இலங்கை

இலங்கை போக்குவரத்து சபையில் விரைவில் பெண் சாரதி மற்றும் நடத்னநர்

Admin செப்டெம்பர் 17, 2025 0

இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) பொது போக்குவரத்து சேவையில் பெண் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் விரைவில் சேர்க்கப்படுவார்கள் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாவட்ட செயலகத்தில் நேற்று (16) நடைபெற்ற நிகழ்வின்போது, அவர் இதனைக் கூறியுள்ளார்.

25 பஸ் டிப்போக்களை நவீனமயமாக்க ஏற்கெனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன்,  750 புதிய சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் ஆட்சேர்ப்பு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags

இலங்கை-போக்குவரத்து-சபை
Popular post
அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் விசேட அறிவிப்பு

'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவின் செப்டம்பர் மாதத்திற்கான உதவித்தொகை வெள்ளிக்கிழமை (12) அன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது. இந்த மாதம் மொத்தம் 1,421,574 குடும்பங்களுக்கு கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளன. இந்த கொடுப்பனவுகளுக்காக 11.2 பில்லியனுக்கும் அதிகமான ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பயனாளிகள் வெள்ளிக்கிழமை முதல் தங்களின் அஸ்வெசும நலன்புரி வங்கிக் கணக்குகளில் இருந்து நிதியைப் பெற்றுக்கொள்ள முடியும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

புதன் நட்சத்திர பெயர்ச்சி - இந்த 3 ராசிகளுக்கு வெற்றியும், செல்வமும் குவியப்போகுது...

ஜோதிடத்தில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படுபடும் புதன், ஆகஸ்ட் மாதத்தில் மகம் நட்சத்திரத்திற்கு செல்லவுள்ளார். அதுவும் இந்த மக நட்சத்திரத்திற்கு ஆகஸ்ட் 30 ஆம் தேதி செல்லவிருக்கிறார். இந்த மகம் நட்சத்திரத்தில் புதன் செப்டம்பர் 06 ஆம் தேதி வரை இருப்பார். நட்சத்திரங்களில் மகம் 10 ஆவது நட்சத்திரமாகும். இது முன்னோர்களைக் குறிக்கிறது. மகம் நட்சத்திரத்தின் அதிபதி கேது.  புதன் கேதுவின் நட்சத்திரத்திற்கு செல்வதால், அதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும். அதில் சில ராசிக்காரர்களுக்கு மோசமாக இருந்தாலும், சிலருக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது.  ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு புதனின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. புத்திசாலித்தனத்தால் பல வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். இதுவரை உணர்வுகளை மற்றவர்களிடம் தெரிவிக்காமல் மறைத்திருந்தால், இக்காலத்தில் வெளிப்படுத்துவீர்கள். உங்களின் தைரியம் அதிகரிக்கும். மனதில் பட்டதை மறைக்காமல் வெளிப்படையாக பேசுவீர்கள். உணர்ச்சி ரீதியாக சிறப்பாக உணர்வீர்கள். வியாபாரிகளுக்கு சிறப்பாக இருக்கும். எடுக்கும் வேலைகளில் வெற்றி கிடைக்கும். சிம்மம் சிம்ம ராசிக்காரர்களுக்கு புதனின் நட்சத்திர பெயர்ச்சியால் தொழில் ரீதியாக சிறப்பாக இருக்கும். அறிவாற்றல் மேம்படும். புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வீர்கள். உங்களின் பேச்சு மிகவும் சுவாரஸ்மாக இருக்கும். பேச்சால் பல வேலைகளை சிறப்பாக முடிப்பீர்கள். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். நிதி நிலை மேம்படும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தேவையற்ற விஷயங்களில் நுழைந்து மன அழுத்தப்படுவதைத் தவிர்த்திடுங்கள். மேலும் இக்காலத்தில் மன அழுத்தத்தைக் குறைக்க யோகா, உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள். விருச்சிகம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு புதனின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கப் போகிறது. புத்திசாலித்தனம் அதிகரிக்கும். பேச்சால் பல வேலைகளில் வெற்றி பெறுவீர்கள். நீண்ட காலமாக இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். நிதி நிலை நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் ரீதியாக பல சிறப்பான பலன்களைப் பெறுவீர்கள். தொழிலதிபர்கள் எதிர்காலத்தில் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும்.

ரணில் கைது: நீதிமன்ற வளாகத்தில் கடும் பாதுகாப்பு

கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, கோட்டை நீதவான் நீதிமன்றத்தைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நான்கு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த வாக்குமூலத்திற்குப் பிறகு,   விக்ரமசிங்க கைது செய்யப்பட்டார். இதனையடுத்து, அவர் விரைவில் அவர் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆசிய கோப்பை: இந்திய அணியை தேர்வு செய்த ஹர்பஜன்

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அணிகளை அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்து வரும் நிலையில், இந்திய அணி நாளைய தினம் அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்புகள் உள்ளன.  இந்நிலையில் இத்தொடருக்கான இந்திய அணியை முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கணித்துள்ளார். இதில் சஞ்சு சாம்சனை அணியில் சேர்க்காமல் விட்டுவிட்டு ஷ்ரேயாஸ் ஐயருக்கு இடம் வழங்கியுள்ளார்.  அதே நேரத்தில் அவர் தனது அணியில் சுப்மன் கில்லையும் சேர்த்துள்ளார். இந்த தொடருக்கான இந்திய அணியில் கில் இடம்பிடிக்க மாட்டார் என்று கூறப்படும் நிலையில் கில் நிச்சயமாக ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் கில் இடம்பிடிப்பார் என்று ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். ஹர்பஜன் சிங் தேர்வு செய்த இந்திய அணி: யஷஸ்வி ஜெய்ஸ்வால், அபிஷேக் சர்மா, சுப்மான் கில், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஹர்திக் பாண்ட்யா, ஷ்ரேயாஸ் ஐயர், வாஷிங்டன் சுந்தர், கேஎல் ராகுல்/ரிஷப் பந்த், ரியான் பராக், குல்தீப் யாதவ், அக்ஸர் படேல், முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங், அர்ஷ்தீப் பும்ரா.

Madharaasi Review: 'மதராசி' திரைப்பட விமர்சனம்

ஏ.ஆர். முருகதாஸின் இயக்கத்தில் வெளிவந்துள்ள 'மதராசி' திரைப்படம், நீண்ட கால மந்தநிலைக்குப் பிறகு ஒரு வலுவான மறுபிரவேசமாக அமைகிறது.  "தீனா, ரமணா, கஜினி, துப்பாக்கி, கத்தி" போன்ற வெற்றிப் படங்களைக் கொடுத்த முருகதாஸ், இன்றும் தனது திறமையைக் கைவிடவில்லை என்பதை 'மதராசி' உறுதிப்படுத்துகிறது.  சிவகார்த்திகேயன் ஒரு நடிகராக தனது பரிணாம வளர்ச்சியை இத்திரைப்படத்தில் வெளிப்படுத்துகிறார், அதே சமயம் வித்யுத் ஜம்வால் தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து உள்ளார். கதைக்களம்: அமைதியான இரவில், தமிழ்நாடு இந்தியாவிலேயே 'துப்பாக்கி தலைநகராக' மாற்றுவதற்கான ஒரு கொடூரமான திட்டம் தீட்டப்படுகிறது, அங்கு துப்பாக்கிகள் நிறைந்த லாரிகள் காவல்துறை உயர் அதிகாரிகளால் சூழப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் முக்கிய வில்லனாக விராட் (வித்யுத் ஜம்வால்) திகழ்கிறார். அவரது தோற்றமே திகிலூட்டுகிறது.  இதற்கு நேர்மாறாக, சிவகார்த்திகேயனின் ரகு, காதலில் தோல்வியுற்று, மதுபோதையில் கூட்டத்தின் முன் நடனமாடிப் பாடுகிறார். இந்த 'வித்தியாசமான' தொடக்கமாக அமைகின்றது. ரகு, மாலதி (ருக்மிணி வசந்த்) மீதான காதலால் ஏற்பட்ட மன உளைச்சலில் தன் வாழ்க்கையை முடித்துக்கொள்ள நினைக்கிறார். போலீஸ் அதிகாரி பிரேம் (பிஜு மேனன்), வில்லன்களின் கூடாரத்திற்கு ஒரு தற்கொலை மிஷனுக்கு யாராவது முட்டாள் தேவை என்று தேடுகிறார். இந்த இருவரின் தேவைகளும் ஒருமிக்கும்போது, படம் ஒரு அதிரடியாக மாறுகிறது. நடிப்பு: வித்யுத் ஜம்வால் விராட் என்ற முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் தனது முத்திரையைப் பதித்து, முழுப் படத்தின் கவனத்தையும் ஈர்க்கிறார். அவரது சண்டைக் காட்சிகளில் அவர் சிறந்து விளங்குகிறார். சிவகார்த்திகேயன் ஒரு அதிரடி ஹீரோவாக தனது வளர்ச்சியை 'மதராசி'யில் வெளிப்படுத்துகிறார்.  ருக்மிணி வசந்த் மாலதி கதாபாத்திரத்தில் ஒரு அற்புதமான நடிப்பை வழங்கியுள்ளார். அவர் துயரில் உள்ள ஒரு பெண்ணாக இல்லாமல், படத்தின் கதையை நகர்த்தும் முக்கிய காரணியாக இருக்கிறார். பிஜு மேனன் உறுதியான அதிகாரி பிரேம் கதாபாத்திரத்தில் தனது இருப்பை உறுதிப்படுத்துகிறார். ஷபீர் கல்லாரக்கல் மற்றொரு வில்லனாக மிரட்டுகிறார். இயக்கம்:  'மதராசி' திரைப்படம் முருகதாஸின் முந்தைய வெற்றிப் படங்களான 'துப்பாக்கி' மற்றும் 'ரமணா'வின் சில பகுதிகளை நினைவுபடுத்துகிறது.  'துப்பாக்கி'யின் இடைவேளைக்கு முந்தைய பிரபலமான காட்சி போல, 'மதராசி'யிலும் பல இடங்களில், துப்பாக்கிகள், ஏறக்குறைய ஒரே நேரத்தில் சுடும் காட்சிகள் என, அவரது சிறந்த படைப்புகளின் ஒரு காட்சித் தொகுப்பாக இத்திரைப்படம் இருக்கிறது. சிவகார்த்திகேயனின் நகைச்சுவை உணர்வு 'ரமணா' வை நினைவுப்படுத்துகின்றது.  

இலங்கை

View more
Nine-hour water cut in Colombo and suburbs tomorrow
கொழும்பு மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நாளை ஒன்பது மணி நேர நீர் வெட்டு

கொழும்பு மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பல பகுதிகளுக்கு நாளை (18) காலை 10:00 மணி முதல் மாலை 7:00 மணி வரை ஒன்பது மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபை அறிவித்துள்ளது. அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக நீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக நீர் வழங்கல் சபை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, நீர் வழங்கல் தடை காலத்தில் ஏற்படும் சிரமத்தைத் தவிர்க்க முன்கூட்டியே ஏற்பாடுகளைச் செய்து போதுமான அளவு தண்ணீரை சேமித்து வைக்குமாறு நீர் வழங்கல் சபை பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது. அதன்படி, நீர் வெட்டு பின்வரும் பகுதிகளை பாதிக்கும்: • கொழும்பு 01 முதல் கொழும்பு 15 வரை • பத்தரமுல்லை • பெலவத்தை • ஹோகந்தர • கொஸ்வத்தை • தலவத்துகொட • கோட்டே • ராஜகிரிய • மிரிஹான • மாதிவெல • நுகேகொட • நாவல • கொலன்னாவ • IDH (தொற்று நோய்கள் மருத்துவமனை) பகுதி • கொட்டிகாவத்தை • அங்கொட • வெல்லம்பிட்டிய • ஒருகொடவத்தை • மஹரகம • பொரலஸ்கமுவ • தெஹிவளை • இரத்மலானை • மொரட்டுவை  

Admin செப்டெம்பர் 17, 2025 0

இலங்கை போக்குவரத்து சபையில் விரைவில் பெண் சாரதி மற்றும் நடத்னநர்

ஹட்டன்-கொழும்பு பிரதான வீதி

சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவுறுத்தல்

பாடசாலை விடுமுறை

பாடசாலை விடுமுறை தொடர்பில் அறிவிப்பு வெளியானது: முழுமையான தகவல்!

மாம்பழம்
இலங்கையில் இரண்டரை இலட்சத்திற்கு ஏலம் போன மாம்பழம்

மட்டக்களப்பு, தேற்றாத்தீவு பால்மணல்மேடு அருள்மிகு ஸ்ரீ பாலமுருகன் ஆலயத்தில் நடைபெற்ற மாம்பழத் திருவிழாவில், நேற்று இரவு மாம்பழம் ஒன்று இரண்டரை இலட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது. மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிக மதிப்பில் ஏலம்போன மாம்பழமாக இது பதிவாகியுள்ளது. ஆலயத்தின் வருடாந்த உற்சவம் நடைபெற்றுவரும் நிலையில், நேற்று மாலை மாம்பழத்திருவிழா சிறப்பாக இடம்பெற்றது. முருகப்பெருமானும் பிள்ளையாரும் மாம்பழத்தினைப் பெறுவதற்காக மேற்கொண்ட செயற்பாடுகளையும், தாய்தந்தையர்களே உலகம் என்பதை வெளிப்படுத்தும் வகையிலும் இந்தத் திருவிழா நடாத்தப்படுகின்றது. ஆலயத்தில் விசேட வழிபாடுகளைத் தொடர்ந்து வசந்த மண்டப பூஜை நடைபெற்று, சுவாமி உள்வீதியுலா மற்றும் வெளிவீதியுலா வந்த பின்னர் மாம்பழத் திருவிழா நடைபெற்றது. இதன்போது, திருவிழாவிற்குப் பயன்படுத்தப்பட்ட மாம்பழம் ஆலயத்தில் ஏலத்திற்கு விடப்பட்டது. இளையதம்பி தவாகரன் என்ற அடியார் சுமார் இரண்டரை இலட்சம் ரூபாய் ஏலத்தொகையினைக் கொடுத்து இந்த மாம்பழத்தை வாங்கிக்கொண்டார்.  

Admin செப்டெம்பர் 10, 2025 0

கொழும்பில் உள்ள அதிகாரப்பூர்வ இல்லத்தை காலி செய்யும் மஹிந்த ராஜபக்ஷ

ஜனாதிபதிகளின் சலுகைகளை நீக்கும் சட்டமூலம்

ஜனாதிபதிகளின் சலுகைகளை நீக்கும் சட்டமூலம் நிறைவேற்றம்

அஸ்வெசும கொடுப்பனவு

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் விசேட அறிவிப்பு

Rajitha Senaratne
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்குப் பிணை

முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்னவுக்கு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் இன்று (செப்டம்பர் 09) பிணை வழங்கியுள்ளது.  அவர் இன்று காலை கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னரே இந்த பிணை வழங்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன, கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.  முன்னதாக, ஓகஸ்ட் 29 அன்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டிருந்த சேனாரத்ன, இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட தனி வழக்கொன்றுடன் தொடர்புடையதாக செப்டம்பர் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். அவரை கைது செய்வதற்கான பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து, ஓகஸ்ட் 29 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.

Admin செப்டெம்பர் 9, 2025 0

பதின்ம வயதுச் சிறுமி பாலியல் வன்புணர்வு: காதலன் கைது

பிரதமர் பதவியில் இருந்து ஹரிணி நீக்கப்படுவாரா...  டில்வின் வெளியிட்ட தகவல்

சூதாட்ட மையத்தில் 15 பேர் கைது: மக்களுக்கு இடையூறு விளைவிப்பதாக முறைப்பாடு

0 Comments