வானிலை

சந்திர கிரகணம்
முழு சந்திர கிரகணம்: இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் சிவப்பு நிலா காட்சி

இலங்கை உட்படப் பல நாடுகளில் காணப்பட்ட முழு சந்திர கிரகணம் தற்போது நிறைவுக்கு வந்துள்ளது.  இந்த அரிய வானியல் நிகழ்வு நேற்று (07.09.2025) இரவு 8.58 மணி முதல் இன்று (08) அதிகாலை 2.25 மணி வரை, சுமார் 5 மணி நேரம் 27 நிமிடங்களுக்கு நீடித்தது.  கொழும்புப் பல்கலைக்கழகத்தின் வானியல் பிரிவு இந்தச் சந்திர கிரகணம் நிகழும் என முன்னதாகத் தெரிவித்திருந்தது. இந்தச் சந்திர கிரகணத்தின் போது, இலங்கையின் பல பகுதிகளில் நிலா சிவப்பு நிறத்தில் தென்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைப் பல மக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டதுடன், சந்திரனைப் புகைப்படம் எடுத்தும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். வானில் நடைபெற்ற இந்தச் சந்திர கிரகணத்தை பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் பார்வையிட்டு வருகின்றனர்.  உலக மக்களுக்கு சுமார் 85 சதவீதம் முழுமையான அல்லது பகுதி கிரகணமாக இது தெரியும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படியே, கட்டாரிலும் இந்தச் சிவப்பு நிலா தென்பட்டதாகச் சிலர் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளனர்.

Admin செப்டெம்பர் 11, 2025 0
கிணறு
கைவிடப்பட்ட கிணறுகளில் மீத்தேன் நச்சு வாயு அபாயம்: பொலிஸார் எச்சரிக்கை

நீண்ட காலமாக சூரிய ஒளி படாமல், தேங்கிய சேற்று நீர் கொண்ட கிணறுகள் போன்ற இருண்ட, மூடிய இடங்களில் மீத்தேன் போன்ற நச்சு வாயுக்கள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என இலங்கை பொலிஸார் அறிவுறுத்தி உள்ளனர். அதிகாரிகளின் முறையான ஆய்வு அல்லது பாதுகாப்பு நடைமுறைகள் இன்றி அத்தகைய இடங்களுக்குள் நுழைவது மரணம் விளைவிக்கக்கூடும் என பொலிஸார் கூறியுள்ளனர். பலாங்கொடை, முல்கமவைச் சேர்ந்த 39 வயதான ஒருவர், நீண்ட காலமாக கைவிடப்பட்ட ஒரு கிணற்றுக்குள் மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேற்று, இறந்த நபர் தனது இரண்டு நண்பர்களுடன் கல்தோட்ட பொலிஸ் பிரிவின் கல்தம்யாய பகுதிக்கு அருகிலுள்ள ஒரு வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு, நீண்ட நாட்களாக கைவிடப்பட்ட  ஒரு கிணற்றை மீண்டும் பயன்படுத்தும் நோக்கில் சுத்தம் செய்யத் தொடங்கியுள்ளனர்.  தண்ணீரை வெளியேற்றிய பின்னர், கிணற்றின் அடியில் இருந்த சேற்றை அகற்றுவதற்காக கிணற்றுக்குள் இறங்கியபோது, அவர் மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார். வைத்தியசாலைக்க கொண்டுசெல்லப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்றி அத்தகைய அபாயகரமான கிணறுகளுக்குள் இறங்குவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு பொலிஸார் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.

Admin செப்டெம்பர் 11, 2025 0
இடியுடன் கூடிய மழை
நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழை

மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் தெற்கு மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் லேசான மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகள், வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்கள் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் அவ்வப்போது மணிக்கு 30-40 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும். இதேவேரள, சூரியன் தெற்கே நகரும்போது, ​​ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 07 வரை இலங்கைக்கு அருகில் வானத்தில் நேரடியாக மேலே செல்கிறது. இன்று பிற்பகல் 12:10 மணிக்கு, ஆண்டிகம, பலல்ல, மீகஸ்வெவ, பம்பரகஸ்வெவ, பகமுன, அரலங்கவில, செங்கலடி மற்றும் ஏறாவூர் ஆகிய பகுதிகளில் சூரியன் உச்சம் கொடுக்கும்.

Admin செப்டெம்பர் 11, 2025 0
Popular post
அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் விசேட அறிவிப்பு

'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவின் செப்டம்பர் மாதத்திற்கான உதவித்தொகை வெள்ளிக்கிழமை (12) அன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது. இந்த மாதம் மொத்தம் 1,421,574 குடும்பங்களுக்கு கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளன. இந்த கொடுப்பனவுகளுக்காக 11.2 பில்லியனுக்கும் அதிகமான ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பயனாளிகள் வெள்ளிக்கிழமை முதல் தங்களின் அஸ்வெசும நலன்புரி வங்கிக் கணக்குகளில் இருந்து நிதியைப் பெற்றுக்கொள்ள முடியும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

புதன் நட்சத்திர பெயர்ச்சி - இந்த 3 ராசிகளுக்கு வெற்றியும், செல்வமும் குவியப்போகுது...

ஜோதிடத்தில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படுபடும் புதன், ஆகஸ்ட் மாதத்தில் மகம் நட்சத்திரத்திற்கு செல்லவுள்ளார். அதுவும் இந்த மக நட்சத்திரத்திற்கு ஆகஸ்ட் 30 ஆம் தேதி செல்லவிருக்கிறார். இந்த மகம் நட்சத்திரத்தில் புதன் செப்டம்பர் 06 ஆம் தேதி வரை இருப்பார். நட்சத்திரங்களில் மகம் 10 ஆவது நட்சத்திரமாகும். இது முன்னோர்களைக் குறிக்கிறது. மகம் நட்சத்திரத்தின் அதிபதி கேது.  புதன் கேதுவின் நட்சத்திரத்திற்கு செல்வதால், அதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும். அதில் சில ராசிக்காரர்களுக்கு மோசமாக இருந்தாலும், சிலருக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது.  ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு புதனின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. புத்திசாலித்தனத்தால் பல வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். இதுவரை உணர்வுகளை மற்றவர்களிடம் தெரிவிக்காமல் மறைத்திருந்தால், இக்காலத்தில் வெளிப்படுத்துவீர்கள். உங்களின் தைரியம் அதிகரிக்கும். மனதில் பட்டதை மறைக்காமல் வெளிப்படையாக பேசுவீர்கள். உணர்ச்சி ரீதியாக சிறப்பாக உணர்வீர்கள். வியாபாரிகளுக்கு சிறப்பாக இருக்கும். எடுக்கும் வேலைகளில் வெற்றி கிடைக்கும். சிம்மம் சிம்ம ராசிக்காரர்களுக்கு புதனின் நட்சத்திர பெயர்ச்சியால் தொழில் ரீதியாக சிறப்பாக இருக்கும். அறிவாற்றல் மேம்படும். புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வீர்கள். உங்களின் பேச்சு மிகவும் சுவாரஸ்மாக இருக்கும். பேச்சால் பல வேலைகளை சிறப்பாக முடிப்பீர்கள். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். நிதி நிலை மேம்படும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தேவையற்ற விஷயங்களில் நுழைந்து மன அழுத்தப்படுவதைத் தவிர்த்திடுங்கள். மேலும் இக்காலத்தில் மன அழுத்தத்தைக் குறைக்க யோகா, உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள். விருச்சிகம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு புதனின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கப் போகிறது. புத்திசாலித்தனம் அதிகரிக்கும். பேச்சால் பல வேலைகளில் வெற்றி பெறுவீர்கள். நீண்ட காலமாக இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். நிதி நிலை நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் ரீதியாக பல சிறப்பான பலன்களைப் பெறுவீர்கள். தொழிலதிபர்கள் எதிர்காலத்தில் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும்.

ரணில் கைது: நீதிமன்ற வளாகத்தில் கடும் பாதுகாப்பு

கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, கோட்டை நீதவான் நீதிமன்றத்தைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நான்கு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த வாக்குமூலத்திற்குப் பிறகு,   விக்ரமசிங்க கைது செய்யப்பட்டார். இதனையடுத்து, அவர் விரைவில் அவர் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Madharaasi Review: 'மதராசி' திரைப்பட விமர்சனம்

ஏ.ஆர். முருகதாஸின் இயக்கத்தில் வெளிவந்துள்ள 'மதராசி' திரைப்படம், நீண்ட கால மந்தநிலைக்குப் பிறகு ஒரு வலுவான மறுபிரவேசமாக அமைகிறது.  "தீனா, ரமணா, கஜினி, துப்பாக்கி, கத்தி" போன்ற வெற்றிப் படங்களைக் கொடுத்த முருகதாஸ், இன்றும் தனது திறமையைக் கைவிடவில்லை என்பதை 'மதராசி' உறுதிப்படுத்துகிறது.  சிவகார்த்திகேயன் ஒரு நடிகராக தனது பரிணாம வளர்ச்சியை இத்திரைப்படத்தில் வெளிப்படுத்துகிறார், அதே சமயம் வித்யுத் ஜம்வால் தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து உள்ளார். கதைக்களம்: அமைதியான இரவில், தமிழ்நாடு இந்தியாவிலேயே 'துப்பாக்கி தலைநகராக' மாற்றுவதற்கான ஒரு கொடூரமான திட்டம் தீட்டப்படுகிறது, அங்கு துப்பாக்கிகள் நிறைந்த லாரிகள் காவல்துறை உயர் அதிகாரிகளால் சூழப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் முக்கிய வில்லனாக விராட் (வித்யுத் ஜம்வால்) திகழ்கிறார். அவரது தோற்றமே திகிலூட்டுகிறது.  இதற்கு நேர்மாறாக, சிவகார்த்திகேயனின் ரகு, காதலில் தோல்வியுற்று, மதுபோதையில் கூட்டத்தின் முன் நடனமாடிப் பாடுகிறார். இந்த 'வித்தியாசமான' தொடக்கமாக அமைகின்றது. ரகு, மாலதி (ருக்மிணி வசந்த்) மீதான காதலால் ஏற்பட்ட மன உளைச்சலில் தன் வாழ்க்கையை முடித்துக்கொள்ள நினைக்கிறார். போலீஸ் அதிகாரி பிரேம் (பிஜு மேனன்), வில்லன்களின் கூடாரத்திற்கு ஒரு தற்கொலை மிஷனுக்கு யாராவது முட்டாள் தேவை என்று தேடுகிறார். இந்த இருவரின் தேவைகளும் ஒருமிக்கும்போது, படம் ஒரு அதிரடியாக மாறுகிறது. நடிப்பு: வித்யுத் ஜம்வால் விராட் என்ற முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் தனது முத்திரையைப் பதித்து, முழுப் படத்தின் கவனத்தையும் ஈர்க்கிறார். அவரது சண்டைக் காட்சிகளில் அவர் சிறந்து விளங்குகிறார். சிவகார்த்திகேயன் ஒரு அதிரடி ஹீரோவாக தனது வளர்ச்சியை 'மதராசி'யில் வெளிப்படுத்துகிறார்.  ருக்மிணி வசந்த் மாலதி கதாபாத்திரத்தில் ஒரு அற்புதமான நடிப்பை வழங்கியுள்ளார். அவர் துயரில் உள்ள ஒரு பெண்ணாக இல்லாமல், படத்தின் கதையை நகர்த்தும் முக்கிய காரணியாக இருக்கிறார். பிஜு மேனன் உறுதியான அதிகாரி பிரேம் கதாபாத்திரத்தில் தனது இருப்பை உறுதிப்படுத்துகிறார். ஷபீர் கல்லாரக்கல் மற்றொரு வில்லனாக மிரட்டுகிறார். இயக்கம்:  'மதராசி' திரைப்படம் முருகதாஸின் முந்தைய வெற்றிப் படங்களான 'துப்பாக்கி' மற்றும் 'ரமணா'வின் சில பகுதிகளை நினைவுபடுத்துகிறது.  'துப்பாக்கி'யின் இடைவேளைக்கு முந்தைய பிரபலமான காட்சி போல, 'மதராசி'யிலும் பல இடங்களில், துப்பாக்கிகள், ஏறக்குறைய ஒரே நேரத்தில் சுடும் காட்சிகள் என, அவரது சிறந்த படைப்புகளின் ஒரு காட்சித் தொகுப்பாக இத்திரைப்படம் இருக்கிறது. சிவகார்த்திகேயனின் நகைச்சுவை உணர்வு 'ரமணா' வை நினைவுப்படுத்துகின்றது.  

ஆசிய கோப்பை: இந்திய அணியை தேர்வு செய்த ஹர்பஜன்

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அணிகளை அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்து வரும் நிலையில், இந்திய அணி நாளைய தினம் அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்புகள் உள்ளன.  இந்நிலையில் இத்தொடருக்கான இந்திய அணியை முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கணித்துள்ளார். இதில் சஞ்சு சாம்சனை அணியில் சேர்க்காமல் விட்டுவிட்டு ஷ்ரேயாஸ் ஐயருக்கு இடம் வழங்கியுள்ளார்.  அதே நேரத்தில் அவர் தனது அணியில் சுப்மன் கில்லையும் சேர்த்துள்ளார். இந்த தொடருக்கான இந்திய அணியில் கில் இடம்பிடிக்க மாட்டார் என்று கூறப்படும் நிலையில் கில் நிச்சயமாக ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் கில் இடம்பிடிப்பார் என்று ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். ஹர்பஜன் சிங் தேர்வு செய்த இந்திய அணி: யஷஸ்வி ஜெய்ஸ்வால், அபிஷேக் சர்மா, சுப்மான் கில், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஹர்திக் பாண்ட்யா, ஷ்ரேயாஸ் ஐயர், வாஷிங்டன் சுந்தர், கேஎல் ராகுல்/ரிஷப் பந்த், ரியான் பராக், குல்தீப் யாதவ், அக்ஸர் படேல், முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங், அர்ஷ்தீப் பும்ரா.

Top week

Dan Priyasad murder case
இலங்கை

டான் பிரியசாத் கொலை வழக்கில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கைது

Admin செப்டெம்பர் 19, 2025 0

Voting poll

ரணில் விக்கிரமசிங்கவை கைது செய்தது?