுத்த ஆண்டு தயாராக இருக்கும் என்றும் என்றும் டொக்டர் ஜாங் கூறினார்.