தபால் ஊழியர்கள் ஆரம்பித்துள்ள நாடு தழுவிய வேலைநிறுத்தம் இன்று (23) ஆறாவது நாளாக தொடர்கின்றது.
மத்திய தபால் பரிமாற்றகத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ள தபால் பொதிகளை அனுமதியின்றி அகற்றுவது தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஐக்கிய தபால் தொழிற்சங்க முன்னணியின் இணை அமைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்தார்.
19 கோரிக்கைகளை முன்வைத்து ஞாயிற்றுக்கிழமை (17) வேலைநிறுத்தம் தொடங்கப்பட்டது.
கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, கோட்டை நீதவான் நீதிமன்றத்தைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நான்கு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த வாக்குமூலத்திற்குப் பிறகு, விக்ரமசிங்க கைது செய்யப்பட்டார். இதனையடுத்து, அவர் விரைவில் அவர் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சீனாவின் ஷான்சி மாகாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு, மோசடி வழக்கில் 2020ஆம் ஆண்டில் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது அவர் கர்ப்பமாக இருந்ததால், சிறைக்கு வெளியே தண்டனை அனுபவிக்க அனுமதிக்கப்பட்டார். இப்படி ஒரு வசதி இருப்பதைப் பயன்படுத்தி, ஒவ்வொரு முறையும் தனது மகப்பேறு காலம் முடிவடையும்போது அவர் மீண்டும் மீண்டும் கர்ப்பம் தரித்து வந்துள்ளார். இவ்வாறு, அவர் கடந்த 4 ஆண்டுகளில் 3 முறை கர்ப்பம் தரித்து சிறைக்கு போவதை தவிர்த்து வந்துள்ளார். இந்நிலையில், இந்து தொடர்பில் நடத்திய விசாரணையில், சிறைக்கு செல்வதை தவிர்க்க அவர் அவ்வாறு செய்வது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவரை கைது செய்து பொலிஸார் சிறையில் அடைத்தனர். அப்பெண், தான் பெற்ற 3 குழந்தைகளில் 2 குழந்தைகளை விவாகரத்தான கணவரிடமும், மேலும் ஒரு குழந்தையை அவரது சகோதரரிடமும் கொடுத்துள்ளார். சீனாவின் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி, ஒரு பெண் குற்றவாளி கர்ப்பமாக இருந்தால் அல்லது ஒரு குழந்தைக்கு பாலூட்டினால் அவருக்கு வீட்டுக் காவல் வழங்கப்படுகிறது.
நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகத்தின் 2ஆவது மாநாடு, மதுரையில் நாளை வியாழக்கிழமை (21) நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளின் கட்சித் தொண்டர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மதுரை மாநாட்டு திடலில் த.வெ.க.வின் 100 அடி கொடிக்கம்பத்தை இன்று (20) நட ஏற்பாடு செய்யப்பட்டது. இதனால், கிரேன் மூலம் கொடிக்கம்பம் நிறுத்தும் பணி நடைபெற்று வந்தது. அப்போது, யாரும் எதிர்பாராத நேரத்தில், கிரேனின் பெல்ட் திடீரென அறுந்ததில், கொடிக்கம்பம் சாய்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது. கொடிக்கம்பம் சாய்ந்து கார் ஒன்றின் மீது விழுந்ததால், கார் சுக்கு நூறாக நொறுங்கியது. இந்த விபத்தால் மதுரை மாநாட்டு திடலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விபத்தில் யாருக்கும் உயிர் சேதம் இல்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.
உலகைச் சுற்றி வந்த இளைய துணை விமானியாக மாறுவதற்கான வரலாற்று முயற்சியில் இறங்கியுள்ள அவுஸ்திரேலியா - பிரிஸ்பேனைச் சேர்ந்த 15 வயதான பைரல் வொல்லர் (Byron Waller) இலங்கை வந்துள்ளார். கொழும்பு, இரத்மலானை விமான நிலையத்தை நேற்று முன்தினம் (17) வந்தடைந்த அவரை, விமான நிலைய அதிகாரிகள் வரவேற்றனர். இந்தியப் பெருங்கடலில் 11 மணி நேர விமானப் பயணத்திற்குப் பின்னர் நேற்று முன்தினம் பைரன் வாலர் விமான நிலையத்தை வந்தடைந்ததார். பைரன், 45,000 கிலோ மீட்டர்கள், 7 கண்டங்களிலும் 30 நாடுகளை சுற்றிவர சுமார் 2 மாதங்கள் எடுக்கும் ஒரு பயணத்தை மேற்கொள்கிறார்.
கொழும்பு (News21Tamil) - முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் இன்று புதன்கிழமை (20) கைது செய்யப்பட்டுள்ளார். காலி முகத்திடல் மற்றும் அலரி மாளிகைக்கு அருகில் 2022 மே 09ஆம் திகதி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக இந்தச் சம்பவம் தொடர்பில் தாம் கைதுசெய்யப்படுவதை, தவிர்க்கும் வகையில் முன்பிணை வழங்குமாறு தேசபந்து தென்னகோன் நீதிமன்றைக் கோரியிருந்தார். எனினும், அவரது முன்பிணை கோரிக்கையை, கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர நிராகரித்தார். இந்நிலையிலேயே, குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
தபால் ஊழியர்கள் ஆரம்பித்துள்ள நாடு தழுவிய வேலைநிறுத்தம் இன்று (23) ஆறாவது நாளாக தொடர்கின்றது. மத்திய தபால் பரிமாற்றகத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ள தபால் பொதிகளை அனுமதியின்றி அகற்றுவது தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஐக்கிய தபால் தொழிற்சங்க முன்னணியின் இணை அமைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்தார். 19 கோரிக்கைகளை முன்வைத்து ஞாயிற்றுக்கிழமை (17) வேலைநிறுத்தம் தொடங்கப்பட்டது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (22) கைது செய்யப்பட்டுள்ளார். ரணில் விக்ரமசிங்க இன்று காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜரானார். ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில் தனது மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள இலண்டனுக்குச் சென்றது தொடர்பான விசாரணை தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு ரணில் விக்ரமசிங்கவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர் குமணன், பயங்கரவாத விசாரணைப் பிரிவால் கடுமையாக அச்சுறுத்தப்பட்டு மிரட்டப்பட்டிருக்கிறார். அத்துடன், பயங்கரவாத விசாரணைப் பிரிவின் விசாரணைகளுக்கு செல்லும் வட மாகாண ஊடகவியலாளர்களுக்கு ஆதரவாகக் கூட அவர்களுடன் செல்ல முடியாத நிலையில் ஊடகவியலாளர்கள் இருக்கிறார்கள். இந்த நிலையில், குமணனுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு வெளியிட்டும், வடக்கு-கிழக்கு ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட உள்ளது. ஆகஸ்ட் 22ஆம் திகதியான இன்று காலை 9 மணிக்கு பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது. இதனை, ஊடக ஊழியர் தொழிற்சங்க சம்மேளனம் மற்றும் இளம் ஊடகவியலாளர் சங்கம் என்பன ஏற்பாடு செய்துள்ளதுடன், அனைவரையும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.