அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்கப் பாதுகாப்புத் துறையான பென்டகனின் பெயரை 'போர் துறை' (Department of War) என மாற்றுவதற்கான ஒரு நிர்வாக உத்தரவில் வெள்ளிக்கிழமை கையெழுத்திடுவார் என்று கூறப்படுகிறது.
இந்த பெயர் மாற்றம் அமெரிக்க இராணுவத்தின் "வலிமை மற்றும் உறுதிப்பாட்டை" வெளிப்படுத்தும் என அவர் கருதுகிறார்.
டொனால்ட் டிரம்பின் கூற்றுப்படி, 'பாதுகாப்புத் துறை' (Department of Defense) என்பது தற்காப்புத் திறன்களை மட்டுமே வலியுறுத்துகிறது, ஆனால் 'போர் துறை' என்ற பெயர் "தயார்நிலை மற்றும் உறுதிப்பாடு" பற்றிய வலுவான செய்தியைத் தெரிவிக்கிறது. பென்டகன், 1789 இல் நிறுவப்பட்டு 1947 வரை செயல்பட்ட போர் துறையின் (War Department) வாரிசு ஆகும்.
இந்த நிர்வாக ஆணையின்படி, பாதுகாப்புத் துறைக்கு 'போர் துறை' என்ற புதிய பெயர் ஒரு இரண்டாம் நிலைப் பெயராகப் பயன்படுத்தப்படும். மேலும், பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்ஸெத் 'போர்ச் செயலர்' (Secretary of War) என்று அழைக்கப்படுவார் என்றும் டிரம்ப் உத்தரவிடுவார்.
டிரம்ப் இதற்கு முன்னர் இந்தப் பெயர் மாற்றம் குறித்து பேசியுள்ளார், முந்தைய 'போர் துறை' என்ற பெயரின் கீழ் அமெரிக்கா இரண்டு உலகப் போர்களிலும் "நம்பமுடியாத வெற்றி வரலாற்றைக்" கொண்டிருந்தது என்று அவர் வாதிட்டார்.
நிர்வாகத் துறைகளை உருவாக்குவது அமெரிக்க காங்கிரஸின் பொறுப்பு என்பதால், சட்டரீதியான பெயர் மாற்றத்திற்கு ஒரு திருத்தம் தேவைப்படும். இருப்பினும், டிரம்ப், காங்கிரஸ் இந்த மாற்றத்தை ஆதரிக்கும் என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளார்.
"இதற்கு தேவைப்பட்டால், காங்கிரஸ் ஒப்புக்கொள்ளும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்" என்று அவர் கடந்த வாரம் கூறினார்.
ஜோதிடத்தில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படுபடும் புதன், ஆகஸ்ட் மாதத்தில் மகம் நட்சத்திரத்திற்கு செல்லவுள்ளார். அதுவும் இந்த மக நட்சத்திரத்திற்கு ஆகஸ்ட் 30 ஆம் தேதி செல்லவிருக்கிறார். இந்த மகம் நட்சத்திரத்தில் புதன் செப்டம்பர் 06 ஆம் தேதி வரை இருப்பார். நட்சத்திரங்களில் மகம் 10 ஆவது நட்சத்திரமாகும். இது முன்னோர்களைக் குறிக்கிறது. மகம் நட்சத்திரத்தின் அதிபதி கேது. புதன் கேதுவின் நட்சத்திரத்திற்கு செல்வதால், அதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும். அதில் சில ராசிக்காரர்களுக்கு மோசமாக இருந்தாலும், சிலருக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு புதனின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. புத்திசாலித்தனத்தால் பல வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். இதுவரை உணர்வுகளை மற்றவர்களிடம் தெரிவிக்காமல் மறைத்திருந்தால், இக்காலத்தில் வெளிப்படுத்துவீர்கள். உங்களின் தைரியம் அதிகரிக்கும். மனதில் பட்டதை மறைக்காமல் வெளிப்படையாக பேசுவீர்கள். உணர்ச்சி ரீதியாக சிறப்பாக உணர்வீர்கள். வியாபாரிகளுக்கு சிறப்பாக இருக்கும். எடுக்கும் வேலைகளில் வெற்றி கிடைக்கும். சிம்மம் சிம்ம ராசிக்காரர்களுக்கு புதனின் நட்சத்திர பெயர்ச்சியால் தொழில் ரீதியாக சிறப்பாக இருக்கும். அறிவாற்றல் மேம்படும். புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வீர்கள். உங்களின் பேச்சு மிகவும் சுவாரஸ்மாக இருக்கும். பேச்சால் பல வேலைகளை சிறப்பாக முடிப்பீர்கள். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். நிதி நிலை மேம்படும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தேவையற்ற விஷயங்களில் நுழைந்து மன அழுத்தப்படுவதைத் தவிர்த்திடுங்கள். மேலும் இக்காலத்தில் மன அழுத்தத்தைக் குறைக்க யோகா, உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள். விருச்சிகம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு புதனின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கப் போகிறது. புத்திசாலித்தனம் அதிகரிக்கும். பேச்சால் பல வேலைகளில் வெற்றி பெறுவீர்கள். நீண்ட காலமாக இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். நிதி நிலை நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் ரீதியாக பல சிறப்பான பலன்களைப் பெறுவீர்கள். தொழிலதிபர்கள் எதிர்காலத்தில் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும்.
கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, கோட்டை நீதவான் நீதிமன்றத்தைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நான்கு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த வாக்குமூலத்திற்குப் பிறகு, விக்ரமசிங்க கைது செய்யப்பட்டார். இதனையடுத்து, அவர் விரைவில் அவர் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அணிகளை அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்து வரும் நிலையில், இந்திய அணி நாளைய தினம் அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்புகள் உள்ளன. இந்நிலையில் இத்தொடருக்கான இந்திய அணியை முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கணித்துள்ளார். இதில் சஞ்சு சாம்சனை அணியில் சேர்க்காமல் விட்டுவிட்டு ஷ்ரேயாஸ் ஐயருக்கு இடம் வழங்கியுள்ளார். அதே நேரத்தில் அவர் தனது அணியில் சுப்மன் கில்லையும் சேர்த்துள்ளார். இந்த தொடருக்கான இந்திய அணியில் கில் இடம்பிடிக்க மாட்டார் என்று கூறப்படும் நிலையில் கில் நிச்சயமாக ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் கில் இடம்பிடிப்பார் என்று ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். ஹர்பஜன் சிங் தேர்வு செய்த இந்திய அணி: யஷஸ்வி ஜெய்ஸ்வால், அபிஷேக் சர்மா, சுப்மான் கில், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஹர்திக் பாண்ட்யா, ஷ்ரேயாஸ் ஐயர், வாஷிங்டன் சுந்தர், கேஎல் ராகுல்/ரிஷப் பந்த், ரியான் பராக், குல்தீப் யாதவ், அக்ஸர் படேல், முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங், அர்ஷ்தீப் பும்ரா.
பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று விபத்துக்குள்ளானதில் பாடசாலை மாணவர்கள் இருவர் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் 13 பேர் காயமடைந்துள்ளனர். குளியாப்பிட்டி, வில்பொல பாலத்திற்கு அருகில் இன்று (27) காலை விபத்து இடம்பெற்றுள்ளது. பாடசாலை வேனுடன் டிப்பர் ஒன்று நேருக்கு நேர் மோதியமையால் விபத்து சம்பவித்துள்ளது. பாடசாலை வேன் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். காயமடைந்த 13 மாணவர்கள், குளியாப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பில் குளியாப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
“கச்சதீவை ஒருபோதும் இந்தியாவுக்கு விட்டுக்கொடுக்க மாட்டோம்” என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். கச்சதீவை மீட்டு, தமிழக கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைக்கு பிரதமர் மோடி தீர்வை வழங்க வேண்டும் என நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் அண்மையில் தெரிவித்திருந்தார். இதற்கு பதில் அளிக்கும் விதத்திலேயே, அமைச்சர் மேற்படி தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (27) நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகச் சந்திப்பில் இது தொடர்பில் கேள்விகள் கேட்கப்பட்டது. அதனையடுத்து கருத்து தெரிவித்த அமைச்சர் விஜித ஹேரத், “தென்னிந்தியாவில் இது தேர்தல் காலம். இக்காலத்தில் ஒவ்வொருவரும் ஒன்றைக் கூடுவர். இதை நாம் பொருட்படுத்தத் தேவையில்லை. “அரச மட்டத்தில் உத்தியோகபூர்வமாக எவரும் கருத்து வெளியிட்டிருந்தால் அது குறித்து கவனம் செலுத்தலாம். எனினும், கச்சதீவை இந்தியாவுக்கு நாம் ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம்” என அவர் மேலும் தெரிவித்தார்.
இலண்டன்: மறைந்த பிரித்தானிய ராணியின் உறவினர் டியூக் ஆஃப் கென்ட்டின் மனைவியான டியூசெஸ் ஆஃப் கென்ட் (Duchess of Kent), தனது 92வது வயதில் காலமானார் என்று பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது. அவர் கென்சிங்டன் அரண்மனையில் உள்ள தனது இல்லத்தில் வியாழக்கிழமை மாலை அமைதியாக உயிர் நீத்ததாக பக்கிங்ஹாம் அரண்மனை அறிக்கையில் தெரிவித்துள்ளது. பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்டுள்ள ஆழ்ந்த இரங்கல் செய்தியில், "டியூசெஸ் ஆஃப் கென்ட் அரச குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களுடன் சேர்ந்து அவரது மறைவை அனுசரிக்கிறோம். அவர் தனது வாழ்நாள் முழுவதும் தொடர்பு கொண்டிருந்த அமைப்புகள் மீதான பற்று, இசை மீதான ஆர்வம் மற்றும் இளைஞர்கள் மீதான அவரது பரிவு ஆகியவற்றை நினைவு கூர்ந்து வருந்துகிறோம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவுக்குப் பிறகு அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினராக இருந்த டியூசெஸ், அக்டோபர் 2024 இல் சக்கர நாற்காலியில் தோன்றியது அரிதான நிகழ்வாக இருந்தது. அவரது நினைவாக பக்கிங்ஹாம் அரண்மனையில் யூனியன் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. கதரின், 92, விம்பிள்டன் இறுதிப் போட்டிகளில் தோற்றவர்களை, குறிப்பாக 1993 இல் கண்ணீருடன் இருந்த ஜனா நோவோட்னாவைத் தேற்றியதற்காகவும், பல ஆண்டுகளாக சாம்பியன்ஷிப் போட்டிகளில் கோப்பைகளை வழங்கியதற்காகவும் அறியப்பட்டவர். அவர் மிஸ்ஸிஸ் கென்ட் என்று அழைக்கப்பட விரும்பினார் மற்றும் தனது 'HRH' பட்டத்தை துறந்தார். ஒரு தசாப்தத்திற்கும் மேலாக ஹல்லில் உள்ள ஒரு அரசு ஆரம்பப் பள்ளியில் இசை ஆசிரியராக பணியாற்ற ராயல் வாழ்க்கையிலிருந்து விலகினார். கத்தோலிக்க மதத்தை தீவிரமாகப் பின்பற்றிய டியூசெஸ், 1994 ஆம் ஆண்டில் கத்தோலிக்க மதத்திற்கு மாறிய முதல் அரச குடும்ப உறுப்பினர் ஆவார். இது 300 ஆண்டுகளுக்கும் மேலாக அரச குடும்பத்தில் நடந்த முதல் மதமாற்றமாகும். அவருக்கு அரச குடும்ப உறுப்பினர்கள், மன்னர் மற்றும் ராணி உட்பட, கத்தோலிக்க இறுதிச் சடங்குகள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது நவீன பிரிட்டிஷ் வரலாற்றில் அரச குடும்ப உறுப்பினருக்காக நடத்தப்படும் முதல் கத்தோலிக்க இறுதிச் சடங்காக இருக்கும்.
Netflixஇல் அதிகம் பார்க்கப்பட்ட திரைப்படமாக KPop Demon Hunters பதிவாகியுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த ஜூன் மாதம் வெளியான இந்தத் திரைப்படம் 236 மில்லியனுக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது. KPop Demon Hunters திரைப்படத்தின் பாடல்களும் மக்களிடையே மிகவும் பிரபலமாகியுள்ளது. இம்மாதத் தொடக்கத்தில் Golden hit என்ற பாடல் Billboard Hot 100 தரவரிசையில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. திரைப்பபடம் உருவாக்கப்பட்ட விதம், கொரியக் கலாசாரத்தைச் சித்தரித்த முறை ஆகியவற்றைப் பலரும் பாராட்டியுள்ளனர். Netflix - முதல் ஐந்து இடங்களில் உள்ள திரைப்படங்களின் விவர் இதோ: 1) KPop Demon Hunters 2) Red Notice 3) Carry-On 4) Don't Look Up 5) The Adam Project
மதுரை தவெக இரண்டாவது மாநில மாநாட்டில் ஆவேசமாக பேசிய விஜய், வேட்பாளர் பட்டியலை அறிவிப்பதாக கூறினார். இதனால், தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர். இதனையடுத்து, மதுரை கிழக்கு தொகுதி வேட்பாளர் விஜய் என்று அறிவித்துவிட்டு சில நொடிகள் இடைவெளி விட்டார். இதைக்கேட்ட தொண்டர்கள் ஆர்ப்பரித்தனர். ஆனால், அடுத்த நொடியே, அனைத்து தொகுதிகளிலும் நானே வேட்பாளராக நிற்பதாக கருதுங்கள். 234 தொகுதிகளிலும் விஜய்தான் உங்கள் சின்னம்.” என்று கூறினார். வேட்பாளர் பட்டியல் என்று கூறிவிட்டு தனது பெயரை விஜய் கூறியதும் உண்மையாகவே, போட்டியிடும் தொகுதியை விஜய் அறிவித்துவிட்டதாக நினைத்த தொண்டர்களுக்கு, சிறிது நேரம் கழித்துதான் விஜய் பேச்சின் சாராம்சம் புரிந்தது. மாநாட்டில் விஜய் மேலும் கூறுகையில், நான் ஒன்றும் அடைக்கலம் தேடி அரசியலுக்கு வரவில்லை. படைக்கலத்தோடு அரசியலுக்கு வந்து இருக்கிறேன். எல்லாவற்றிற்கும் தயாராகவே வந்துள்ளேன் என்றார்.