இலங்கை

ஊடகவியலாளர் குமணனிடம் சுமார் 7 மணித்தியாலங்களுக்கு மேல் விசாரணை!

Admin ஆகஸ்ட் 17, 2025 0
Kumanan

முல்லைத்தீவு ஊடக அமையத்தின் தலைவரும் ஊடகவியலாளருமான கணபதிப்பிள்ளை குமணன், பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினால் விசாரணைக்கு அழைக்கப்பட்டார். 

 

இந்நிலையில், இன்று ஞாயிற்றக்கிழமை (17) காலை 9.30 மணிக்கு அவர் முல்லைத்தீவு மாவட்டத்தின் அளம்பில் பொலிஸ் நிலையத்தில் உள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவில் விசாரணைக்காக ஆஜரானார். 

 

அவருடன் சட்டத்தரணி நடராசா காண்டீபனுடன் உடன் சென்றார். 

 

இன்று காலை 10 மணியளவில் ஆரம்பித்த விசாரணை, சுமார் சுமார் 7 மணித்தியாலங்களுக்கு மேல் நீடித்தது. 

 

ஊடகவியலாளர் குமணனின் வீட்டுக்கு 2025.08.07 அன்று சென்ற பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினர், அளம்பில் பொலிஸ் நிலையத்தில் உள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினால் விசாரணைக்கு 2025.08.17 அன்று வருகை தருமாறு அழைப்பு விடுத்திருந்தனர்.

 

ஊடகவியலாளர் குமணன், செம்மணி மனிதப் புதைகுழி குறித்த செய்திகளை புகைப்படங்களுடன் தொடர்ச்சியாக வெளியிட்டு வந்தார். 

Tags

ஊடகவியலாளர் குமணன் செம்மணி மனிதப்புதைகுழி
Popular post
மூன்றாம் தவணை பாடசாலை நடவடிக்கை இன்று ஆரம்பம்

அரச மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளில் 2025 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணையின் முதல் கட்டம் இன்று தொடங்கியது.   எனினும், முஸ்லிம் பாடசாலைகளில் மூன்றாம் தவணை 25 ஆம் திகதி தொடங்கும்.   இன்று (18) தொடங்கும் மூன்றாம் தவணையின் முதல் கட்டம் நவம்பர் 07 ஆம் திகதியுடன் முடிவடையும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

குழந்தையை பிரசவிக்கும் ரோபோக்களை உருவாக்கும் சீன விஞ்ஞானிகள்!

பல புதுமையான கண்டுபிடிப்புகளை உருவாக்குவதில் சீன விஞ்ஞானிகள்  கிள்ளாடிகள். முன்பு பயோ பேக் என்ற பெயரில் உருவாக்கப்பட்ட செயற்கை கருப்பையின் உதவியுடன் ஓர் ஆட்டுக்குட்டியை பெற்றெடுக்க சீன விஞ்ஞானிகள் வெற்றியீட்டினர்.   இந்நிலையில், கர்ப்பம் தரித்து, 10 மாதங்கள் குழந்தையை சுமந்து, பிரசவிக்கக்கூடிய மனித உருவ ரோபோக்களை சீன விஞ்ஞானிகள் உருவாக்கி வருகின்றனர். சிங்கப்பூரில் உள்ள நான்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டொக்டர் ஜாங் கெஃபெங் தலைமையிலான குழு உலகின் முதல் 'கர்ப்ப ரோபோவை' உருவாக்கி வருகிறது. சீன ஊடக அறிக்கைகளின்படி, கர்ப்ப ரோபோக்கள் தற்போது கிடைக்கும் இன்குபேட்டர்களுடன் தொடர்புடையவை அல்ல. இந்தக் கர்ப்ப ரோபோக்கள் தொழில்நுட்பத்தின் உதவியுடன் செயற்கையாக உருவாக்கப்பட்ட கருப்பைகளைக் கொண்டுள்ளன. செயற்கை அம்னோடிக் திரவத்தால் நிரப்பப்பட்ட இந்தச் செயற்கை கருப்பை, மனித கருப்பை போலவே செயல்படுகிறது. நிஜ வாழ்க்கையில், கருத்தரித்தல் முதல் பிரசவம் வரை முழு செயல்முறையும் கர்ப்ப ரோபோவின் கருப்பையில் நடைபெறுகிறது. கருப்பையில் குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் குழாய்கள் மூலம் வழங்கப்படுகின்றன. இந்த பயோ பேக் தொழில்நுட்பத்தை மேலும் மேம்படுத்துவதன் மூலம் கர்ப்ப ரோபோக்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. கர்ப்ப ரோபோக்களின் மாதிரி அடுத்த ஆண்டு தயாராக இருக்கும் என்றும் என்றும் டொக்டர் ஜாங் கூறினார்.

8 ஆண்டுகள் இல்லாத வகையில் இந்தியாவில் வரிக் குறைப்பு

எட்டு ஆண்டில் இல்லாத அளவுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி செய்திருக்கும் வரிக் குறைப்பை வர்த்தகச் சமூகம் வரவேற்றுள்ளது.   இந்திய அரசாங்கம் பொருள் சேவை வரியில் மிகப்பெரிய மாற்றத்தை அறிவித்துள்ளதால், அத்தியாவசியப் பொருள்கள், மின்னியல் பொருள்களின் விலை குறையும்.   அக்டோபர் மாதம் இந்த வரி மாற்றம் நடப்புக்கு வரும்் அமெரிக்கா, இந்தியா மீது வரும் 27ஆம் திகதி முதல் 50 சதவீத தீர்வையை அறிவித்திருக்கிறது. அதனால் ஏற்படும் பாதிப்பைச் சமாளிக்க இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கிறது.   நேற்று முன்தினம் இந்தியச் சுதந்திர தினத்தன்று பேசிய பிரதமர் மோடி, உள்நாட்டுப் பொருள்களை வாங்கும்படி மக்களைக் கேட்டுக்கொண்டதுடன், இந்தியா வெளிநாட்டைச் சார்ந்திருப்பதைத் தவிர்க்கவேண்டும் என்றார்.

ஓகஸ்ட் மாதத்தில் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை எகிறியது

ஓகஸ்ட் மாதத்தில் இதுவரையான காலப்பகுதியில் 99,406 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தகவல்கள் தெரிவிக்கின்றன.  இந்தியாவில் இருந்து மொத்தம் 19,572 சுற்றுலாப் பயணிகள் இந்த மாதம் நாட்டுக்கு வருகை தந்துள்ளதுடன், மொத்த எண்ணிக்கையில் இது 19.7% ஆகும்.  ஐக்கிய இராச்சியத்திலிருந்து 10,970 பேரும், இத்தாலியிலிருந்து 7,641 பேரும், பிரான்சிலிருந்து 6,870 பேரும், சீன நாட்டினர் 6,762 பேரும் வந்துள்ளனர். இதேவேளை, 2025 ஆம் ஆண்டில் இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் மொத்த எண்ணிக்கை 1,467,694 ஆக அதிகரித்துள்ளது.  அவர்களில், 268,694 பேர் இந்தியர்கள். ஐக்கிய இராச்சியத்திலிருந்து 142,347 பேரும், ரஷ்யாவிலிருந்து 117,322 பேரும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

பாடசாலை ஆரம்பம் குறித்து கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு

அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார்  பாடசாலைகளின் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைக நாளை ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.   தமிழ் மற்றும் சிங்களம் மொழி மூல பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளே நாளை(18) ஆரம்பமாகவுள்ளன.   முஸ்லிம் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 25 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படும்.   குறித்த பாடசாலைகளின் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் கடந்த 7 ஆம் திகதி நிறைவடைந்தன.   ஒரு வார விடுமுறையின் பின்னர்  3 ஆம் தவணை கற்றல் நடவடிக்கைகள் நாளை (18) ஆரம்பமாகவுள்ளன.  

இலங்கை

View more
தடைப்பட்டிருந்த போக்குவரத்து வழமைக்கு திரும்பியது

(க.கிஷாந்தன்) மலையக பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக நோர்டன்பிரிட்ஜ், மஸ்கெலியா மற்றும் லக்சபான பிரதான வீதியில் மண்மேடு சரிந்து விழுந்து பாதிக்கப்பட்டிருந்த பிரதான போக்குவரத்து தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதாக நோர்டன்பிரிட்ஜ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.   நேற்று மாலை நோர்டன்பிரிட்ஜ் பெட்ரோல் நிரப்பும் நிலையத்திற்கு அருகில் மண் மேடு சரிந்தது. பின்னர் லக்சபான இராணுவ முகாம், நோர்டன்பிரிட்ஜ் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் நோர்வூட் வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள் ஆகியோரால் குறித்த மண்மேடு அகற்றப்பட்டது, அதன் பின்னர் வீதியின் போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பியது.   தொடர்ந்து பெய்யும் மழை காரணமாக மண்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதால், மத்திய மலைநாட்டில் உள்ள பிரதான மற்றும் சிறிய வீதிகளில் வாகனம் ஓட்டும்போது கவனமாக இருக்குமாறு நோர்டன்பிரிட்ஜ் பொலிஸார் சாரதிகளை அறிவுறுத்தியுள்ளனர்.

Admin ஆகஸ்ட் 18, 2025 0
இசை நிகழ்வு

நல்லூர் திருவிழாவை முன்னிட்டு யாழில் இசை நிகழ்வு

யாழ்ப்பாணத்தில் ஹர்த்தால் நிலவரம்

பணிப்புறக்கணிப்பு

தபால் தொழிற்சங்கத்தின் பணிப்புறக்கணிப்பு தொடர்கின்றது

ஹர்த்தால்
இளைஞனின் மரணத்துக்கு நீதிகேட்டு வடக்கு, கிழக்கில் இன்று ஹர்த்தால்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று (18) திங்கட்கிழமை ஹர்த்தால் முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சி தெரிவித்துள்ளது.   முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் இராணுவ முகாமுக்குள் நுழைந்த இளைஞன், முத்துஐயன்கட்டு குளத்தில் உயிரிழந்து கிடந்த சம்பவம் தொடர்பில் இந்த ஹர்த்தால் முன்னெடுக்கப்படுகின்றது.   குறித்த சம்பவம் தொடர்பில் இரண்டு விசேட பொலிஸ் குழுக்கள் விசாரணை நடத்தி வருவதுடன், மூன்று இராணுவ சிப்பாய்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.    இந்த நிலையில், இளைஞனின் மரணத்திற்கு நீதி கோரி இன்று வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஹர்த்தால் நடத்த திட்டமிட்டுள்ளதாக தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார்.    அத்துடன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகியவை இந்த ஹர்த்தாலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.    வடக்கு, கிழக்கில் அளவுக்கு அதிகமான இராணுவப் பிரசன்னம் மற்றும் இராணுவ அடக்குமுறைகளுக்கு எதிராக இன்று (18) ஹர்த்தால் திட்டமிட்டபடி முன்னெடுக்கப்படும் எனவும், அது பலரின் நன்மை கருதி காலையில் மாத்திரம் நடைபெறும் எனவும் இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

Admin ஆகஸ்ட் 18, 2025 0
மழை

நாட்டின் பல இடங்களில் இன்றும் மழை பெய்யும்

பாடசாலை

மூன்றாம் தவணை பாடசாலை நடவடிக்கை இன்று ஆரம்பம்

Kumanan

ஊடகவியலாளர் குமணனிடம் சுமார் 7 மணித்தியாலங்களுக்கு மேல் விசாரணை!

நாட்டில் நீரில் மூழ்கி உயிரிழப்போர் தொகை அதிகரிப்பு!

நாடளாவிய ரீதியில் நீரில் மூழ்கி உயிரிழப்போர் தொகை அதிகரித்து வருவதாக இலங்கை பொலிஸ் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.    இது தொடர்பில் பொலிஸ் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இவ்வாண்டின் இதுவரையான காலப்பகுதியில் 257 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.    இவ்வாறு உயிரிழந்தவர்களில் 220 ஆண்களும் 37 பெண்களும் அடங்குவர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் உதவி அத்தியட்சகருமான (ASP) எஃப்.யு. வூட்லர் கூறினார்.    இதேவேளை, நீரில் மூழ்கிய 102 பேரை பொலிஸ் உயிர்காக்கும் பிரிவு மீட்டுள்ளது. இதில் 69 உள்ளூர் சுற்றுலாப் பயணிகள் மற்றும் 33 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அடங்குவர் என்றும் எஃப்.யு. வூட்லர் மேலும் கூறினார். 

Admin ஆகஸ்ட் 17, 2025 0

செயற்கை நுண்ணறிவு குறித்து அரச அதிகாரிகளுக்கு செயலமர்வு

பொலிஸ்மா அதிபர்

பாதாள உலக குழுக்களை ஒடுக்க விசேட திட்டம் - பொலிஸ்மா அதிபர்

ஓமந்தை விபத்தில் குறைந்தது இருவர் பலி: பலர் படுகாயம்

0 Comments