ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணியின் தொடக்க வீரர் பதும் நிஷங்கா சதம் விளாசி அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்துள்ளார்.
இலங்கை அணி, ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடுகின்றது.
இமுதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலை வகித்தது.
இந்த நிலையில் ஜிம்பாப்வே - இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.
இந்த போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணிக்கு பிரையன் பென்னட் மற்றும் பென் கரண் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பிரையன் பென்னட் 21 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த பிராண்டன் டெய்லரும் 20 ரன்களுடன் நடையைக் கட்டினார்.
இருப்பினும் மற்றொரு தொடக்க வீரரான பென் கரண் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தனது அரைசதத்தை கடந்த நிலையில், 9 பவுண்டரிகளுடன் 79 ரன்களைச் சேர்த்து தனது விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த வீரர்களும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
பின்னர் இணைந்த சிக்கந்தர் ரஸா மற்றும் கிளைவ் மடாண்டே இணை சிறப்பாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். இதில் மடாண்டே 36 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த சிக்கந்தர் ரஸா அரைசதம் கடந்து அசத்தியதுடன் 59 ரன்களைச் சேர்த்தார்.
இதனால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் ஜிம்பாப்வே அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 277 ரன்களைச் சேர்த்தது. இலங்கை அணி தரப்பில் துஷ்மந்தா சமீரா 3 விக்கெட்டுகளையும், அசிதா ஃபெர்னாண்டோ 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.
அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை அணிக்கு பதும் நிஷங்க சிறப்பான தொடக்கத்தை வழங்கினார். அதேசமயம் மறுமுனையில் களமிறங்கிய நுவனிந்து ஃபெர்னாண்டோ 14 ரன்களுக்கும், குசல் மெண்டிஸ் 5 ரன்களிலும், சதீர சமரவிக்ரம 31 ரன்களிலும் என விக்கெட்டுகளை இழந்தனர்.
பின்னர் நிஷங்கவுடன் இணைந்த கேப்டன் சரித் அசலங்க அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். இதில் சிறப்பாக விளையாடி வந்த நிஷங்க தனது சதத்தைப் பதிவுசெய்ய, மறுபக்கம் சரித் அசலங்கவும் அரைசதம் கடந்து அசத்தினர்.
இப்போட்டியில் நிஷங்க 16 பவுண்டரிகளுடன் 122 ரன்களையும், அசலங்க 7 பவுண்டரிகளுடன் 71 ரன்களையும் சேர்த்து ஆட்டமிழந்தர். இலங்கை அணி 49.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேவை வீழ்த்தி, 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை வென்றது.
இந்த போட்டியில் சதம் விளாசி அணியின் வெற்றிக்கு உதவிய பதும் நிஷங்க ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை வென்றார்.
ஜோதிடத்தில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படுபடும் புதன், ஆகஸ்ட் மாதத்தில் மகம் நட்சத்திரத்திற்கு செல்லவுள்ளார். அதுவும் இந்த மக நட்சத்திரத்திற்கு ஆகஸ்ட் 30 ஆம் தேதி செல்லவிருக்கிறார். இந்த மகம் நட்சத்திரத்தில் புதன் செப்டம்பர் 06 ஆம் தேதி வரை இருப்பார். நட்சத்திரங்களில் மகம் 10 ஆவது நட்சத்திரமாகும். இது முன்னோர்களைக் குறிக்கிறது. மகம் நட்சத்திரத்தின் அதிபதி கேது. புதன் கேதுவின் நட்சத்திரத்திற்கு செல்வதால், அதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும். அதில் சில ராசிக்காரர்களுக்கு மோசமாக இருந்தாலும், சிலருக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு புதனின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. புத்திசாலித்தனத்தால் பல வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். இதுவரை உணர்வுகளை மற்றவர்களிடம் தெரிவிக்காமல் மறைத்திருந்தால், இக்காலத்தில் வெளிப்படுத்துவீர்கள். உங்களின் தைரியம் அதிகரிக்கும். மனதில் பட்டதை மறைக்காமல் வெளிப்படையாக பேசுவீர்கள். உணர்ச்சி ரீதியாக சிறப்பாக உணர்வீர்கள். வியாபாரிகளுக்கு சிறப்பாக இருக்கும். எடுக்கும் வேலைகளில் வெற்றி கிடைக்கும். சிம்மம் சிம்ம ராசிக்காரர்களுக்கு புதனின் நட்சத்திர பெயர்ச்சியால் தொழில் ரீதியாக சிறப்பாக இருக்கும். அறிவாற்றல் மேம்படும். புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வீர்கள். உங்களின் பேச்சு மிகவும் சுவாரஸ்மாக இருக்கும். பேச்சால் பல வேலைகளை சிறப்பாக முடிப்பீர்கள். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். நிதி நிலை மேம்படும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தேவையற்ற விஷயங்களில் நுழைந்து மன அழுத்தப்படுவதைத் தவிர்த்திடுங்கள். மேலும் இக்காலத்தில் மன அழுத்தத்தைக் குறைக்க யோகா, உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள். விருச்சிகம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு புதனின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கப் போகிறது. புத்திசாலித்தனம் அதிகரிக்கும். பேச்சால் பல வேலைகளில் வெற்றி பெறுவீர்கள். நீண்ட காலமாக இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். நிதி நிலை நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் ரீதியாக பல சிறப்பான பலன்களைப் பெறுவீர்கள். தொழிலதிபர்கள் எதிர்காலத்தில் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும்.
கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, கோட்டை நீதவான் நீதிமன்றத்தைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நான்கு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த வாக்குமூலத்திற்குப் பிறகு, விக்ரமசிங்க கைது செய்யப்பட்டார். இதனையடுத்து, அவர் விரைவில் அவர் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அணிகளை அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்து வரும் நிலையில், இந்திய அணி நாளைய தினம் அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்புகள் உள்ளன. இந்நிலையில் இத்தொடருக்கான இந்திய அணியை முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கணித்துள்ளார். இதில் சஞ்சு சாம்சனை அணியில் சேர்க்காமல் விட்டுவிட்டு ஷ்ரேயாஸ் ஐயருக்கு இடம் வழங்கியுள்ளார். அதே நேரத்தில் அவர் தனது அணியில் சுப்மன் கில்லையும் சேர்த்துள்ளார். இந்த தொடருக்கான இந்திய அணியில் கில் இடம்பிடிக்க மாட்டார் என்று கூறப்படும் நிலையில் கில் நிச்சயமாக ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் கில் இடம்பிடிப்பார் என்று ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். ஹர்பஜன் சிங் தேர்வு செய்த இந்திய அணி: யஷஸ்வி ஜெய்ஸ்வால், அபிஷேக் சர்மா, சுப்மான் கில், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஹர்திக் பாண்ட்யா, ஷ்ரேயாஸ் ஐயர், வாஷிங்டன் சுந்தர், கேஎல் ராகுல்/ரிஷப் பந்த், ரியான் பராக், குல்தீப் யாதவ், அக்ஸர் படேல், முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங், அர்ஷ்தீப் பும்ரா.
பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று விபத்துக்குள்ளானதில் பாடசாலை மாணவர்கள் இருவர் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் 13 பேர் காயமடைந்துள்ளனர். குளியாப்பிட்டி, வில்பொல பாலத்திற்கு அருகில் இன்று (27) காலை விபத்து இடம்பெற்றுள்ளது. பாடசாலை வேனுடன் டிப்பர் ஒன்று நேருக்கு நேர் மோதியமையால் விபத்து சம்பவித்துள்ளது. பாடசாலை வேன் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். காயமடைந்த 13 மாணவர்கள், குளியாப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பில் குளியாப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
“கச்சதீவை ஒருபோதும் இந்தியாவுக்கு விட்டுக்கொடுக்க மாட்டோம்” என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். கச்சதீவை மீட்டு, தமிழக கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைக்கு பிரதமர் மோடி தீர்வை வழங்க வேண்டும் என நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் அண்மையில் தெரிவித்திருந்தார். இதற்கு பதில் அளிக்கும் விதத்திலேயே, அமைச்சர் மேற்படி தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (27) நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகச் சந்திப்பில் இது தொடர்பில் கேள்விகள் கேட்கப்பட்டது. அதனையடுத்து கருத்து தெரிவித்த அமைச்சர் விஜித ஹேரத், “தென்னிந்தியாவில் இது தேர்தல் காலம். இக்காலத்தில் ஒவ்வொருவரும் ஒன்றைக் கூடுவர். இதை நாம் பொருட்படுத்தத் தேவையில்லை. “அரச மட்டத்தில் உத்தியோகபூர்வமாக எவரும் கருத்து வெளியிட்டிருந்தால் அது குறித்து கவனம் செலுத்தலாம். எனினும், கச்சதீவை இந்தியாவுக்கு நாம் ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம்” என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) போட்டிகளை மைதானத்தில் நேரடியாகக் காணும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக, மத்திய அரசு ஐபிஎல் டிக்கெட்டுகளுக்கான ஜிஎஸ்டி வரியை 40% ஆக உயர்த்தியுள்ளது. இந்த புதிய வரி அமைப்பு செப்டம்பர் 22, 2025 முதல் அமலுக்கு வரும். புதன்கிழமை, ஏப்ரல் 3 அன்று அறிவிக்கப்பட்ட புதிய ஜிஎஸ்டி கட்டமைப்பு மாற்றத்தின்படி, ஐபிஎல் டிக்கெட்டுகள் இனி 28% வரியிலிருந்து 40% வரிக்கு உட்படுத்தப்படும். இந்த உயர்வின் காரணமாக, நாடு முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் கணிசமான விலை உயர்வை சந்திக்க நேரிடும். ₹500 டிக்கெட்: முன்பு 28% வரியுடன் ₹640 ஆக இருந்தது. புதிய 40% வரியுடன் ₹700 ஆக உயரும், அதாவது ₹60 கூடுதல். ₹1,000 டிக்கெட்: முன்பு 28% வரியுடன் ₹1,280 ஆக இருந்தது. புதிய 40% வரியுடன் ₹1,400 ஆக உயரும், அதாவது ₹120 கூடுதல். இது பயனுள்ள செலவில் 12% அதிகரிப்பு ஆகும். ₹2,000 டிக்கெட்: முன்பு 28% வரியுடன் ₹2,560 ஆக இருந்தது. புதிய 40% வரியுடன் ₹2,800 ஆக உயரும், அதாவது ₹240 கூடுதல். ஐபிஎல் ஏன் அதிக வரிப் பிரிவில்? இந்த புதிய ஜிஎஸ்டி கட்டமைப்பு, ஐபிஎல் டிக்கெட்டுகளை ஆடம்பரப் பொருட்கள், குதிரைப் பந்தய மைதானங்கள் (racetracks) மற்றும் சூதாட்ட விடுதிகள் (casinos) ஆகியவற்றுடன் ஒரே உயரிய ஜிஎஸ்டி பிரிவில் வைத்துள்ளது. இந்த புதிய வரி விகிதம், ஐபிஎல் மற்றும் பிற மதிப்புமிக்க விளையாட்டு நிகழ்வுகளை, வரலாற்று ரீதியாக ஆடம்பரமான அல்லது அத்தியாவசியமற்றவையாகக் கருதப்படும் தொழில்களுடன் இணைக்கிறது. விளையாட்டு பொழுதுபோக்குகளின் வரிவிதிப்பில் இது ஒரு குறிப்பிடத்தக்க மாற்றமாகும், இது போட்டிகளைக் காண்பதை புகையிலை போன்ற பொருட்களின் பயன்பாடு அல்லது பந்தயம் போன்ற சேவைகளுடன் பிணைக்கிறது. இந்த வரி உயர்வு, வர்த்தக ரீதியான போட்டிகளுக்கும் (commercial tournaments) அடிமட்ட விளையாட்டுப் போட்டிகளுக்கும் (grassroots sports) இடையே தெளிவான வேறுபாட்டை ஏற்படுத்துகிறது. ஐபிஎல் மற்றும் பிற பிரீமியம் லீக்குகள் மட்டுமே 40% வரி விகிதத்தால் பாதிக்கப்படுகின்றன. வழக்கமான கிரிக்கெட் போட்டிகளுக்கான டிக்கெட்டுகளுக்கு இன்னும் 18% வரி மட்டுமே பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வரி உயர்வால், ரோஹித் ஷர்மா, விராட் கோலி, எம்.எஸ். தோனி போன்ற முன்னணி வீரர்களை மைதானத்தில் நேரடியாகக் காண்பது இனி ரசிகர்களுக்கு மேலும் செலவு பிடிக்கும் காரியமாக மாறும்.
தென் ஆப்பிரிக்கா அணி, ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளது. முதலில் நடந்த டி20 தொடரை ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இதனை தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடர் இன்று தொடங்குகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் வேகப்பந்து வீச்சாளர் க்வேனா மபாகா தென் ஆப்பிரிக்கா அணியில் இணைந்துள்ளார். டி20 தொடரில் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தியதன் மூலம் இந்த வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது. அவர் 3 டி20 போட்டிகளில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.