விளையாட்டு

இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

Admin செப்டெம்பர் 24, 2025 0
PAK wins the game against SL by 5 wickets

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நடைபெற்ற சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் அணி இலங்கையை வீழ்த்தி வெற்றி பெற்றதால், இலங்கை அணி இத்தொடரை விட்டு கிட்டத்தட்ட வெளியேறிவிட்டது. 

இரு அணிகளும் தங்களுடைய முதல் சூப்பர் 4 சுற்றில் தோல்வியைத் தழுவியிருந்த நிலையில், இப்போட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்பட்டது, இதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்குச் செல்லும் வாய்ப்பைத் தக்க வைத்துக் கொள்ளும் நிலை இருந்தது.

அபுதாபியில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய இலங்கை அணியின் தொடக்க வீரர்கள் நிசாங்கா மற்றும் குஷால் மெண்டிஸ் ஆகியோர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். 

குசல் பெரேரா மற்றும் அசலங்கா ஆகியோரும் பெரிய ஸ்கோரை எடுக்க முடியாமல் வெளியேறினர். ஒருபுறம் விக்கெட்டுகள் விழுந்தாலும், மறுபுறம் கமிண்டு மெண்டீஸ் மட்டும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 44 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார்.

இறுதியில், ஹசரங்கா 15 ரன்களும், சமீரா கருணரத்னே 17 ரன்களும் சேர்த்தனர். 20 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி எட்டு விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் எடுத்தது.

பாகிஸ்தான் பந்துவீச்சில், ஷாகின் ஆபிடி மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். சுழற்பந்துவீச்சாளர் அப்ரார் அகமத் நான்கு ஓவர்கள் வீசி வெறும் எட்டு ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.

134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. தொடக்க வீரர் ஃபர்கான் அதிரடியாக விளையாட முற்பட்டு, ஒரு பவுண்டரி மற்றும் இரண்டு சிக்சர்கள் உட்பட 15 பந்துகளில் 24 ரன்கள் எடுத்தார். பெரிய ஸ்கோர் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் தீக்ஷனா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 

மற்றொரு தொடக்க வீரரான பக்கர் சாமான் 17 ரன்களில் வெளியேறினார். சையிம் அயூப் இரண்டு ரன்களிலும், கேப்டன் சல்மான் ஆகா ஐந்து ரன்களிலும் ஆட்டமிழந்ததால், பாகிஸ்தான் அணி 57 ரன்கள் சேர்ப்பதற்குள் நான்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இதனைத் தொடர்ந்து, ஆல்ரவுண்டரான உசைன் தலாட் மற்றும் முகமது ஹாரிஸ் ஜோடி சேர்ந்தனர். ஹாரிஸ் பேட்ஸ்மேன் என்பதால் அவர் அணியைக் காப்பாற்றுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், அவரும் 13 ரன்களில் வெளியேறினார்.

அதன் பின்னர், மற்றொரு ஆல்ரவுண்டரான முஹமது நவாஸ் களத்திற்கு வந்தார். நவாஸ் மற்றும் தலாட் ஜோடி நிதானமாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டது. இந்த ஜோடி விக்கெட்டுகளைக் கொடுக்காமல், பவுண்டரி மற்றும் சிங்கிள்ஸ் மூலம் அணியின் ஸ்கோர் வேகத்தை நிதானமாக வழிநடத்தியது.

முஹமது நவாஸ் மூன்று சிக்சர் மற்றும் மூன்று பவுண்டரிகள் உட்பட 24 பந்துகளில் 38 ரன்கள் எடுத்தார். ஹுசைன் தலாட் 30 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தார்.

இறுதியில், பாகிஸ்தான் அணி 18 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 138 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம், இந்தியாவுக்கு எதிராக அடைந்த தோல்வியிலிருந்து பாகிஸ்தான் மீண்டு வந்து இருக்கின்றது.
 

Tags

ஆசிய-கோப்பை
Popular post
அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் விசேட அறிவிப்பு

'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவின் செப்டம்பர் மாதத்திற்கான உதவித்தொகை வெள்ளிக்கிழமை (12) அன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது. இந்த மாதம் மொத்தம் 1,421,574 குடும்பங்களுக்கு கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளன. இந்த கொடுப்பனவுகளுக்காக 11.2 பில்லியனுக்கும் அதிகமான ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பயனாளிகள் வெள்ளிக்கிழமை முதல் தங்களின் அஸ்வெசும நலன்புரி வங்கிக் கணக்குகளில் இருந்து நிதியைப் பெற்றுக்கொள்ள முடியும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

புதன் நட்சத்திர பெயர்ச்சி - இந்த 3 ராசிகளுக்கு வெற்றியும், செல்வமும் குவியப்போகுது...

ஜோதிடத்தில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படுபடும் புதன், ஆகஸ்ட் மாதத்தில் மகம் நட்சத்திரத்திற்கு செல்லவுள்ளார். அதுவும் இந்த மக நட்சத்திரத்திற்கு ஆகஸ்ட் 30 ஆம் தேதி செல்லவிருக்கிறார். இந்த மகம் நட்சத்திரத்தில் புதன் செப்டம்பர் 06 ஆம் தேதி வரை இருப்பார். நட்சத்திரங்களில் மகம் 10 ஆவது நட்சத்திரமாகும். இது முன்னோர்களைக் குறிக்கிறது. மகம் நட்சத்திரத்தின் அதிபதி கேது.  புதன் கேதுவின் நட்சத்திரத்திற்கு செல்வதால், அதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும். அதில் சில ராசிக்காரர்களுக்கு மோசமாக இருந்தாலும், சிலருக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது.  ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு புதனின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. புத்திசாலித்தனத்தால் பல வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். இதுவரை உணர்வுகளை மற்றவர்களிடம் தெரிவிக்காமல் மறைத்திருந்தால், இக்காலத்தில் வெளிப்படுத்துவீர்கள். உங்களின் தைரியம் அதிகரிக்கும். மனதில் பட்டதை மறைக்காமல் வெளிப்படையாக பேசுவீர்கள். உணர்ச்சி ரீதியாக சிறப்பாக உணர்வீர்கள். வியாபாரிகளுக்கு சிறப்பாக இருக்கும். எடுக்கும் வேலைகளில் வெற்றி கிடைக்கும். சிம்மம் சிம்ம ராசிக்காரர்களுக்கு புதனின் நட்சத்திர பெயர்ச்சியால் தொழில் ரீதியாக சிறப்பாக இருக்கும். அறிவாற்றல் மேம்படும். புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வீர்கள். உங்களின் பேச்சு மிகவும் சுவாரஸ்மாக இருக்கும். பேச்சால் பல வேலைகளை சிறப்பாக முடிப்பீர்கள். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். நிதி நிலை மேம்படும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தேவையற்ற விஷயங்களில் நுழைந்து மன அழுத்தப்படுவதைத் தவிர்த்திடுங்கள். மேலும் இக்காலத்தில் மன அழுத்தத்தைக் குறைக்க யோகா, உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள். விருச்சிகம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு புதனின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கப் போகிறது. புத்திசாலித்தனம் அதிகரிக்கும். பேச்சால் பல வேலைகளில் வெற்றி பெறுவீர்கள். நீண்ட காலமாக இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். நிதி நிலை நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் ரீதியாக பல சிறப்பான பலன்களைப் பெறுவீர்கள். தொழிலதிபர்கள் எதிர்காலத்தில் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும்.

ரணில் கைது: நீதிமன்ற வளாகத்தில் கடும் பாதுகாப்பு

கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, கோட்டை நீதவான் நீதிமன்றத்தைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நான்கு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த வாக்குமூலத்திற்குப் பிறகு,   விக்ரமசிங்க கைது செய்யப்பட்டார். இதனையடுத்து, அவர் விரைவில் அவர் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Madharaasi Review: 'மதராசி' திரைப்பட விமர்சனம்

ஏ.ஆர். முருகதாஸின் இயக்கத்தில் வெளிவந்துள்ள 'மதராசி' திரைப்படம், நீண்ட கால மந்தநிலைக்குப் பிறகு ஒரு வலுவான மறுபிரவேசமாக அமைகிறது.  "தீனா, ரமணா, கஜினி, துப்பாக்கி, கத்தி" போன்ற வெற்றிப் படங்களைக் கொடுத்த முருகதாஸ், இன்றும் தனது திறமையைக் கைவிடவில்லை என்பதை 'மதராசி' உறுதிப்படுத்துகிறது.  சிவகார்த்திகேயன் ஒரு நடிகராக தனது பரிணாம வளர்ச்சியை இத்திரைப்படத்தில் வெளிப்படுத்துகிறார், அதே சமயம் வித்யுத் ஜம்வால் தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து உள்ளார். கதைக்களம்: அமைதியான இரவில், தமிழ்நாடு இந்தியாவிலேயே 'துப்பாக்கி தலைநகராக' மாற்றுவதற்கான ஒரு கொடூரமான திட்டம் தீட்டப்படுகிறது, அங்கு துப்பாக்கிகள் நிறைந்த லாரிகள் காவல்துறை உயர் அதிகாரிகளால் சூழப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் முக்கிய வில்லனாக விராட் (வித்யுத் ஜம்வால்) திகழ்கிறார். அவரது தோற்றமே திகிலூட்டுகிறது.  இதற்கு நேர்மாறாக, சிவகார்த்திகேயனின் ரகு, காதலில் தோல்வியுற்று, மதுபோதையில் கூட்டத்தின் முன் நடனமாடிப் பாடுகிறார். இந்த 'வித்தியாசமான' தொடக்கமாக அமைகின்றது. ரகு, மாலதி (ருக்மிணி வசந்த்) மீதான காதலால் ஏற்பட்ட மன உளைச்சலில் தன் வாழ்க்கையை முடித்துக்கொள்ள நினைக்கிறார். போலீஸ் அதிகாரி பிரேம் (பிஜு மேனன்), வில்லன்களின் கூடாரத்திற்கு ஒரு தற்கொலை மிஷனுக்கு யாராவது முட்டாள் தேவை என்று தேடுகிறார். இந்த இருவரின் தேவைகளும் ஒருமிக்கும்போது, படம் ஒரு அதிரடியாக மாறுகிறது. நடிப்பு: வித்யுத் ஜம்வால் விராட் என்ற முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் தனது முத்திரையைப் பதித்து, முழுப் படத்தின் கவனத்தையும் ஈர்க்கிறார். அவரது சண்டைக் காட்சிகளில் அவர் சிறந்து விளங்குகிறார். சிவகார்த்திகேயன் ஒரு அதிரடி ஹீரோவாக தனது வளர்ச்சியை 'மதராசி'யில் வெளிப்படுத்துகிறார்.  ருக்மிணி வசந்த் மாலதி கதாபாத்திரத்தில் ஒரு அற்புதமான நடிப்பை வழங்கியுள்ளார். அவர் துயரில் உள்ள ஒரு பெண்ணாக இல்லாமல், படத்தின் கதையை நகர்த்தும் முக்கிய காரணியாக இருக்கிறார். பிஜு மேனன் உறுதியான அதிகாரி பிரேம் கதாபாத்திரத்தில் தனது இருப்பை உறுதிப்படுத்துகிறார். ஷபீர் கல்லாரக்கல் மற்றொரு வில்லனாக மிரட்டுகிறார். இயக்கம்:  'மதராசி' திரைப்படம் முருகதாஸின் முந்தைய வெற்றிப் படங்களான 'துப்பாக்கி' மற்றும் 'ரமணா'வின் சில பகுதிகளை நினைவுபடுத்துகிறது.  'துப்பாக்கி'யின் இடைவேளைக்கு முந்தைய பிரபலமான காட்சி போல, 'மதராசி'யிலும் பல இடங்களில், துப்பாக்கிகள், ஏறக்குறைய ஒரே நேரத்தில் சுடும் காட்சிகள் என, அவரது சிறந்த படைப்புகளின் ஒரு காட்சித் தொகுப்பாக இத்திரைப்படம் இருக்கிறது. சிவகார்த்திகேயனின் நகைச்சுவை உணர்வு 'ரமணா' வை நினைவுப்படுத்துகின்றது.  

ஆசிய கோப்பை: இந்திய அணியை தேர்வு செய்த ஹர்பஜன்

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அணிகளை அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்து வரும் நிலையில், இந்திய அணி நாளைய தினம் அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்புகள் உள்ளன.  இந்நிலையில் இத்தொடருக்கான இந்திய அணியை முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கணித்துள்ளார். இதில் சஞ்சு சாம்சனை அணியில் சேர்க்காமல் விட்டுவிட்டு ஷ்ரேயாஸ் ஐயருக்கு இடம் வழங்கியுள்ளார்.  அதே நேரத்தில் அவர் தனது அணியில் சுப்மன் கில்லையும் சேர்த்துள்ளார். இந்த தொடருக்கான இந்திய அணியில் கில் இடம்பிடிக்க மாட்டார் என்று கூறப்படும் நிலையில் கில் நிச்சயமாக ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் கில் இடம்பிடிப்பார் என்று ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். ஹர்பஜன் சிங் தேர்வு செய்த இந்திய அணி: யஷஸ்வி ஜெய்ஸ்வால், அபிஷேக் சர்மா, சுப்மான் கில், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஹர்திக் பாண்ட்யா, ஷ்ரேயாஸ் ஐயர், வாஷிங்டன் சுந்தர், கேஎல் ராகுல்/ரிஷப் பந்த், ரியான் பராக், குல்தீப் யாதவ், அக்ஸர் படேல், முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங், அர்ஷ்தீப் பும்ரா.

விளையாட்டு

View more
Asia Cup 2025
ஆசியக் கிண்ண கிரிக்கெட்: இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம், இலங்கை வெளியேற்றம்

ஆசியக் கிண்ண கிரிக்கெட்டின் சுப்பர் ஃபோர் சுற்றில், இந்தியா இறுதிப் போட்டிக்குத் தனது இடத்தை உறுதி செய்துள்ளது. அதே நேரத்தில், சுப்பர் ஃபோர் சுற்றில் அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்த காரணத்தினால், இலங்கை அணி போட்டியிலிருந்து வெளியேறியுள்ளது. துபாயில் பங்களாதேஷுக்கு எதிரான இந்தியாவின் வெற்றியைத் தொடர்ந்து இலங்கையின் வெளியேற்றம் உறுதி செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதன் விளைவாக, இந்தியா இரண்டு வெற்றிகளுடன் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. அதே நேரத்தில், இரண்டாவது இறுதிப் போட்டியாளரைத் தீர்மானிக்கும் அரையிறுதி மோதலில் பங்களாதேஷும் பாகிஸ்தானும் இன்று மோதவுள்ளன. ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் சுப்பர் 4 சுற்றின் நேற்றைய போட்டியில் இந்திய அணி பங்களாதேஷ் அணியை 41 ஓட்டங்களினால் வெற்றிகொண்டது. டுபாயில் இடம்பெற்ற இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி, முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதற்கமைய முதலில் துடுப்பாடிய இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 168 ஓட்டங்களைப் பெற்றது. தொடர்ந்து, 169 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலளித்தாடிய பங்களாதேஷ் அணி, 19.3 ஓவர்களில் 127 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுத் தோல்வியடைந்தது.

Admin செப்டெம்பர் 25, 2025 0
PAK wins the game against SL by 5 wickets

இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

ஆசிய கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானை மீண்டும் வீழ்த்திய இந்திய அணி

ஆசியக் கிண்ண கிரிக்கெட்

களத்தில் இன்று சந்திக்கும் இந்தியா, பாகிஸ்தான் கைகுலுக்கல் இடம்பெறுமா?

ஆசியக் கோப்பை கிரிக்கெட்
வங்கதேசத்தை வீழ்த்தி இலங்கை அணி அபார வெற்றி, சூப்பர் ஃபோர் வாய்ப்பை உறுதி செய்தது!

அபுதாபியில் நடந்த ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், இலங்கை அணி வங்கதேசத்தை ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, சூப்பர் ஃபோர் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை வலுப்படுத்தியுள்ளது. இந்தப் போட்டிக்கு முன்பு இரு அணிகளும் T20I போட்டிகளில் 8-8 என்ற கணக்கில் சமநிலையில் இருந்ததால், விறுவிறுப்பான ஆட்டம் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இலங்கை அணி 32 பந்துகள் மீதமிருக்க ஆறு விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்று, அதை ஒரு எதிர்பாராத திருப்பமாக மாற்றியது. இலங்கை அணி நாணயச் சுழற்சியில் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது, இது அவர்களுக்குச் சாதகமாக அமைந்தது. நுவான் துஷார மற்றும் துஷ்மந்த சாமீரவின் அபாரப் பந்துவீச்சால் வங்கதேசம் அதிர்ச்சிகரமான தொடக்கத்தைப் பெற்றது. துஷார தனது முதல் ஓவரின் ஆறாவது பந்தில் டான்சிட் ஹாசனை வெளியேற்றினார்.  ஐந்தாவது ஓவரில் டவ்ஹிட் ஹிரிடாய் ரன் அவுட் ஆனார். காயம் காரணமாக ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்தில் இல்லாத வனிந்து ஹசரங்கா, எட்டாவது ஓவரில் களமிறங்கி தனது இரண்டாவது பந்திலேயே மஹெதி ஹாசனை எல்.பி.டபிள்யூ முறையில் வீழ்த்தி உடனடி தாக்கத்தை ஏற்படுத்தினார்.  லிட்டன் தாஸ் ரிவர்ஸ் ஸ்வீப் அடிக்க முயன்றபோது விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஹசரங்காவுக்கு இரண்டாவது விக்கெட்டைப் பெற்றுத் தந்தார். சாமீராவின் துல்லியமான யார்க்கர் பந்துகள் 18 மற்றும் 20வது ஓவர்களில் வங்கதேச பேட்ஸ்மேன்களைக் கட்டுப்படுத்தின. வங்கதேசம் 10 ஓவர்களில் 53 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது ஷமீம் ஹொசைன் மற்றும் ஜாகர் அலி இணைந்தனர். இந்த ஆறாவது விக்கெட் ஜோடி 86 ரன்கள் குவித்து, அணியை ஓரளவுக்குப் போட்டியில் தக்கவைத்தது. இருவரும் தலா 40+ ரன்கள் எடுத்தனர். வங்கதேசத்தின் இன்னிங்ஸில் ஷமீம் அடித்த ஒரு சிக்ஸர் மட்டுமே இருந்தது. வெற்றி இலக்கை நோக்கி ஆடிய இலங்கை அணிக்கு, பதும் நிசங்காவின் அதிரடியான ஆட்டமும், கமில் மிஷாராவின் வலுவான ஷாட்களும் கை கொடுத்தன. நிசங்க 34 பந்துகளில் 50 ரன்கள் குவித்து, T20I போட்டிகளில் 2000 ரன்களை அதிவேகமாக எட்டிய இலங்கை வீரர் என்ற சாதனையைப் படைத்தார். மிஷாரா 32 பந்துகளில் 46 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். நிசங்க தனது நான்காவது பந்திலேயே முஸ்தபிசுர் ரஹ்மானின் பந்தில் ஒரு சிக்ஸர் அடித்து ஆட்டத்தின் சிறப்பான ஷாட்டை வெளிப்படுத்தினார். குசல் மென்டிஸ் அவுட் ஆன பிறகு, நிசங்க மற்றும் மிஷாரா வங்கதேசம் தடுமாறியது போல் இல்லாமல், தொடர்ந்து பவுண்டரிகளை அடித்தனர். மஹெதி மிஷாரா 1 ரன்னில் இருந்தபோது ஒரு கேட்ச்சைத் தவறவிட்டார். இது ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது, அதன்பிறகு மிஷாரா அதே ஓவரில் 6, 4, 4 என ரன்களைக் குவித்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். இந்த ஜோடி 52 பந்துகளில் 95 ரன்கள் சேர்த்தது. இலங்கை அணி 17 பந்துகளில் 18 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தாலும், வெற்றியை உறுதி செய்தது. இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணிக்கு இரண்டு புள்ளிகளும், நிகர ரன்-ரேட் கிடைத்துள்ளது. ஹாங்காங்கிற்கு எதிரான போட்டியில் 144 ரன்களைத் துரத்த 17.4 ஓவர்கள் எடுத்துக்கொண்ட வங்கதேசம், இந்தத் தோல்வியால் சூப்பர் ஃபோர் சுற்றுக்குத் தகுதி பெறுவது மிகவும் கடினமானதாகியுள்ளது.

Admin செப்டெம்பர் 14, 2025 0
Asia Cup 2025

ஆசிய கோப்பை 2025: ஹாங்காங்கை 94 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆப்கானிஸ்தான்

ஆசியக் கோப்பை

ஆசியக் கோப்பை: இலங்கை அணி தொடர்பில் 3 முக்கிய அறிவிப்புகள்

ஆசிய கோப்பை கிரிக்கெட்

ஆசிய கோப்பை கிரிக்கெட்: முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான்- ஹாங்காங் மோதல்

கார்லஸ் அல்காரஸ்
அமெரிக்க ஓபன் டென்னிஸ்: கார்லஸ் அல்காரஸ் சாம்பியன் பட்டம் வென்று அசத்தல்!

நியூயார்க்: ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரஸ் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். பரபரப்பாக நடைபெற்ற இறுதிப்போட்டியில் நடப்புச் சாம்பியன் ஜானிக் சினெரை வீழ்த்தி அவர் இந்தச் சாதனையைப் படைத்துள்ளார். நியூயார்க் நகரில் நடைபெற்ற இந்தத் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டத்தில், செர்பியா வீரர் நோவக் ஜோகோவிச் மற்றும் ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரஸ் மோதினர். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில், அல்காரஸ் 6-4, 7(7)-6(4), 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில், பெலிக்ஸ் ஆகரை வீழ்த்தி ஜானிக் சின்னர் இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருந்தார். சாம்பியன் பட்டத்தை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி இன்று நள்ளிரவு நடைபெற்றது. இதில் நடப்புச் சாம்பியன் ஜானிக் சினெர், கார்லஸ் அல்காரசுடன் பலப்பரீட்சை நடத்தினார். இந்த ஆண்டில் கிராண்ட்ஸ்லாம் இறுதிச் சுற்றில் இருவரும் சந்திப்பது இது 3-வது முறையாகும். இதற்கு முன் ஜூன் மாதம் நடந்த பிரெஞ்சு ஓபனில் அல்காரசும், ஜூலை மாதம் நடந்த விம்பிள்டனில் ஜானிக் சினெரும் வெற்றி பெற்றிருந்தனர். இதுவரை இருவரும் 14 முறை நேருக்கு நேர் மோதியிருந்த நிலையில், அல்காரஸ் 9-5 என்ற கணக்கில் முன்னிலை வகித்து வந்தார். இன்று நடைபெற்ற பரபரப்பான இறுதிப்போட்டியில், கார்லஸ் அல்காரஸ் 6-2, 3-6, 6-1, 6-4 என்ற புள்ளிக்கணக்கில் ஜானிக் சின்னரை வீழ்த்தி, சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற கார்லஸ் அல்காரசுக்கு ரூ.43½ கோடியும், 2-வது இடம் பெற்ற ஜானிக் சினெருக்கு ரூ.21¾ கோடியும் பரிசாக வழங்கப்பட்டது. 2004 முதல் 2008-ம் ஆண்டு வரை சுவிட்சர்லாந்து முன்னாள் ஜாம்பவான் ரோஜர் பெடரர் அமெரிக்க ஓபன் பட்டத்தை 5 முறை தொடர்ச்சியாக வென்று இருந்தார். அதன் பிறகு யாரும் ஆண்கள் ஒற்றையர் பட்டத்தைத் தக்கவைத்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Admin செப்டெம்பர் 8, 2025 0

ஐபிஎல் டிக்கெட் விலை உயர்வு: ரோஹித், கோலி,தோனியை மைதானத்தில் பார்க்க முடியுமா?

இலங்கை

நிஷங்க, அசலங்க அதிரடி - தொடரை வென்றது இலங்கை!

வாய்ப்பு கிடைக்காததால் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து இந்திய வீரர் புஜாரா ஓய்வு

0 Comments