முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமானை, நவகிரகங்களின் தலைவராக போற்றப்படுகிறார். அவரை வழிபடுவதன் மூலம் வாழ்க்கையில் சகலவிதமான நன்மைகளும் உண்டாகும் என்றும், காரியத் தடைகள் நீங்கி வெற்றி கிடைக்கும் என்றும் ஆன்மீக பெரியோர்கள் கூறுகிறார்கள். அத்தகைய சிறப்புமிக்க விநாயகர் வழிபாட்டில், ஒரு குறிப்பிட்ட பொருள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
அந்தப் பொருள் அருகம்புல் ஆகும். அருகம்புல்லுக்குப் பல மருத்துவ குணங்கள் இருந்தாலும், இது மிகவும் சக்தி வாய்ந்த ஒரு தெய்வீகப் பொருளாகும். புராண காலங்களில் கூட, விநாயகருக்கு அர்ச்சனை செய்யப்பட்ட ஒரு அருகம்புல்லுக்கு இணையாக, தேவலோகச் செல்வங்கள் கூட நிகராகாது என்ற கதை உள்ளது. அத்தகைய சிறப்பு வாய்ந்த அருகம்புல்லை எந்த முறையில் பயன்படுத்தி மாலை கட்டி விநாயகருக்குச் சாற்றினால், சகல செல்வங்களும் உண்டாகும், நம்முடைய வேண்டுதல்கள் நிறைவேறும்.
விநாயகர் பெருமானை வழிபடுவதற்கு அனைத்து நாட்களுமே சிறப்பு மிகுந்த நாட்கள்தான். இருப்பினும், யாருக்கு எந்த நவகிரகத்தால் பிரச்சனைகள் இருக்கிறதோ அல்லது எந்த வேண்டுதல் தொடர்பாக விநாயகப் பெருமானை வழிபட விரும்புகிறீர்களோ, அதற்கேற்றார் போல் கிழமையைத் தேர்வு செய்து கொள்ளலாம். அல்லது விநாயகப் பெருமானுக்கு உகந்த சதுர்த்தி திதியிலும் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். அந்த நாளில் அருகிலுள்ள விநாயகர் ஆலயத்திற்குச் சென்று விநாயகரை வழிபட வேண்டும். அவ்வாறு வழிபடும்போது, விநாயகருக்கு உரித்தான அருகம்புல்லைப் பயன்படுத்தி அருகம்புல் மாலை தயார் செய்து எடுத்துச் செல்வது சிறப்பு.
அருகம்புல் மாலை தயாரிக்கும் முறை
கடைகளில் பணம் கொடுத்து அருகம்புல் மாலையை வாங்கிச் சாற்றுவது என்பது இந்த வழிபாட்டின் முழு பலனைத் தராது. இந்த அருகம்புல் மாலையை நம்முடைய கைப்பட, நாமே கட்டி விநாயகருக்குச் சாற்றும்பொழுதுதான் நம்முடைய வேண்டுதல்கள் முழுமையாக நிறைவேறும். இதற்காக, நுனி அருகம்புல்லாக 21 எண்ணிக்கையில் அருகம்புல்லை எடுத்து ஒரு கட்டாகக் கட்டிக் கொள்ள வேண்டும். இப்படி மொத்தம் 54 அல்லது 108 கட்டுகளைத் தயார் செய்து, அந்த கட்டுகளை மாலையாகத் தொடுத்து விநாயகருக்குச் சாற்ற வேண்டும். இந்த அருகம்புல் மாலையைத் தொடுக்கும்போது, முழுக்க முழுக்க நம்முடைய வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்றும், அதேசமயம் விநாயகப் பெருமானின் மந்திரங்களையும் முழு மனதோடு நினைத்துக் கொண்டு செய்ய வேண்டும்.
வழிபாட்டின் பலன்கள்
இப்படித் தயார் செய்த அருகம்புல் மாலையை விநாயகருக்குச் சாற்றி, அர்ச்சனை செய்து, நம்முடைய வேண்டுதல்கள் நிறைவேற வேண்டும் என்று சங்கல்பம் செய்து கொண்டால், விநாயகர் மனமகிழ்ந்து நம்முடைய வேண்டுதலை நிறைவேற்றுவார். அத்துடன், சகல செல்வங்களையும் வாரி வழங்குவார். விநாயகப் பெருமானுக்கே உரித்தான அருகம்புல் மாலையை இந்த முறையில் தயார் செய்து யார் ஒருவர் விநாயகருக்குச் சாற்றி வழிபடுகிறார்களோ, அவர்களுக்கு சகல செல்வங்களும் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.
'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவின் செப்டம்பர் மாதத்திற்கான உதவித்தொகை வெள்ளிக்கிழமை (12) அன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது. இந்த மாதம் மொத்தம் 1,421,574 குடும்பங்களுக்கு கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளன. இந்த கொடுப்பனவுகளுக்காக 11.2 பில்லியனுக்கும் அதிகமான ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பயனாளிகள் வெள்ளிக்கிழமை முதல் தங்களின் அஸ்வெசும நலன்புரி வங்கிக் கணக்குகளில் இருந்து நிதியைப் பெற்றுக்கொள்ள முடியும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
ஜோதிடத்தில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படுபடும் புதன், ஆகஸ்ட் மாதத்தில் மகம் நட்சத்திரத்திற்கு செல்லவுள்ளார். அதுவும் இந்த மக நட்சத்திரத்திற்கு ஆகஸ்ட் 30 ஆம் தேதி செல்லவிருக்கிறார். இந்த மகம் நட்சத்திரத்தில் புதன் செப்டம்பர் 06 ஆம் தேதி வரை இருப்பார். நட்சத்திரங்களில் மகம் 10 ஆவது நட்சத்திரமாகும். இது முன்னோர்களைக் குறிக்கிறது. மகம் நட்சத்திரத்தின் அதிபதி கேது. புதன் கேதுவின் நட்சத்திரத்திற்கு செல்வதால், அதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும். அதில் சில ராசிக்காரர்களுக்கு மோசமாக இருந்தாலும், சிலருக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு புதனின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. புத்திசாலித்தனத்தால் பல வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். இதுவரை உணர்வுகளை மற்றவர்களிடம் தெரிவிக்காமல் மறைத்திருந்தால், இக்காலத்தில் வெளிப்படுத்துவீர்கள். உங்களின் தைரியம் அதிகரிக்கும். மனதில் பட்டதை மறைக்காமல் வெளிப்படையாக பேசுவீர்கள். உணர்ச்சி ரீதியாக சிறப்பாக உணர்வீர்கள். வியாபாரிகளுக்கு சிறப்பாக இருக்கும். எடுக்கும் வேலைகளில் வெற்றி கிடைக்கும். சிம்மம் சிம்ம ராசிக்காரர்களுக்கு புதனின் நட்சத்திர பெயர்ச்சியால் தொழில் ரீதியாக சிறப்பாக இருக்கும். அறிவாற்றல் மேம்படும். புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வீர்கள். உங்களின் பேச்சு மிகவும் சுவாரஸ்மாக இருக்கும். பேச்சால் பல வேலைகளை சிறப்பாக முடிப்பீர்கள். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். நிதி நிலை மேம்படும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தேவையற்ற விஷயங்களில் நுழைந்து மன அழுத்தப்படுவதைத் தவிர்த்திடுங்கள். மேலும் இக்காலத்தில் மன அழுத்தத்தைக் குறைக்க யோகா, உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள். விருச்சிகம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு புதனின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கப் போகிறது. புத்திசாலித்தனம் அதிகரிக்கும். பேச்சால் பல வேலைகளில் வெற்றி பெறுவீர்கள். நீண்ட காலமாக இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். நிதி நிலை நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் ரீதியாக பல சிறப்பான பலன்களைப் பெறுவீர்கள். தொழிலதிபர்கள் எதிர்காலத்தில் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும்.
கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, கோட்டை நீதவான் நீதிமன்றத்தைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நான்கு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த வாக்குமூலத்திற்குப் பிறகு, விக்ரமசிங்க கைது செய்யப்பட்டார். இதனையடுத்து, அவர் விரைவில் அவர் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏ.ஆர். முருகதாஸின் இயக்கத்தில் வெளிவந்துள்ள 'மதராசி' திரைப்படம், நீண்ட கால மந்தநிலைக்குப் பிறகு ஒரு வலுவான மறுபிரவேசமாக அமைகிறது. "தீனா, ரமணா, கஜினி, துப்பாக்கி, கத்தி" போன்ற வெற்றிப் படங்களைக் கொடுத்த முருகதாஸ், இன்றும் தனது திறமையைக் கைவிடவில்லை என்பதை 'மதராசி' உறுதிப்படுத்துகிறது. சிவகார்த்திகேயன் ஒரு நடிகராக தனது பரிணாம வளர்ச்சியை இத்திரைப்படத்தில் வெளிப்படுத்துகிறார், அதே சமயம் வித்யுத் ஜம்வால் தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து உள்ளார். கதைக்களம்: அமைதியான இரவில், தமிழ்நாடு இந்தியாவிலேயே 'துப்பாக்கி தலைநகராக' மாற்றுவதற்கான ஒரு கொடூரமான திட்டம் தீட்டப்படுகிறது, அங்கு துப்பாக்கிகள் நிறைந்த லாரிகள் காவல்துறை உயர் அதிகாரிகளால் சூழப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் முக்கிய வில்லனாக விராட் (வித்யுத் ஜம்வால்) திகழ்கிறார். அவரது தோற்றமே திகிலூட்டுகிறது. இதற்கு நேர்மாறாக, சிவகார்த்திகேயனின் ரகு, காதலில் தோல்வியுற்று, மதுபோதையில் கூட்டத்தின் முன் நடனமாடிப் பாடுகிறார். இந்த 'வித்தியாசமான' தொடக்கமாக அமைகின்றது. ரகு, மாலதி (ருக்மிணி வசந்த்) மீதான காதலால் ஏற்பட்ட மன உளைச்சலில் தன் வாழ்க்கையை முடித்துக்கொள்ள நினைக்கிறார். போலீஸ் அதிகாரி பிரேம் (பிஜு மேனன்), வில்லன்களின் கூடாரத்திற்கு ஒரு தற்கொலை மிஷனுக்கு யாராவது முட்டாள் தேவை என்று தேடுகிறார். இந்த இருவரின் தேவைகளும் ஒருமிக்கும்போது, படம் ஒரு அதிரடியாக மாறுகிறது. நடிப்பு: வித்யுத் ஜம்வால் விராட் என்ற முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் தனது முத்திரையைப் பதித்து, முழுப் படத்தின் கவனத்தையும் ஈர்க்கிறார். அவரது சண்டைக் காட்சிகளில் அவர் சிறந்து விளங்குகிறார். சிவகார்த்திகேயன் ஒரு அதிரடி ஹீரோவாக தனது வளர்ச்சியை 'மதராசி'யில் வெளிப்படுத்துகிறார். ருக்மிணி வசந்த் மாலதி கதாபாத்திரத்தில் ஒரு அற்புதமான நடிப்பை வழங்கியுள்ளார். அவர் துயரில் உள்ள ஒரு பெண்ணாக இல்லாமல், படத்தின் கதையை நகர்த்தும் முக்கிய காரணியாக இருக்கிறார். பிஜு மேனன் உறுதியான அதிகாரி பிரேம் கதாபாத்திரத்தில் தனது இருப்பை உறுதிப்படுத்துகிறார். ஷபீர் கல்லாரக்கல் மற்றொரு வில்லனாக மிரட்டுகிறார். இயக்கம்: 'மதராசி' திரைப்படம் முருகதாஸின் முந்தைய வெற்றிப் படங்களான 'துப்பாக்கி' மற்றும் 'ரமணா'வின் சில பகுதிகளை நினைவுபடுத்துகிறது. 'துப்பாக்கி'யின் இடைவேளைக்கு முந்தைய பிரபலமான காட்சி போல, 'மதராசி'யிலும் பல இடங்களில், துப்பாக்கிகள், ஏறக்குறைய ஒரே நேரத்தில் சுடும் காட்சிகள் என, அவரது சிறந்த படைப்புகளின் ஒரு காட்சித் தொகுப்பாக இத்திரைப்படம் இருக்கிறது. சிவகார்த்திகேயனின் நகைச்சுவை உணர்வு 'ரமணா' வை நினைவுப்படுத்துகின்றது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அணிகளை அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்து வரும் நிலையில், இந்திய அணி நாளைய தினம் அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்புகள் உள்ளன. இந்நிலையில் இத்தொடருக்கான இந்திய அணியை முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கணித்துள்ளார். இதில் சஞ்சு சாம்சனை அணியில் சேர்க்காமல் விட்டுவிட்டு ஷ்ரேயாஸ் ஐயருக்கு இடம் வழங்கியுள்ளார். அதே நேரத்தில் அவர் தனது அணியில் சுப்மன் கில்லையும் சேர்த்துள்ளார். இந்த தொடருக்கான இந்திய அணியில் கில் இடம்பிடிக்க மாட்டார் என்று கூறப்படும் நிலையில் கில் நிச்சயமாக ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் கில் இடம்பிடிப்பார் என்று ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். ஹர்பஜன் சிங் தேர்வு செய்த இந்திய அணி: யஷஸ்வி ஜெய்ஸ்வால், அபிஷேக் சர்மா, சுப்மான் கில், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஹர்திக் பாண்ட்யா, ஷ்ரேயாஸ் ஐயர், வாஷிங்டன் சுந்தர், கேஎல் ராகுல்/ரிஷப் பந்த், ரியான் பராக், குல்தீப் யாதவ், அக்ஸர் படேல், முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங், அர்ஷ்தீப் பும்ரா.
ஜோதிட சாஸ்திரத்தின்படி, அனைத்து கிரகங்களும் தங்கள் ராசி மற்றும் நட்சத்திரத்தை தொடர்ந்து மாற்றிக்கொண்டே இருக்கின்றன. இந்த மாற்றங்கள் சில சுப மற்றும் அசுப யோகங்களை உருவாக்குகின்றன. அந்த வகையில், செப்டம்பர் 17, 2025 அன்று அதிகாலை 1:38 மணிக்கு கன்னி ராசியில் புதாதித்ய யோகம் உருவாகப்போகிறது. சூரியனும்-புதனும் இணைந்து உருவாக்கும் இந்த புதாதித்ய யோகம், சில குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத நன்மைகளை அளிக்கப் போகிறது. அந்த அதிர்ஷ்டகரமான ராசிகள் எவை என்று இங்கு விரிவாகப் பார்ப்போம். மிதுனம் (Gemini) மிதுன ராசிக்காரர்களுக்கு, புதாதித்ய யோகம் நிதி நிலையை கணிசமாக உயர்த்துகிறது. இவர்களின் வாழ்க்கையில் நேர்மறையான பலன்களை உறுதி செய்கிறது. இந்த காலகட்டத்தில் இவர்கள் பல வழிகளில் நிறைய பணம் சம்பாதிக்க முடியும், மேலும் இவர்களின் முதலீடுகள் நல்ல வருமானத்தைத் தரும். இந்த காலகட்டத்தில் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும், மேலும் திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கும். வேலையில் இருப்பவர்கள் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு போன்ற நன்மைகளை அனுபவிக்கலாம். இவர்களின் முயற்சிகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். கன்னி (Virgo) கன்னி ராசிக்காரர்கள் இப்போது எதிர்பாராத அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகிறார்கள், இதன் மூலம் அவர்கள் பல்வேறு தொழில்களில் செழிக்க முடியும். இந்த காலகட்டத்தில் இவர்களின் பொறுப்புணர்வு அதிகரிக்கும், மேலும் இவர்களின் திருமண வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சிகரமாக இருக்கும். நிலம் அல்லது சொத்து பற்றிய கடந்த காலத்தில் தீர்க்கப்படாத அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப்படும். இவர்களின் கடின உழைப்புக்கான பலன்கள் இப்போது முழுமையாகக் கிடைக்கும். பணியிடத்தில் இவர்கள் சிறந்து விளங்கலாம் மற்றும் வாழ்க்கையில் முன்னேற ஏராளமான வாய்ப்புகளைப் பெறலாம். கடந்த காலத்தில் சந்தித்து வந்த உடல்நல பிரச்சினைகள் இப்போது முடிவுக்கு வரும். தனுசு (Sagittarius) தனுசு ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் அவர்களுக்கு ஆதரவாக இருப்பதால், அவர்கள் பல முயற்சிகளில் வெற்றியடையலாம். இவர்களின் திருமண வாழ்க்கை வெற்றிகரமாக இருக்கும் மற்றும் அவர்கள் துணையுடனான உறவு சிறப்பாக மாறும். இவர்களின் நீண்ட கால திட்டங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும், மேலும் இவர்களின் வாழ்க்கை இந்த காலகட்டத்தில் புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும். இந்தக் காலம் தனுசு ராசிக்காரர்களின் வியாபாரத்திற்கு சாதகமாக இருக்கும், மேலும் அவர்கள் பெரிய லாபங்களை சம்பாதிக்கலாம். இந்த காலகட்டத்தில் இவர்களின் ஆரோக்கியம் மிகவும் சிறப்பாக இருக்கும். மீனம் (Pisces) மீன ராசியினருக்கு நிதி நிலை சீராக இருக்கும் மற்றும் புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் திறக்கப்படலாம். இந்த காலகட்டத்தில் மீன ராசிக்காரர்கள் வாங்கிய கடனில் இருந்து நிவாரணம் பெறலாம். அவர்கள் அரசாங்கம் மூலம் நிறைய நன்மைகளைப் பெறலாம் மற்றும் நீண்ட காலமாக அரசாங்க வேலையில் இருந்த தடைகளிலிருந்து நிவாரணம் பெறலாம். குழந்தைகள் மூலம் சில நல்ல செய்திகளைக் கேட்கலாம், மேலும் இவர்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மீன ராசிக்காரர்கள் சில காலமாக சந்தித்து வந்த பல்வேறு வாழ்க்கை பிரச்சனைகளிலிருந்து நிவாரணம் பெறலாம். இந்த புதாதித்ய யோகத்தால் இந்த நான்கு ராசிக்காரர்களுக்கும் செல்வ வளம் பெருகி, அதிர்ஷ்டம் கூடும் என்பது ஜோதிட கணிப்பு.
⏰ நேரம் என்பது ஒழுக்கத்தின் அடையாளம். நம் முன்னோர்கள் சூரியனின் ஒளியைப் பார்த்து நேரம் கணிக்கிற காலத்திலிருந்து, இன்றைய ஸ்மார்ட் வாட்ச் வரை, கடிகாரத்தின் பயணம் பாராட்டத்தக்கதாகும். இன்றைய வாழ்க்கையில், கைக்கடிகாரம் என்பது வெறும் நேரக் கருவி அல்ல – அது நம் ஆற்றலையும், அதிர்ஷ்டத்தையும், வாழ்வின் ஒழுங்கையும் பிரதிபலிக்கிறது. வாஸ்து சாஸ்திரம் இதையும் கவனிக்கிறது. சரியான முறையில் கடிகாரம் அணிந்தால், அது உங்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை கொண்டு வரலாம். தவறான முறையில் அணிந்தால், எதிர்மறையான தாக்கங்களும் ஏற்பட வாய்ப்பு உண்டு. இப்போது, வாஸ்து ரீதியான கைக்கடிகார வழிமுறைகளை பார்ப்போம்: 🕰️ 1. கடிகாரத்தின் டயல் (Dial) – சரியான வடிவம் மிகப்பெரிய அல்லது மிகச்சிறிய டயல்கள் தவிர்க்கப்பட வேண்டும். நடுத்தர அளவிலான, வட்டம் அல்லது சதுர வடிவ டயல்கள் வாஸ்துவிற்கு ஏற்றவை. முக்கோண வடிவ டயல்கள் வாஸ்து ரீதியாக நன்றாக இல்லையென்று கூறப்படுகிறது. 👉 சீரான வடிவம் – சீரான வாழ்க்கை! ✋ 2. எந்தக் கையில் அணிவது? வாஸ்து ரீதியாக, எந்தக் கையிலும் கடிகாரம் அணிக்கலாம். பொதுவாக, இடது கையில் அணிவது வழக்கம். ஆனால், நீங்கள் வசதியாக நினைப்பதைப் பொருத்தே வலது கையிலும் அணிக்கலாம். 👉 இது அனுபவத்திற்கு ஏற்ற மாற்றம் மட்டுமே. 🔗 3. ஸ்ட்ராப் (Strap) – பொருந்தும் முறையில் இருக்கவேண்டும் ஸ்ட்ராப் (கட்டி) தளர்வாக இருக்கக்கூடாது. அது மணிக்கட்டிற்கு சரியாக அமைய வேண்டும். தளர்ந்த ஸ்ட்ராப், கவனச்சிதறலை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது. ஸ்ட்ராப் மணிக்கட்டு எலும்பை நன்கு சுற்றி அமையும்படி இருக்க வேண்டும். 👉 முறையாக அணிந்த ஸ்ட்ராப் → நல்ல ஒழுங்கு → அதிக செயல்திறன் 🎨 4. கடிகாரத்தின் நிறம் – அதிர்ஷ்ட நிறங்களைத் தேர்வு செய்யுங்கள் தங்க நிறம் (Gold) வெள்ளி நிறம் (Silver) இவை வாஸ்து ரீதியாக அதிர்ஷ்டம் தரும் நிறங்கள். முக்கியமான நிகழ்வுகள், வேலை நேர்காணல்கள், தேர்வுகள் போன்ற சந்தர்ப்பங்களில் இவையிலான நிறங்களில் உள்ள கடிகாரங்களை அணிவது, உங்கள் நம்பிக்கையையும், வெற்றியையும் உயர்த்தும். 🛏️ 5. கடிகாரத்தை வைக்க வேண்டிய இடம் தலையணை அருகில் அல்லது அடியில் கடிகாரத்தை வைக்காதீர்கள். இது எதிர்மறையான ஆற்றலை உண்டாக்கும். குறிப்பாக, நினைவு சக்தி மற்றும் தூக்கத்தில் தடையைக் கொடுக்கும். கடிகாரம் எப்போதும் நேர்மறை சக்தி நிறைந்த இடத்தில் வைக்கப்பட வேண்டும். ✅ சிறந்த வாஸ்து நடைமுறை – சிறந்த வாழ்க்கைக்கு வழிகாட்டும்! சரியான வடிவில், சரியான முறையில் கடிகாரம் அணியுங்கள். அது உங்களை நேர்த்தியான வாழ்க்கை பாதையில் இட்டுச்செல்லும். ஒவ்வொரு நொடியும் உங்கள் வெற்றிக்கான அடியெடுத்து வைத்தல் ஆகட்டும்! 🌟 நேரத்தை அறிந்தோமெனில், வாழ்வையும் அறியலாம். வாஸ்துவுடன் கடிகாரத்தை இணைத்தால், அதிர்ஷ்டமும் உங்கள் பக்கமே! ⌚ 🛑 முக்கிய குறிப்பு: இங்கே வழங்கப்படும் தகவல்கள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிடக் கோட்பாடுகள் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளன. இது அழுத்தமான அறிவுரை அல்ல. குறிப்பிட்ட நேரங்களில், உங்கள் தனிப்பட்ட ஜாதகம் மற்றும் சூழ்நிலைகளைப் பொருத்து, அறிந்த ஜோதிட நிபுணரின் ஆலோசனையை பெறுவது அவசியம்.