சீனாவின் ஃபூஜியனில் 54 மணிநேரம் கிணற்றுக்குள் போராடிய பெண் சிரமப்பட்டு மீட்கப்பட்டார்.
சென்ற சனிக்கிழமை (13 செப்டம்பர்) நடக்கச் சென்ற சின் (Qin) என்ற அந்தப் பெண் தடுமாறிக் கிணற்றுக்குள் விழுந்துவிட்டார்.
சின் வீடு திரும்பவில்லை என்று வருந்திய குடும்பத்தினர் மறுநாள் அவரைத் தேடத் தொடங்கினர்.
செப்டம்பர் 15ஆம் தேதி அவர்கள் அங்குள்ள மீட்பு நிலையத்தின் உதவியை நாடியதாகச் சீன ஊடகங்கள் குறிப்பிட்டன.
இரு நாள்களுக்குப் பிறகு மதியவேளையில் கிணற்றில் சிக்கிக்கொண்ட சின்னை அவர்கள் கண்டுபிடித்தனர்.
ஒரு மணி நேர மீட்பு நடவடிக்கைக்குப் பின்னர் சின் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டதாகச் சீன ஊடகங்கள் தெரிவித்தன. அத்துடன் பாம்புக்கடி, பூச்சிக்கடி ஆகியவற்றையும் அவர் அனுபவித்திருந்தார்.
தற்போது சின் சீரான நிலையில் இருப்பதாகவும் இன்னும் சில நாள்களில் வீடு திரும்புவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவின் செப்டம்பர் மாதத்திற்கான உதவித்தொகை வெள்ளிக்கிழமை (12) அன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது. இந்த மாதம் மொத்தம் 1,421,574 குடும்பங்களுக்கு கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளன. இந்த கொடுப்பனவுகளுக்காக 11.2 பில்லியனுக்கும் அதிகமான ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பயனாளிகள் வெள்ளிக்கிழமை முதல் தங்களின் அஸ்வெசும நலன்புரி வங்கிக் கணக்குகளில் இருந்து நிதியைப் பெற்றுக்கொள்ள முடியும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
ஜோதிடத்தில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படுபடும் புதன், ஆகஸ்ட் மாதத்தில் மகம் நட்சத்திரத்திற்கு செல்லவுள்ளார். அதுவும் இந்த மக நட்சத்திரத்திற்கு ஆகஸ்ட் 30 ஆம் தேதி செல்லவிருக்கிறார். இந்த மகம் நட்சத்திரத்தில் புதன் செப்டம்பர் 06 ஆம் தேதி வரை இருப்பார். நட்சத்திரங்களில் மகம் 10 ஆவது நட்சத்திரமாகும். இது முன்னோர்களைக் குறிக்கிறது. மகம் நட்சத்திரத்தின் அதிபதி கேது. புதன் கேதுவின் நட்சத்திரத்திற்கு செல்வதால், அதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும். அதில் சில ராசிக்காரர்களுக்கு மோசமாக இருந்தாலும், சிலருக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு புதனின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. புத்திசாலித்தனத்தால் பல வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். இதுவரை உணர்வுகளை மற்றவர்களிடம் தெரிவிக்காமல் மறைத்திருந்தால், இக்காலத்தில் வெளிப்படுத்துவீர்கள். உங்களின் தைரியம் அதிகரிக்கும். மனதில் பட்டதை மறைக்காமல் வெளிப்படையாக பேசுவீர்கள். உணர்ச்சி ரீதியாக சிறப்பாக உணர்வீர்கள். வியாபாரிகளுக்கு சிறப்பாக இருக்கும். எடுக்கும் வேலைகளில் வெற்றி கிடைக்கும். சிம்மம் சிம்ம ராசிக்காரர்களுக்கு புதனின் நட்சத்திர பெயர்ச்சியால் தொழில் ரீதியாக சிறப்பாக இருக்கும். அறிவாற்றல் மேம்படும். புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வீர்கள். உங்களின் பேச்சு மிகவும் சுவாரஸ்மாக இருக்கும். பேச்சால் பல வேலைகளை சிறப்பாக முடிப்பீர்கள். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். நிதி நிலை மேம்படும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தேவையற்ற விஷயங்களில் நுழைந்து மன அழுத்தப்படுவதைத் தவிர்த்திடுங்கள். மேலும் இக்காலத்தில் மன அழுத்தத்தைக் குறைக்க யோகா, உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள். விருச்சிகம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு புதனின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கப் போகிறது. புத்திசாலித்தனம் அதிகரிக்கும். பேச்சால் பல வேலைகளில் வெற்றி பெறுவீர்கள். நீண்ட காலமாக இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். நிதி நிலை நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் ரீதியாக பல சிறப்பான பலன்களைப் பெறுவீர்கள். தொழிலதிபர்கள் எதிர்காலத்தில் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும்.
கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, கோட்டை நீதவான் நீதிமன்றத்தைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நான்கு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த வாக்குமூலத்திற்குப் பிறகு, விக்ரமசிங்க கைது செய்யப்பட்டார். இதனையடுத்து, அவர் விரைவில் அவர் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏ.ஆர். முருகதாஸின் இயக்கத்தில் வெளிவந்துள்ள 'மதராசி' திரைப்படம், நீண்ட கால மந்தநிலைக்குப் பிறகு ஒரு வலுவான மறுபிரவேசமாக அமைகிறது. "தீனா, ரமணா, கஜினி, துப்பாக்கி, கத்தி" போன்ற வெற்றிப் படங்களைக் கொடுத்த முருகதாஸ், இன்றும் தனது திறமையைக் கைவிடவில்லை என்பதை 'மதராசி' உறுதிப்படுத்துகிறது. சிவகார்த்திகேயன் ஒரு நடிகராக தனது பரிணாம வளர்ச்சியை இத்திரைப்படத்தில் வெளிப்படுத்துகிறார், அதே சமயம் வித்யுத் ஜம்வால் தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து உள்ளார். கதைக்களம்: அமைதியான இரவில், தமிழ்நாடு இந்தியாவிலேயே 'துப்பாக்கி தலைநகராக' மாற்றுவதற்கான ஒரு கொடூரமான திட்டம் தீட்டப்படுகிறது, அங்கு துப்பாக்கிகள் நிறைந்த லாரிகள் காவல்துறை உயர் அதிகாரிகளால் சூழப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் முக்கிய வில்லனாக விராட் (வித்யுத் ஜம்வால்) திகழ்கிறார். அவரது தோற்றமே திகிலூட்டுகிறது. இதற்கு நேர்மாறாக, சிவகார்த்திகேயனின் ரகு, காதலில் தோல்வியுற்று, மதுபோதையில் கூட்டத்தின் முன் நடனமாடிப் பாடுகிறார். இந்த 'வித்தியாசமான' தொடக்கமாக அமைகின்றது. ரகு, மாலதி (ருக்மிணி வசந்த்) மீதான காதலால் ஏற்பட்ட மன உளைச்சலில் தன் வாழ்க்கையை முடித்துக்கொள்ள நினைக்கிறார். போலீஸ் அதிகாரி பிரேம் (பிஜு மேனன்), வில்லன்களின் கூடாரத்திற்கு ஒரு தற்கொலை மிஷனுக்கு யாராவது முட்டாள் தேவை என்று தேடுகிறார். இந்த இருவரின் தேவைகளும் ஒருமிக்கும்போது, படம் ஒரு அதிரடியாக மாறுகிறது. நடிப்பு: வித்யுத் ஜம்வால் விராட் என்ற முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் தனது முத்திரையைப் பதித்து, முழுப் படத்தின் கவனத்தையும் ஈர்க்கிறார். அவரது சண்டைக் காட்சிகளில் அவர் சிறந்து விளங்குகிறார். சிவகார்த்திகேயன் ஒரு அதிரடி ஹீரோவாக தனது வளர்ச்சியை 'மதராசி'யில் வெளிப்படுத்துகிறார். ருக்மிணி வசந்த் மாலதி கதாபாத்திரத்தில் ஒரு அற்புதமான நடிப்பை வழங்கியுள்ளார். அவர் துயரில் உள்ள ஒரு பெண்ணாக இல்லாமல், படத்தின் கதையை நகர்த்தும் முக்கிய காரணியாக இருக்கிறார். பிஜு மேனன் உறுதியான அதிகாரி பிரேம் கதாபாத்திரத்தில் தனது இருப்பை உறுதிப்படுத்துகிறார். ஷபீர் கல்லாரக்கல் மற்றொரு வில்லனாக மிரட்டுகிறார். இயக்கம்: 'மதராசி' திரைப்படம் முருகதாஸின் முந்தைய வெற்றிப் படங்களான 'துப்பாக்கி' மற்றும் 'ரமணா'வின் சில பகுதிகளை நினைவுபடுத்துகிறது. 'துப்பாக்கி'யின் இடைவேளைக்கு முந்தைய பிரபலமான காட்சி போல, 'மதராசி'யிலும் பல இடங்களில், துப்பாக்கிகள், ஏறக்குறைய ஒரே நேரத்தில் சுடும் காட்சிகள் என, அவரது சிறந்த படைப்புகளின் ஒரு காட்சித் தொகுப்பாக இத்திரைப்படம் இருக்கிறது. சிவகார்த்திகேயனின் நகைச்சுவை உணர்வு 'ரமணா' வை நினைவுப்படுத்துகின்றது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அணிகளை அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்து வரும் நிலையில், இந்திய அணி நாளைய தினம் அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்புகள் உள்ளன. இந்நிலையில் இத்தொடருக்கான இந்திய அணியை முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கணித்துள்ளார். இதில் சஞ்சு சாம்சனை அணியில் சேர்க்காமல் விட்டுவிட்டு ஷ்ரேயாஸ் ஐயருக்கு இடம் வழங்கியுள்ளார். அதே நேரத்தில் அவர் தனது அணியில் சுப்மன் கில்லையும் சேர்த்துள்ளார். இந்த தொடருக்கான இந்திய அணியில் கில் இடம்பிடிக்க மாட்டார் என்று கூறப்படும் நிலையில் கில் நிச்சயமாக ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் கில் இடம்பிடிப்பார் என்று ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். ஹர்பஜன் சிங் தேர்வு செய்த இந்திய அணி: யஷஸ்வி ஜெய்ஸ்வால், அபிஷேக் சர்மா, சுப்மான் கில், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஹர்திக் பாண்ட்யா, ஷ்ரேயாஸ் ஐயர், வாஷிங்டன் சுந்தர், கேஎல் ராகுல்/ரிஷப் பந்த், ரியான் பராக், குல்தீப் யாதவ், அக்ஸர் படேல், முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங், அர்ஷ்தீப் பும்ரா.
ரகசா சூறாவளி தெற்கு சீனாவில் கரையைக் கடந்தது, சூறாவளி காரணமாக முன்னாயத்தமாக கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் மக்கள் அந்தப் பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். செவ்வாயன்று தாய்வானில் ஒரு ஏரி வெடித்ததில் குறைந்தது 17 பேர் கொல்லப்பட்டதாகவும், மேலும் பலர் காணாமல் போனதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனால் நாட்டின் கிழக்கு பகுதியில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டது. புதன்கிழமை ரகசா ஒரு சூப்பர் புயலிலிருந்து கடுமையான புயலாகக் குறைந்தது. ஆனால் அது மிகவும் அழிவுகரமானதாகவே உள்ளது, சீனாவின் தென்கிழக்கு குவாங்டாங் மாகாணத்தில் உள்ள தைஷான் கவுண்டியில் மணிக்கு 241 கிமீ (150 மைல்) வேகத்தில் காற்று வீசியது. வகை 5 சூறாவளியை ஒத்த, ரகசா இந்த ஆண்டு உலகின் வலிமையான புயலாகும் என்பதுடன், தென் சீனக் கடலில் பல நாட்களாக வீசி வருகிறது.
சீனாவின் ஃபூஜியனில் 54 மணிநேரம் கிணற்றுக்குள் போராடிய பெண் சிரமப்பட்டு மீட்கப்பட்டார். சென்ற சனிக்கிழமை (13 செப்டம்பர்) நடக்கச் சென்ற சின் (Qin) என்ற அந்தப் பெண் தடுமாறிக் கிணற்றுக்குள் விழுந்துவிட்டார். சின் வீடு திரும்பவில்லை என்று வருந்திய குடும்பத்தினர் மறுநாள் அவரைத் தேடத் தொடங்கினர். செப்டம்பர் 15ஆம் தேதி அவர்கள் அங்குள்ள மீட்பு நிலையத்தின் உதவியை நாடியதாகச் சீன ஊடகங்கள் குறிப்பிட்டன. இரு நாள்களுக்குப் பிறகு மதியவேளையில் கிணற்றில் சிக்கிக்கொண்ட சின்னை அவர்கள் கண்டுபிடித்தனர். ஒரு மணி நேர மீட்பு நடவடிக்கைக்குப் பின்னர் சின் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டதாகச் சீன ஊடகங்கள் தெரிவித்தன. அத்துடன் பாம்புக்கடி, பூச்சிக்கடி ஆகியவற்றையும் அவர் அனுபவித்திருந்தார். தற்போது சின் சீரான நிலையில் இருப்பதாகவும் இன்னும் சில நாள்களில் வீடு திரும்புவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இசைஞானி இளையராஜா திரை இசை உலகில் 50 ஆண்டுகளைக் கடந்ததை சிறப்பிக்கும் விதமாக, தமிழக அரசு சார்பில் "சிம்பொனி சிகரம் தொட்ட தமிழன் இசைஞானி இளையராஜா பொன்விழா ஆண்டு 50" என்ற பாராட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து ஒரு முக்கிய கருத்தை வெளியிட்டார். அவர், "தமிழ்நாட்டில் இருந்து கொண்டு இந்திய நாட்டு அரசியலில் ஒரு நட்சத்திரமாக, இந்திய நாட்டை ஆளும் கட்சியினருக்கும், புதிய, பழைய எதிர்க்கட்சியினருக்கும், ஒரு சவாலாக, வாருங்கள் 2026 தேர்தலில் பார்க்கலாம் என்று தனக்கே உரிய புன்னகையுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் எனது நண்பர், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எனது வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறினார். நடிகர் ரஜினிகாந்தின் இந்தப் பேச்சு சமூக வலைத்தளங்களில் பரவலான விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது. குறிப்பாக, அவர் ‘புதிய எதிர்க்கட்சிகளுக்கு’ சவால் விடுவதாகக் குறிப்பிட்டது, சமீபத்தில் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற கட்சியைத் தொடங்கிய நடிகர் விஜய்-யைக் குறிப்பதாகப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். நடிகர் விஜய், 2026 சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருவதுடன், தி.மு.க. மீது கடுமையான விமர்சனங்களையும் முன்வைத்து வருகிறார். இந்தச் சூழலில், முதல்வர் மு.க.ஸ்டாலின் புதிய எதிர்க்கட்சிகளுக்கு சவாலாக இருக்கிறார் என்று ரஜினிகாந்த் பேசியது, த.வெ.க. தலைவர் விஜய் குறித்து மறைமுகமாகப் பேசியதுதான் என சமூக வலைத்தளங்களில் பலர் பரபரப்பாக கருத்துகளைப் பதிவிட்டு விவாதித்து வருகின்றனர். 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கிய அரசியல் நகர்வுகளும், பிரபலங்களின் கருத்துகளும் தமிழக அரசியலில் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.