(க.கிஷாந்தன்) மலையக பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக நோர்டன்பிரிட்ஜ், மஸ்கெலியா மற்றும் லக்சபான பிரதான வீதியில் மண்மேடு சரிந்து விழுந்து பாதிக்கப்பட்டிருந்த பிரதான போக்குவரத்து தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதாக நோர்டன்பிரிட்ஜ் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று மாலை நோர்டன்பிரிட்ஜ் பெட்ரோல் நிரப்பும் நிலையத்திற்கு அருகில் மண் மேடு சரிந்தது. பின்னர் லக்சபான இராணுவ முகாம், நோர்டன்பிரிட்ஜ் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் நோர்வூட் வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள் ஆகியோரால் குறித்த மண்மேடு அகற்றப்பட்டது, அதன் பின்னர் வீதியின் போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பியது. தொடர்ந்து பெய்யும் மழை காரணமாக மண்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதால், மத்திய மலைநாட்டில் உள்ள பிரதான மற்றும் சிறிய வீதிகளில் வாகனம் ஓட்டும்போது கவனமாக இருக்குமாறு நோர்டன்பிரிட்ஜ் பொலிஸார் சாரதிகளை அறிவுறுத்தியுள்ளனர்.
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு, கர்நாடக இசைக் கலைஞர் கலாநிதி நித்தியஸ்ரீ மகாதேவனின் கர்நாடக இசை நிகழ்வு நடைபெறவுள்ளது. யாழ். இந்திய துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண கலாசார மண்டபத்தில் நாளை செவ்வாய்க்கிழமை இரவு 07 மணிக்கு இந்த இசை நிகழ்வு இடம்பெறவுள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து இராணுவத்தை வெளியேற்ற கோரி தமிழரசு கட்சியினால் , பூரண கதவடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் பெருமளவான இடங்களில் இயல்வு நிலை காணப்பட்டன. காலையில் சில இடங்களில் கடைகள் பூட்டப்பட்டு இருந்தாலும் , பல இடங்களில் கடைகள் திறக்கப்பட்டு இருந்தமையும் அவதானிக்க முடிந்தது. அதேவேளை போக்குவரத்து சேவைகள் வழமை போன்று இயங்கி வருவதுடன் , அரச திணைக்களங்கள் , பாடசாலைகள் என்பனவும் வழமை போன்று இயங்கி வருகிறன.
தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் மற்றும் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியால் ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று திங்கட்சிழமையும் தொடர்கின்றது. 19 கோரிக்கைகளை முன்வைத்து நேற்று (17) மாலை 4.00 மணிக்கு மத்திய தபால் பரிமாற்றத்தில் இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இதனையடுத்து, நள்ளிரவு 12.00 மணி முதல் நாடு தழுவிய அளவில் போராட்டம் வலுப்பெற்றுள்ளதாக தபால் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது. இதனால், இன்று அனைத்து தபால் செயல்பாடுகளும் பாதிக்கப்படும் என்று ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்க முன்னணியின் இணை அமைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்தார். இருப்பினும், குறித்த பணிப்புறக்கணிப்பு தொடர்பில் கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில், கருத்து தெரிவித்த தபால்மா அதிபர் ருவன் சத்குமார, தபால் ஊழியர்களின் பல கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்ட நிலையில், இதுபோன்ற பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவது நியாயமற்றது என்று கூறினார்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று (18) திங்கட்கிழமை ஹர்த்தால் முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சி தெரிவித்துள்ளது. முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் இராணுவ முகாமுக்குள் நுழைந்த இளைஞன், முத்துஐயன்கட்டு குளத்தில் உயிரிழந்து கிடந்த சம்பவம் தொடர்பில் இந்த ஹர்த்தால் முன்னெடுக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் தொடர்பில் இரண்டு விசேட பொலிஸ் குழுக்கள் விசாரணை நடத்தி வருவதுடன், மூன்று இராணுவ சிப்பாய்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், இளைஞனின் மரணத்திற்கு நீதி கோரி இன்று வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஹர்த்தால் நடத்த திட்டமிட்டுள்ளதாக தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார். அத்துடன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகியவை இந்த ஹர்த்தாலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வடக்கு, கிழக்கில் அளவுக்கு அதிகமான இராணுவப் பிரசன்னம் மற்றும் இராணுவ அடக்குமுறைகளுக்கு எதிராக இன்று (18) ஹர்த்தால் திட்டமிட்டபடி முன்னெடுக்கப்படும் எனவும், அது பலரின் நன்மை கருதி காலையில் மாத்திரம் நடைபெறும் எனவும் இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை பெய்யும். வடமேற்கு மாகாணத்தில் சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் மழை இல்லாத வானிலை நிலவும். மத்திய மலைநாட்டின் மேற்குப் பகுதிகள், வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் தெற்கு மாகாணங்கள் மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் அவ்வப்போது மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
அரச மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளில் 2025 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணையின் முதல் கட்டம் இன்று தொடங்கியது. எனினும், முஸ்லிம் பாடசாலைகளில் மூன்றாம் தவணை 25 ஆம் திகதி தொடங்கும். இன்று (18) தொடங்கும் மூன்றாம் தவணையின் முதல் கட்டம் நவம்பர் 07 ஆம் திகதியுடன் முடிவடையும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
முல்லைத்தீவு ஊடக அமையத்தின் தலைவரும் ஊடகவியலாளருமான கணபதிப்பிள்ளை குமணன், பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினால் விசாரணைக்கு அழைக்கப்பட்டார். இந்நிலையில், இன்று ஞாயிற்றக்கிழமை (17) காலை 9.30 மணிக்கு அவர் முல்லைத்தீவு மாவட்டத்தின் அளம்பில் பொலிஸ் நிலையத்தில் உள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவில் விசாரணைக்காக ஆஜரானார். அவருடன் சட்டத்தரணி நடராசா காண்டீபனுடன் உடன் சென்றார். இன்று காலை 10 மணியளவில் ஆரம்பித்த விசாரணை, சுமார் சுமார் 7 மணித்தியாலங்களுக்கு மேல் நீடித்தது. ஊடகவியலாளர் குமணனின் வீட்டுக்கு 2025.08.07 அன்று சென்ற பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினர், அளம்பில் பொலிஸ் நிலையத்தில் உள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினால் விசாரணைக்கு 2025.08.17 அன்று வருகை தருமாறு அழைப்பு விடுத்திருந்தனர். ஊடகவியலாளர் குமணன், செம்மணி மனிதப் புதைகுழி குறித்த செய்திகளை புகைப்படங்களுடன் தொடர்ச்சியாக வெளியிட்டு வந்தார்.
நாடளாவிய ரீதியில் நீரில் மூழ்கி உயிரிழப்போர் தொகை அதிகரித்து வருவதாக இலங்கை பொலிஸ் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. இது தொடர்பில் பொலிஸ் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இவ்வாண்டின் இதுவரையான காலப்பகுதியில் 257 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர்களில் 220 ஆண்களும் 37 பெண்களும் அடங்குவர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் உதவி அத்தியட்சகருமான (ASP) எஃப்.யு. வூட்லர் கூறினார். இதேவேளை, நீரில் மூழ்கிய 102 பேரை பொலிஸ் உயிர்காக்கும் பிரிவு மீட்டுள்ளது. இதில் 69 உள்ளூர் சுற்றுலாப் பயணிகள் மற்றும் 33 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அடங்குவர் என்றும் எஃப்.யு. வூட்லர் மேலும் கூறினார்.
செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது குறித்து அரச நிறைவேற்று அதிகாரிகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட விசேட செயலமர்வு அலரி மாளிகையில் நேற்று (16) முற்பகல் நடைபெற்றது. ‘AI for Transforming Public Service’ என்ற தொனிப்பொருளில், ஜனாதிபதி அலுவலகத்தின் ஒத்துழைப்புடன் டிஜிட்டல் பொருளாதார அமைச்சினால் இந்த செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்ட. பத்து அமைச்சுக்களின் நிறைவேற்று அதிகாரிகள் இந்த செயலமர்வில் பங்கேற்றனர். அரச சேவையை டிஜிட்டல் மயமாக்கும் அரசாங்கத்தின் திட்டத்தின் ஆரம்ப பிரவேசமாக, அரச அதிகாரிகளை அறிவூட்டுதல் மற்றும் தயார்படுத்துதல் மற்றும் அரச சேவைக்குள் செயற்கை நுண்ணறிவு குறித்த சாதகமான அணுகுமுறையை ஏற்படுத்துதல் ஆகிய நோக்கங்களுடன் இந்த செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பாதாள உலக குழு நடவடிக்கைகளை ஒடுக்குவதற்கு சிறந்த திட்டம் ஒன்று செயல்படுத்தப்பட்டு வருவதாக பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்தார். முப்படைகள் மற்றும் பொதுமக்களின் ஆதரவுடன் குற்றங்களை அடக்குவதற்குத் தாம் பணியாற்றி வருவதாக, கண்டியில் இன்று மகாநாயக்க தேரர்களைச் சந்தித்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் கூறினார். சில பாதாள உலக குழு நடவடிக்கைகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் அரசியல் ஆதரவுகளையும், சில பொலிஸ் அதிகாரிகளின் ஆதரவையும் பெற்றுள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார். எனினும், எந்தவொரு குற்றத்தையும் மறைக்கவோ அல்லது புறக்கணிக்கவோ தன்னிடமிருந்து ஒருபோதும் உத்தரவுகள் வராது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வவுனியா – யாழ்ப்பாணம் பிரதான வீதியின் ஓமந்தை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்தனர். இந்த விபத்து இன்று (17) இரவு ஏற்பட்டுள்ளதுடன், குறித்த விபத்தில் பலர் படுகாயமடைந்துள்ளனர். கெப் ரக வாகனம் மற்றும் லொறி என்பன நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதுடன், விபத்தில் படுகாயமடைந்தவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை தகவல்கள் குறிப்பிடுகின்றன.
ஓகஸ்ட் மாதத்தில் இதுவரையான காலப்பகுதியில் 99,406 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் இருந்து மொத்தம் 19,572 சுற்றுலாப் பயணிகள் இந்த மாதம் நாட்டுக்கு வருகை தந்துள்ளதுடன், மொத்த எண்ணிக்கையில் இது 19.7% ஆகும். ஐக்கிய இராச்சியத்திலிருந்து 10,970 பேரும், இத்தாலியிலிருந்து 7,641 பேரும், பிரான்சிலிருந்து 6,870 பேரும், சீன நாட்டினர் 6,762 பேரும் வந்துள்ளனர். இதேவேளை, 2025 ஆம் ஆண்டில் இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் மொத்த எண்ணிக்கை 1,467,694 ஆக அதிகரித்துள்ளது. அவர்களில், 268,694 பேர் இந்தியர்கள். ஐக்கிய இராச்சியத்திலிருந்து 142,347 பேரும், ரஷ்யாவிலிருந்து 117,322 பேரும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
அடுத்து வரும் 36 மணி நேரத்திற்கான வானிலை முன்னறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. அதன்படி, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடமேல் மாகாணம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதுடன், நாட்டின் ஏனைய பகுதிகளில் மழையற்ற வானிலையை எதிர்பார்க்கலாம். அத்துடன், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும், திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணிக்கு 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
நோர்டன்பிரிட்ஜ் - மஸ்கெலியா பிரதான வீதியில் மண்மேடு சரிந்து விழுந்துள்ளது. இதனையடுத்து, இன்று (17) மாலை முதல் குறித்த வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக நோர்டன்பிரிட்ஜ் பொலிஸார் தெரிவித்தனர். பலத்த மழையை அடுத்து மண்மேடு சரிந்துள்ளதுடன், வீதியை சீரமைக்கப்படும் வரை மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார், சாரதிகளிடம் கோரியுள்ளனர்.
அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைக நாளை ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. தமிழ் மற்றும் சிங்களம் மொழி மூல பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளே நாளை(18) ஆரம்பமாகவுள்ளன. முஸ்லிம் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 25 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படும். குறித்த பாடசாலைகளின் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் கடந்த 7 ஆம் திகதி நிறைவடைந்தன. ஒரு வார விடுமுறையின் பின்னர் 3 ஆம் தவணை கற்றல் நடவடிக்கைகள் நாளை (18) ஆரம்பமாகவுள்ளன.
பல புதுமையான கண்டுபிடிப்புகளை உருவாக்குவதில் சீன விஞ்ஞானிகள் கிள்ளாடிகள். முன்பு பயோ பேக் என்ற பெயரில் உருவாக்கப்பட்ட செயற்கை கருப்பையின் உதவியுடன் ஓர் ஆட்டுக்குட்டியை பெற்றெடுக்க சீன விஞ்ஞானிகள் வெற்றியீட்டினர். இந்நிலையில், கர்ப்பம் தரித்து, 10 மாதங்கள் குழந்தையை சுமந்து, பிரசவிக்கக்கூடிய மனித உருவ ரோபோக்களை சீன விஞ்ஞானிகள் உருவாக்கி வருகின்றனர். சிங்கப்பூரில் உள்ள நான்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டொக்டர் ஜாங் கெஃபெங் தலைமையிலான குழு உலகின் முதல் 'கர்ப்ப ரோபோவை' உருவாக்கி வருகிறது. சீன ஊடக அறிக்கைகளின்படி, கர்ப்ப ரோபோக்கள் தற்போது கிடைக்கும் இன்குபேட்டர்களுடன் தொடர்புடையவை அல்ல. இந்தக் கர்ப்ப ரோபோக்கள் தொழில்நுட்பத்தின் உதவியுடன் செயற்கையாக உருவாக்கப்பட்ட கருப்பைகளைக் கொண்டுள்ளன. செயற்கை அம்னோடிக் திரவத்தால் நிரப்பப்பட்ட இந்தச் செயற்கை கருப்பை, மனித கருப்பை போலவே செயல்படுகிறது. நிஜ வாழ்க்கையில், கருத்தரித்தல் முதல் பிரசவம் வரை முழு செயல்முறையும் கர்ப்ப ரோபோவின் கருப்பையில் நடைபெறுகிறது. கருப்பையில் குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் குழாய்கள் மூலம் வழங்கப்படுகின்றன. இந்த பயோ பேக் தொழில்நுட்பத்தை மேலும் மேம்படுத்துவதன் மூலம் கர்ப்ப ரோபோக்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. கர்ப்ப ரோபோக்களின் மாதிரி அடுத்த ஆண்டு தயாராக இருக்கும் என்றும் என்றும் டொக்டர் ஜாங் கூறினார்.
அரச மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளில் 2025 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணையின் முதல் கட்டம் இன்று தொடங்கியது. எனினும், முஸ்லிம் பாடசாலைகளில் மூன்றாம் தவணை 25 ஆம் திகதி தொடங்கும். இன்று (18) தொடங்கும் மூன்றாம் தவணையின் முதல் கட்டம் நவம்பர் 07 ஆம் திகதியுடன் முடிவடையும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
எட்டு ஆண்டில் இல்லாத அளவுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி செய்திருக்கும் வரிக் குறைப்பை வர்த்தகச் சமூகம் வரவேற்றுள்ளது. இந்திய அரசாங்கம் பொருள் சேவை வரியில் மிகப்பெரிய மாற்றத்தை அறிவித்துள்ளதால், அத்தியாவசியப் பொருள்கள், மின்னியல் பொருள்களின் விலை குறையும். அக்டோபர் மாதம் இந்த வரி மாற்றம் நடப்புக்கு வரும்் அமெரிக்கா, இந்தியா மீது வரும் 27ஆம் திகதி முதல் 50 சதவீத தீர்வையை அறிவித்திருக்கிறது. அதனால் ஏற்படும் பாதிப்பைச் சமாளிக்க இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கிறது. நேற்று முன்தினம் இந்தியச் சுதந்திர தினத்தன்று பேசிய பிரதமர் மோடி, உள்நாட்டுப் பொருள்களை வாங்கும்படி மக்களைக் கேட்டுக்கொண்டதுடன், இந்தியா வெளிநாட்டைச் சார்ந்திருப்பதைத் தவிர்க்கவேண்டும் என்றார்.
வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து இராணுவத்தை வெளியேற்ற கோரி தமிழரசு கட்சியினால் , பூரண கதவடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் பெருமளவான இடங்களில் இயல்வு நிலை காணப்பட்டன. காலையில் சில இடங்களில் கடைகள் பூட்டப்பட்டு இருந்தாலும் , பல இடங்களில் கடைகள் திறக்கப்பட்டு இருந்தமையும் அவதானிக்க முடிந்தது. அதேவேளை போக்குவரத்து சேவைகள் வழமை போன்று இயங்கி வருவதுடன் , அரச திணைக்களங்கள் , பாடசாலைகள் என்பனவும் வழமை போன்று இயங்கி வருகிறன.
ஓகஸ்ட் மாதத்தில் இதுவரையான காலப்பகுதியில் 99,406 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் இருந்து மொத்தம் 19,572 சுற்றுலாப் பயணிகள் இந்த மாதம் நாட்டுக்கு வருகை தந்துள்ளதுடன், மொத்த எண்ணிக்கையில் இது 19.7% ஆகும். ஐக்கிய இராச்சியத்திலிருந்து 10,970 பேரும், இத்தாலியிலிருந்து 7,641 பேரும், பிரான்சிலிருந்து 6,870 பேரும், சீன நாட்டினர் 6,762 பேரும் வந்துள்ளனர். இதேவேளை, 2025 ஆம் ஆண்டில் இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் மொத்த எண்ணிக்கை 1,467,694 ஆக அதிகரித்துள்ளது. அவர்களில், 268,694 பேர் இந்தியர்கள். ஐக்கிய இராச்சியத்திலிருந்து 142,347 பேரும், ரஷ்யாவிலிருந்து 117,322 பேரும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.