விளையாட்டு

ஒருநாள் தொடர்- தென் ஆப்பிரிக்கா அணியில் இணைந்த க்வேனா மபாகா

Admin ஆகஸ்ட் 19, 2025 0

தென் ஆப்பிரிக்கா அணி, ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளது. முதலில் நடந்த டி20 தொடரை ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. 

இதனை தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடர் இன்று தொடங்குகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் வேகப்பந்து வீச்சாளர் க்வேனா மபாகா தென் ஆப்பிரிக்கா அணியில் இணைந்துள்ளார்.

டி20 தொடரில் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தியதன் மூலம் இந்த வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது. அவர் 3 டி20 போட்டிகளில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

AUSvSA Kwena-Maphaka ஆஸ்திரேலியா தென்-ஆப்பிரிக்கா க்வேனா-மபாகா
Popular post
இலங்கைக்கு வந்த 15 வயது துணை விமானி!

உலகைச் சுற்றி வந்த இளைய துணை விமானியாக மாறுவதற்கான வரலாற்று முயற்சியில் இறங்கியுள்ள அவுஸ்திரேலியா - பிரிஸ்பேனைச் சேர்ந்த 15 வயதான பைரல் வொல்லர் (Byron Waller) இலங்கை வந்துள்ளார். கொழும்பு, இரத்மலானை விமான நிலையத்தை நேற்று முன்தினம் (17)  வந்தடைந்த அவரை, விமான நிலைய அதிகாரிகள் வரவேற்றனர். இந்தியப் பெருங்கடலில் 11 மணி நேர விமானப் பயணத்திற்குப் பின்னர் நேற்று முன்தினம் பைரன் வாலர் விமான நிலையத்தை வந்தடைந்ததார். பைரன், 45,000 கிலோ மீட்டர்கள், 7 கண்டங்களிலும் 30 நாடுகளை சுற்றிவர சுமார் 2 மாதங்கள் எடுக்கும் ஒரு பயணத்தை மேற்கொள்கிறார். 

கொழும்பில் துப்பாக்கிச்சூடு; ஒருவர் உயிரிழப்பு

பேலியகொடை ஞானரத்ன மாவத்தை பகுதியில் இன்று (19) காலை நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த ஒருவர் உயிரிழந்தார். பேலியகொடை மீன் சந்தை வளாகத்தில் பணியாற்றும் தொழிலாளி மீது அடையாளம் தெரியாத இருவரால் இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இதன்போது, வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த மற்றொரு நபரும் துப்பாக்கிச்சூட்டுக்கு உள்ளாகியுள்ளார். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இருவரில் ஒருவர், கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

கழிவறையில் பெண் பயணி; கதவைத் திறந்து பார்த்த விமானி - விமானத்தில் நடந்த சம்பவம்

இண்டிகோ விமானத்தில் ஆகஸ்ட் 8 ஆம் திகதி மும்பையைச் சேர்ந்த ரியா சட்டர்ஜி என்ற பெண் பயணம் செய்துள்ளார். இந்தநிலையில் தான் விமானத்தின் கழிவறையில் இருந்தபோது, இணை விமானி ஒருவர் திடீரென கதவைத் திறந்துவிட்டதாகக் அப்பெண் குற்றம் சாட்டியுள்ளார்.  இந்த சம்பவம் அவர் தனது LinkedIn பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது தனக்கு அதிர்ச்சியையும் அவமானத்தையும் ஏற்படுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார். கதவைத் திறந்த இணை விமானி "ஓ" என்று சொல்லிவிட்டு உடனடியாக கதவை மூடிவிட்டதாகவும், பின்னர் விமானப் பணிப்பெண்கள் இந்த சம்பவத்தை அலட்சியம் செய்ததாகவும் அவர் குற்றம்சாட்டி உள்ளார்.  விமான ஊழியர்களின் இத்தகைய அலட்சியமான பதில் தனக்கு மேலும் மன உளைச்சலை ஏற்படுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார். சம்பவம் குறித்து விமான நிறுவனத்தின் தலைமை நிர்வாகக் குழுவுக்கு மின்னஞ்சல் அனுப்பியும், நிறுவனம் முறையாகப் பதிலளிக்கவில்லை என்றும், வருத்தம் தெரிவிப்பதற்குப் பதிலாக, இது ஒரு சாதாரண சிரமம் என்று கூறியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தனக்கு இழப்பீடு வேண்டாம் என்றும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க விழிப்புணர்வு ஏற்படுத்துவதே தனது நோக்கம் என்றும் சட்டர்ஜி தெரிவித்துள்ளார். இண்டிகோ நிறுவனம் இந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டு, சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.  

கட்டுநாயக்கவில் 1,338 சுற்றுலாப் பயணிகளுக்கு சாரதி அனுமதிப்பத்திரம்!

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்கள அலுவலகத்தின் ஊடாக 1,338 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு சாரதி அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டினருக்கு சுய போக்குவரத்தை எளிதாக்கும் வகையில், கடந்த 3ஆம் திகதி சாரதி அனுமதிப் பத்திரங்களை வழங்குவதற்கான கருமபீடம் ஒன்று நிறுவப்பட்டது. இதற்கு முன்னர், வெளிநாட்டினர் சாரதி அனுமதிப் பத்திரங்களைப் பெற வேரஹேரவில் உள்ள மோட்டார் வாகன ஆணையாளர் அலுவலகத்திற்கு செல்ல வேண்டியிருந்தது. இந்நிலையில், கடந்த 3ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 1,338 சாரதி அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், கடந்த 7ஆம் திகதி அதிகளவான சாரதி அனுமதிப் பத்திரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டினருக்கு ரூ. 2,000 என்ற குறைந்த கட்டணத்தில் சாரதி அனுமதிப் பத்திரங்களை வழங்குவது தொடர்பில் இலங்கை சுற்றுலா சாரதிகளின் ஒன்றியம் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. குறித்த நடைமுறை காரணமாக, அந்தத் தொழிலை நம்பியிருப்போர் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக அந்தச் சங்கத்தின் பிரதிநிதி அமில கோரலகே குறிப்பிட்டுள்ளார்.

பெண்கள் மாதவிடாய் நேரத்தில் இந்த உணவுகளை தவிர்க்கவும்!

பெண்களுக்கு மாதவிடாய் என்பது ஓர் இயற்கையான மற்றும் அவசியமான உடல் செயல்பாடு. பொதுவாக 28 நாட்களுக்கு ஒருமுறை ஏற்படும் இந்த சுழற்சி ஒவ்வொருவருக்கும் சிறிய வித்தியாசத்துடன் இருக்கலாம். இந்த நாட்களில் பெண்கள் உடலிலும், மனநிலையிலும் மாற்றங்களை அனுபவிப்பது இயல்பானது. இந்நிலையில், சரியான உணவுப் பழக்கங்கள் மிகவும் முக்கியம். சில உணவுகள் மாதவிடாய் காலத்தில் உள்ள உடல் மற்றும் மன சிரமங்களை அதிகமாக்கும் என்று உணவியல் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். உணவியல் நிபுணர் ஸ்வேதா ஷா பஞ்சால் கூறும்ப்படி, பீரியட் காலத்தில் தவிர்க்க வேண்டிய சில உணவுகள் பற்றிய விபரத்தை இங்கே பார்ப்போம்:   🛑 1. சிப்ஸ் மற்றும் வேபர்கள் இந்த வகை பொருத்த உணவுகளில் உப்பு அளவு அதிகம். இது வயிற்று உப்புசம் மற்றும் நீர் தேக்கம் ஆகியவற்றை அதிகரிக்கச் செய்யும். இவை வயிற்றுப்பிடிப்பு மற்றும் களைப்பை தீவிரமாக்கும்.   🛑 2. பிஸ்கட் மற்றும் இனிப்புகள் அதிக சர்க்கரை உள்ள பிஸ்கட், கேக், மற்றும் இனிப்பு வகைகள் இன்சுலின் நிலையை பாதிக்கும். இதனால் ஹார்மோன் சமநிலை சீரழியக்கூடும். மனநிலை மாற்றங்கள், தூக்கமின்மை போன்றவை ஏற்படலாம்.   🛑 3. கோலா மற்றும் குளிர்பானங்கள் இந்த வகை பானங்களில் கொலா, சோடா, ஆர்டிஃபிஷியல் சுவையூட்டிகள் உள்ளன. இவை உடலில் நீர்ச்சத்தைக் குறைத்து, கடுமையான வயிற்று வலிகளை தூண்டும். உடல் அதிகம் களைப்பாகி போக வாய்ப்பு அதிகம்.   🛑 4. பேஸ்ட்ரி மற்றும் பேக்கிங் உணவுகள் பேஸ்ட்ரி, குக்கீஸ் போன்றவை ட்ரான்ஸ் கொழுப்புகள் மற்றும் சர்க்கரை அதிகமாக கொண்டவை. இது செரிமானத்தை மெதுவாக்கும் மற்றும் வயிற்றில் எரிச்சல் ஏற்படுத்தும். பீரியட் வலிகள் அதிகமாகலாம்.   🛑 5. காரமான மற்றும் எண்ணெய் பொரித்த உணவுகள் பஜ்ஜி, வடை, சாமோசா போன்றவையும் சேர்க்கலாம். இவை குடலை எரிச்சலடையச் செய்து, உடலில் அசௌகரியம் மற்றும் அவசதியை அதிகரிக்கும்.   ✅ பொருத்தமான மாற்றங்கள் – சிறந்த ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும்! ஸ்வேதா கூறுவது போல், சிறிய உணவுப் பழக்கங்களை மாற்றுவதன் மூலம், பெரிய மாற்றங்களை உங்கள் உடல் உணரும். இருப்பினும், பீரியட் காலத்தில் உணவு: எளிதில் செரிபாகக்கூடியது, உடலில் நீர்ச்சத்தை சரியாக வைத்திருக்கக்கூடியது, ஹார்மோன் சமநிலையை காக்கக்கூடியது ஆக இருக்க வேண்டும்.   🌸 மாதவிடாய் என்பது ஒரு இயற்கையான நடைமுறை. அந்த நாட்களில் சரியான உணவுப் பழக்கங்களைப் பின்பற்றி, தேவையான ஓய்வு எடுத்தால், நீங்கள் உடல் மற்றும் மனதளவில் நலமாக இருக்க முடியும். உடலைக் கேளுங்கள் – தேவையானதை மட்டும் கொடுங்கள்.   இதைப் பகிர்ந்து ஏனைய பெண்களுக்கும் இந்த முக்கியமான தகவலை கொண்டு சேர்த்துவிடுங்கள்!   மாதவிடாய் சுகாதார தினம் (மே 28) நமக்கு நினைவூட்டுவது ஒன்று தான் – ஆரோக்கியம் ஆரம்பம் உணவில்தான்!

விளையாட்டு

View more
ஒருநாள் தொடர்- தென் ஆப்பிரிக்கா அணியில் இணைந்த க்வேனா மபாகா

தென் ஆப்பிரிக்கா அணி, ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளது. முதலில் நடந்த டி20 தொடரை ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.  இதனை தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடர் இன்று தொடங்குகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் வேகப்பந்து வீச்சாளர் க்வேனா மபாகா தென் ஆப்பிரிக்கா அணியில் இணைந்துள்ளார். டி20 தொடரில் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தியதன் மூலம் இந்த வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது. அவர் 3 டி20 போட்டிகளில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Admin ஆகஸ்ட் 19, 2025 0
ஆசிய கோப்பை

ஆசிய கோப்பை: இந்திய அணியை தேர்வு செய்த ஹர்பஜன்

ஆசிய கோப்பை: கில்- ஜெய்ஸ்வாலுக்கு இடமில்லை.. முன்னாள் வீரர் அதிரடி

ஆசிய கோப்பை பாகிஸ்தான் அணியில் இருந்து நீக்கப்பட்ட பாபர் அசாம்

0 Comments