முன்னாள் மீன்வள அமைச்சர் ராஜித சேனாரத்னவை செப்டம்பர் 9 வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதவான், இன்று (29) உத்தரவிட்டார்.
சிறைச்சாலை அதிகாரிகளால் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட சேனாரத்ன, ஏற்கெனவே மற்றொரு வழக்கு தொடர்பாக கொழும்பு உயர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
பின்னர் உயர் நீதிமன்ற நீதிபதி அவரை விளக்கமறியலில் வைத்து நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.
அரசாங்கத்திற்கு ரூ.20 மில்லியனுக்கும் அதிகமான நிதி இழப்பை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சருக்கு எதிராக நீதவான் நீதிமன்றத்தால் முன்னர் ஒரு பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
கிரிந்த மீன்வள துறைமுகத்தில் மணல் அகழ்வு திட்டத்தை ஒரு கொரிய நிறுவனத்திற்கு வழங்கியது தொடர்பான வழக்கு இது.
செப்டம்பர் 3 ஆம் திகதி காலை 9 மணிக்கு சந்தேக நபரை லஞ்ச ஒழிப்பு ஆணையத்தில் ஆஜர்படுத்தி வாக்குமூலம் பதிவு செய்யுமாறு சிறை அதிகாரிகளுக்கு நீதவான் உத்தரவிட்டார்.
ஜோதிடத்தில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படுபடும் புதன், ஆகஸ்ட் மாதத்தில் மகம் நட்சத்திரத்திற்கு செல்லவுள்ளார். அதுவும் இந்த மக நட்சத்திரத்திற்கு ஆகஸ்ட் 30 ஆம் தேதி செல்லவிருக்கிறார். இந்த மகம் நட்சத்திரத்தில் புதன் செப்டம்பர் 06 ஆம் தேதி வரை இருப்பார். நட்சத்திரங்களில் மகம் 10 ஆவது நட்சத்திரமாகும். இது முன்னோர்களைக் குறிக்கிறது. மகம் நட்சத்திரத்தின் அதிபதி கேது. புதன் கேதுவின் நட்சத்திரத்திற்கு செல்வதால், அதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும். அதில் சில ராசிக்காரர்களுக்கு மோசமாக இருந்தாலும், சிலருக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு புதனின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. புத்திசாலித்தனத்தால் பல வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். இதுவரை உணர்வுகளை மற்றவர்களிடம் தெரிவிக்காமல் மறைத்திருந்தால், இக்காலத்தில் வெளிப்படுத்துவீர்கள். உங்களின் தைரியம் அதிகரிக்கும். மனதில் பட்டதை மறைக்காமல் வெளிப்படையாக பேசுவீர்கள். உணர்ச்சி ரீதியாக சிறப்பாக உணர்வீர்கள். வியாபாரிகளுக்கு சிறப்பாக இருக்கும். எடுக்கும் வேலைகளில் வெற்றி கிடைக்கும். சிம்மம் சிம்ம ராசிக்காரர்களுக்கு புதனின் நட்சத்திர பெயர்ச்சியால் தொழில் ரீதியாக சிறப்பாக இருக்கும். அறிவாற்றல் மேம்படும். புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வீர்கள். உங்களின் பேச்சு மிகவும் சுவாரஸ்மாக இருக்கும். பேச்சால் பல வேலைகளை சிறப்பாக முடிப்பீர்கள். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். நிதி நிலை மேம்படும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தேவையற்ற விஷயங்களில் நுழைந்து மன அழுத்தப்படுவதைத் தவிர்த்திடுங்கள். மேலும் இக்காலத்தில் மன அழுத்தத்தைக் குறைக்க யோகா, உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள். விருச்சிகம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு புதனின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கப் போகிறது. புத்திசாலித்தனம் அதிகரிக்கும். பேச்சால் பல வேலைகளில் வெற்றி பெறுவீர்கள். நீண்ட காலமாக இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். நிதி நிலை நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் ரீதியாக பல சிறப்பான பலன்களைப் பெறுவீர்கள். தொழிலதிபர்கள் எதிர்காலத்தில் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும்.
கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, கோட்டை நீதவான் நீதிமன்றத்தைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நான்கு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த வாக்குமூலத்திற்குப் பிறகு, விக்ரமசிங்க கைது செய்யப்பட்டார். இதனையடுத்து, அவர் விரைவில் அவர் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று விபத்துக்குள்ளானதில் பாடசாலை மாணவர்கள் இருவர் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் 13 பேர் காயமடைந்துள்ளனர். குளியாப்பிட்டி, வில்பொல பாலத்திற்கு அருகில் இன்று (27) காலை விபத்து இடம்பெற்றுள்ளது. பாடசாலை வேனுடன் டிப்பர் ஒன்று நேருக்கு நேர் மோதியமையால் விபத்து சம்பவித்துள்ளது. பாடசாலை வேன் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். காயமடைந்த 13 மாணவர்கள், குளியாப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பில் குளியாப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சீனாவின் ஷான்சி மாகாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு, மோசடி வழக்கில் 2020ஆம் ஆண்டில் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது அவர் கர்ப்பமாக இருந்ததால், சிறைக்கு வெளியே தண்டனை அனுபவிக்க அனுமதிக்கப்பட்டார். இப்படி ஒரு வசதி இருப்பதைப் பயன்படுத்தி, ஒவ்வொரு முறையும் தனது மகப்பேறு காலம் முடிவடையும்போது அவர் மீண்டும் மீண்டும் கர்ப்பம் தரித்து வந்துள்ளார். இவ்வாறு, அவர் கடந்த 4 ஆண்டுகளில் 3 முறை கர்ப்பம் தரித்து சிறைக்கு போவதை தவிர்த்து வந்துள்ளார். இந்நிலையில், இந்து தொடர்பில் நடத்திய விசாரணையில், சிறைக்கு செல்வதை தவிர்க்க அவர் அவ்வாறு செய்வது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவரை கைது செய்து பொலிஸார் சிறையில் அடைத்தனர். அப்பெண், தான் பெற்ற 3 குழந்தைகளில் 2 குழந்தைகளை விவாகரத்தான கணவரிடமும், மேலும் ஒரு குழந்தையை அவரது சகோதரரிடமும் கொடுத்துள்ளார். சீனாவின் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி, ஒரு பெண் குற்றவாளி கர்ப்பமாக இருந்தால் அல்லது ஒரு குழந்தைக்கு பாலூட்டினால் அவருக்கு வீட்டுக் காவல் வழங்கப்படுகிறது.
“கச்சதீவை ஒருபோதும் இந்தியாவுக்கு விட்டுக்கொடுக்க மாட்டோம்” என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். கச்சதீவை மீட்டு, தமிழக கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைக்கு பிரதமர் மோடி தீர்வை வழங்க வேண்டும் என நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் அண்மையில் தெரிவித்திருந்தார். இதற்கு பதில் அளிக்கும் விதத்திலேயே, அமைச்சர் மேற்படி தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (27) நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகச் சந்திப்பில் இது தொடர்பில் கேள்விகள் கேட்கப்பட்டது. அதனையடுத்து கருத்து தெரிவித்த அமைச்சர் விஜித ஹேரத், “தென்னிந்தியாவில் இது தேர்தல் காலம். இக்காலத்தில் ஒவ்வொருவரும் ஒன்றைக் கூடுவர். இதை நாம் பொருட்படுத்தத் தேவையில்லை. “அரச மட்டத்தில் உத்தியோகபூர்வமாக எவரும் கருத்து வெளியிட்டிருந்தால் அது குறித்து கவனம் செலுத்தலாம். எனினும், கச்சதீவை இந்தியாவுக்கு நாம் ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம்” என அவர் மேலும் தெரிவித்தார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரத்தன தேரரை செப்டம்பர் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கங்கொடவில நீதவான் இன்று உத்தரவிட்டார். அதுரலியே ரத்தன தேரர் இன்று (29) காலை கங்கொடவில நீதவான் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
மலையக மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆண்ட்ரூ பேட்ரிக்கை சந்தித்து, மலையக ஊடகவியலாளர்கள் கலந்துரையாடினர். பிரித்தானிய அரசாங்கமே மலையக மக்களை இலங்கைக்கு அழைத்துவந்தது எனவே ஏனைய நாடுகளைவிட பிரித்தானிய அரசாங்கம் மலையக மக்கள் விடையத்தில் கூடுதல் கரிசணை கொண்டிருக்க வேண்டும் என ஊடகவியலாளர்கள், உயர்ஸ்தானிகரிடம் வலியுறுத்தினார்கள். இந்தச் சந்திப்பு, நுவரெலியாவில் நேற்றுப் புதன்கிழமை (27) நடைபெற்றது. மலையகத்தைச் சேர்ந்த பிராந்திய ரீதியில் கடமையாற்றும் மற்றும் தலைநகரில் கடமையாற்றும் ஊடகவியலாளர்களின் பிரச்சினைகள் குறித்தும் உயர்ஸ்தானிகரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. மேலும், மலையக மக்கள் எதிர்நோக்கும் கல்வி, சுகாதாரம், காணி மற்றும் வீட்டு உரிமை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து இதன்போது விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. இந்தச் சந்திப்பில், ஊடகவியலாளர்களான ஜே.ஏ.ஜோர்ஜ், பா.நிரோஸ்குமார், நோட்டன் ராம் மற்றும் சதீஸ்குமார் ஆகியோர் பங்கேற்றிருந்தனர். மலைய மக்களின் பிரச்சினைகளை சிரத்தையுடன் செவிமெடுத்த பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆண்ட்ரூ பேட்ரிக்கிடம் மலையக தமிழ் ஊடகவியலாளர்கள், மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.
“கச்சதீவை ஒருபோதும் இந்தியாவுக்கு விட்டுக்கொடுக்க மாட்டோம்” என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். கச்சதீவை மீட்டு, தமிழக கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைக்கு பிரதமர் மோடி தீர்வை வழங்க வேண்டும் என நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் அண்மையில் தெரிவித்திருந்தார். இதற்கு பதில் அளிக்கும் விதத்திலேயே, அமைச்சர் மேற்படி தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (27) நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகச் சந்திப்பில் இது தொடர்பில் கேள்விகள் கேட்கப்பட்டது. அதனையடுத்து கருத்து தெரிவித்த அமைச்சர் விஜித ஹேரத், “தென்னிந்தியாவில் இது தேர்தல் காலம். இக்காலத்தில் ஒவ்வொருவரும் ஒன்றைக் கூடுவர். இதை நாம் பொருட்படுத்தத் தேவையில்லை. “அரச மட்டத்தில் உத்தியோகபூர்வமாக எவரும் கருத்து வெளியிட்டிருந்தால் அது குறித்து கவனம் செலுத்தலாம். எனினும், கச்சதீவை இந்தியாவுக்கு நாம் ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம்” என அவர் மேலும் தெரிவித்தார்.