எட்டு ஆண்டில் இல்லாத அளவுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி செய்திருக்கும் வரிக் குறைப்பை வர்த்தகச் சமூகம் வரவேற்றுள்ளது.
இந்திய அரசாங்கம் பொருள் சேவை வரியில் மிகப்பெரிய மாற்றத்தை அறிவித்துள்ளதால், அத்தியாவசியப் பொருள்கள், மின்னியல் பொருள்களின் விலை குறையும்.
அக்டோபர் மாதம் இந்த வரி மாற்றம் நடப்புக்கு வரும்் அமெரிக்கா, இந்தியா மீது வரும் 27ஆம் திகதி முதல் 50 சதவீத தீர்வையை அறிவித்திருக்கிறது. அதனால் ஏற்படும் பாதிப்பைச் சமாளிக்க இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கிறது.
நேற்று முன்தினம் இந்தியச் சுதந்திர தினத்தன்று பேசிய பிரதமர் மோடி, உள்நாட்டுப் பொருள்களை வாங்கும்படி மக்களைக் கேட்டுக்கொண்டதுடன், இந்தியா வெளிநாட்டைச் சார்ந்திருப்பதைத் தவிர்க்கவேண்டும் என்றார்.
ஓகஸ்ட் மாதத்தில் இதுவரையான காலப்பகுதியில் 99,406 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் இருந்து மொத்தம் 19,572 சுற்றுலாப் பயணிகள் இந்த மாதம் நாட்டுக்கு வருகை தந்துள்ளதுடன், மொத்த எண்ணிக்கையில் இது 19.7% ஆகும். ஐக்கிய இராச்சியத்திலிருந்து 10,970 பேரும், இத்தாலியிலிருந்து 7,641 பேரும், பிரான்சிலிருந்து 6,870 பேரும், சீன நாட்டினர் 6,762 பேரும் வந்துள்ளனர். இதேவேளை, 2025 ஆம் ஆண்டில் இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் மொத்த எண்ணிக்கை 1,467,694 ஆக அதிகரித்துள்ளது. அவர்களில், 268,694 பேர் இந்தியர்கள். ஐக்கிய இராச்சியத்திலிருந்து 142,347 பேரும், ரஷ்யாவிலிருந்து 117,322 பேரும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
எட்டு ஆண்டில் இல்லாத அளவுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி செய்திருக்கும் வரிக் குறைப்பை வர்த்தகச் சமூகம் வரவேற்றுள்ளது. இந்திய அரசாங்கம் பொருள் சேவை வரியில் மிகப்பெரிய மாற்றத்தை அறிவித்துள்ளதால், அத்தியாவசியப் பொருள்கள், மின்னியல் பொருள்களின் விலை குறையும். அக்டோபர் மாதம் இந்த வரி மாற்றம் நடப்புக்கு வரும்் அமெரிக்கா, இந்தியா மீது வரும் 27ஆம் திகதி முதல் 50 சதவீத தீர்வையை அறிவித்திருக்கிறது. அதனால் ஏற்படும் பாதிப்பைச் சமாளிக்க இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கிறது. நேற்று முன்தினம் இந்தியச் சுதந்திர தினத்தன்று பேசிய பிரதமர் மோடி, உள்நாட்டுப் பொருள்களை வாங்கும்படி மக்களைக் கேட்டுக்கொண்டதுடன், இந்தியா வெளிநாட்டைச் சார்ந்திருப்பதைத் தவிர்க்கவேண்டும் என்றார்.
அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைக நாளை ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. தமிழ் மற்றும் சிங்களம் மொழி மூல பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளே நாளை(18) ஆரம்பமாகவுள்ளன. முஸ்லிம் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 25 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படும். குறித்த பாடசாலைகளின் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் கடந்த 7 ஆம் திகதி நிறைவடைந்தன. ஒரு வார விடுமுறையின் பின்னர் 3 ஆம் தவணை கற்றல் நடவடிக்கைகள் நாளை (18) ஆரம்பமாகவுள்ளன.
பாதாள உலக குழு நடவடிக்கைகளை ஒடுக்குவதற்கு சிறந்த திட்டம் ஒன்று செயல்படுத்தப்பட்டு வருவதாக பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்தார். முப்படைகள் மற்றும் பொதுமக்களின் ஆதரவுடன் குற்றங்களை அடக்குவதற்குத் தாம் பணியாற்றி வருவதாக, கண்டியில் இன்று மகாநாயக்க தேரர்களைச் சந்தித்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் கூறினார். சில பாதாள உலக குழு நடவடிக்கைகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் அரசியல் ஆதரவுகளையும், சில பொலிஸ் அதிகாரிகளின் ஆதரவையும் பெற்றுள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார். எனினும், எந்தவொரு குற்றத்தையும் மறைக்கவோ அல்லது புறக்கணிக்கவோ தன்னிடமிருந்து ஒருபோதும் உத்தரவுகள் வராது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வவுனியா – யாழ்ப்பாணம் பிரதான வீதியின் ஓமந்தை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்தனர். இந்த விபத்து இன்று (17) இரவு ஏற்பட்டுள்ளதுடன், குறித்த விபத்தில் பலர் படுகாயமடைந்துள்ளனர். கெப் ரக வாகனம் மற்றும் லொறி என்பன நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதுடன், விபத்தில் படுகாயமடைந்தவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை தகவல்கள் குறிப்பிடுகின்றன.