ப.பிறின்சியா டிக்சி
News Editor
Pre School Teacher
ப.பிறின்சியா டிக்சி
“பணம் என்று வந்தால் கஷ்டம்தான். என்னுடைய ஒரு மாத முழுமையான சம்பளத்தை கொண்டு, இரண்டு நாளுக்கு என் குடும்பத்துக்குத் தேவையான அரசி, மா, சீனி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை மாத்திரமே என்னால் வாங்க முடிகிறது” என்று ஆதங்கப்படுகின்றார், வவுனியா - உக்குளாங்குளப் பகுதியிலுள்ள ஜீனியஸ் பாலர் பாடசாலை ஆசிரியையான க.டோஞ்சினா பிரியா.
10 வருடங்களுக்கு மேலாக பாலர் பாடசாலை ஆசிரியையாக பணியாற்றும் பிரியாவுக்கு 2 1/2 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. பிரியா இப்போது 8 மாத கர்ப்பிணியாகவும் உள்ளார். தனது வகுப்பில் உள்ள சுமார் 40 பிள்ளைகளுக்கு கல்வி கற்றுக்கொடுக்கின்ற அவர், தனக்கு பொருளாதார ரீதியான பிரச்சினை இருந்தபோதும், அதனை சமாளித்துக்கொண்டு மாணவர்களின் நன்மை கருதி மன மகிழ்ச்சியுடனும் தனது பணியை முன்னெடுத்துச் செல்வதாக கூறுகின்றார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவினை சமாளிக்க முடியாத நிலையில், தனது வயிற்றிலுள்ள சிசுக்கு தேவையான போஷாக்கை வழங்குவது மற்றும் முதல் பெண் குழந்தையில் பராமரிப்பு உள்ளிட்ட குடும்ப செலவுகளை சமாளிப்பது பிரியாவுக்கு பாரிய சவாலாக உள்ளது.
பொருளாதார நெருக்கடியானது நாட்டின் கல்வி முறைமையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, பாலர் பாடசாலை ஆசிரியர்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் தவிக்கின்றார்கள்.
வவுனியா மாவட்டத்தில் அரச பாலர் பாடசாலைகளில் பணிபுரிந்து, அரசால் மிகக் குறைந்த கொடுப்பனவு பெறும் இந்த ஆசிரியர்களுக்கு, வாழ்க்கைச் செலவு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், உரிய நேரத்தில் சம்பளம் பெற்றுக்கொள்ள முடியாத நிலையொன்றும் காணப்படுகின்றது.
“அரசாங்கத்தால் எமக்கு மாதாந்த கொடுப்பனவாக 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகின்றது. 20ஆம் திகதி கிடைக்க வேண்டிய இந்தக் கொடுப்பனவு தாமதமாக 30ஆம் திகதியளவிலேயே எமக்கு அண்மைய காலமாக வழங்கப்படுகின்றது” என பூமாங்குளம் பகுதியில் உள்ள (பெயரை வெளிப்படுத்த விரும்பாத) பாலர் பாடசாலை ஆசிரியை கூறுகின்றார்.
பணிக்கு சேர்ந்த ஆரம்பத்தில் மாதம் 3,000 ரூபாய் வழங்கப்பட்டதுடன், அதன்பின்னர் 4,000ஆக உயர்ந்து, கடந்த 7 வருடங்களாக 6,000 ரூபாய் கொடுப்பனவு மாத்திரமே தமக்குக் கிடைப்பதாக தெரிவிக்கும் அவர், தமது கொடுப்பனவை அதிகரிக்குமாறு, பல்வேறு தரப்பினருக்கு கடிதம் ஊடாக கோரிக்கை வழங்கிய போதும் இதுவரை தீர்வு எதுவும் கிடைக்கப்பெறவில்லை என்பதே அவரின் ஆதங்கமாகும்.
வவுனியா மாவட்ட பாலர் பாடசாலை ஆசிரியர்களை பொறுத்தமட்டில் பலர் தங்கள் குடும்பத்தை நடத்துவதற்கும், அவர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் சிரமப்படுகிறார்கள் என்பதனை எமது கள விஜயத்தில் அறிந்துகொள்ளக் கூடியதாக இருந்தது.
அரசாங்கத்தால் வழங்கப்படும் 6000 ரூபாய் கொடுப்பனவு மற்றும் பாலர் பாடசாலை நிர்வகத்தால் வழங்கப்படும் சம்பளத்தில் தங்கியிருக்கும் ஆசிரியையான ஈசன் தர்சினி, மூன்று பிள்ளைகளின் தாயான இவர், 18 கிலோமீற்றர் தொலைவில் இருந்து வவுனியா நகரில் உள்ள சுத்தானந்த இந்து இளைஞர் சங்க பாலர் பாடசாலைக்கு வருகை தருகின்றார்.
“காலை 7.30 மணிக்கு பாலர் பாடசாலைக்கு வரவேண்டும் என்பதால் ஒரு மணித்தியாலத்துக்கு முன்னதாகவே வீட்டில் இருந்து புறப்பட வேண்டும். பஸ்ஸில் பயணிப்பது சிரமம் என்பதால், மோட்டார் சைக்கிளில் வருகின்றேன். எமக்கு அரசாங்கத்தால் வழங்கப்படும் கொடுப்பனவு எரிபொருள் செலவுக்கு கூட போதுமானதாக இல்லை” என்று அவர் தனது நிலையை விளக்கினார்.
இதேவேளை, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் எதிர்நோக்கும் போக்குவரத்து இடர்பாடுகள் தொடர்பில் இலங்கை போக்குவரத்து சபையுடன் கலந்துரையாடி போக்குவரத்து வழித்தளங்களை ஒழுங்கமைத்துதருவதாக 27.4.2021 அன்று இடம்பெற்ற 2021 ஆம் ஆண்டுக்கான முதலாவது வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தின் போது, அப்போதைய வடமாகாண ஆளுநர் திருமதி பீ.எஸ்.எம் சார்ள்ஸ் உறுதியளித்திருந்தார். எனினும், உரிய நேரத்தில் பஸ் போக்குவரத்து இன்மை காரணமாக தூர இடங்களில் இருந்து வவுனியாவுக்கு வருகின்ற முன்பள்ளி ஆசிரியர்கள் பாரிய சிரமங்களை தொடர்ந்தும் எதிர்நோக்குகின்றனர்.
“நாம் பாலர் பாடசாலைக்கு அணிந்து வரும் சாரி ஒன்றின் விலையே 3000 ரூபாய்க்கும் அதிகமாக காணப்படும் நிலையில், எமக்கு கிடைக்கும் குறைந்த கொடுப்பனவுக்கு மத்தியில் குடும்ப செலவை சமாளிக்க நான் ஓய்வு நேரத்தில் வீட்டுத் தோட்ட செய்கையில் ஈடுபட்டு வருகின்றேன். அதன் ஊடாக கிடைக்கும் சிறிய வருமானம் எனக்கு மிகப்பெரும் உதவியாக உள்ளது” என்று தனது பொருளாதார நெருக்கடி சமாளித்து வருவதை அவர் விவரித்தார்.
கூட்டுக்குடும்பம் என்ற விடயம் இன்று அருகி தனிக்குடும்பங்களாக மாறிவரும் நிலையில் வேலைக்கு செல்லும் பெற்றோருக்கு பாலர் பாடசாலை என்பது அத்தியாவசிய விடயமாக உள்ள போதும், இந்த பாலர் பாடசாலையில் கற்றுக்கொடுக்கும் ஆசிரியைகள் மிகக்குறைந்த வருமானத்துடன் சேவையாற்றி வருகின்றனர்.
வவுனியா - தோனிக்கல் பிரதேசத்தில் உள்ள இளவேனில் பாலர் பாடசாலையின் ஆசிரியையாகவும் அதிபராகவும் கடமையாற்றுபவர் திருமதி தமயந்தி ஜெயரத்தினா.
வவுனியா நகரத்தில் முதன் முதலில் குழந்தை பராமரிப்பு உடன் இணைந்த பாலர் பாடசாலையை தானே அறிமுகப்படுத்தியதாக கூறும் இவர், பொருளாதார செலவுகளை சமாளிக்க முடியாமையால் தனது கனவுகளை கட்டுப்படுத்திக்கொண்டு நகரத்திலிருந்து கிராமத்துக்கு பாலர் பாடசாலையை இடமாற்றியதாக கவலையுடன் கூறினார்.
“வவுனியாவில் நகரில் பல பெற்றோருக்கு பிள்ளை பராமரிப்பு நிலையம் என்பது முக்கிய விடயமாக மாறியுள்ளது. வேலைக்குச் செல்லும் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை காலை விட்டுச் சென்று, மாலை 5.30 மணிக்கே அழைத்துச் செல்லும் நிலையொன்று காணப்படுகின்றது. நாம் 2010ஆம் ஆண்டு 12 ஆயிரம் ரூபாய் வாடகையில் இளவேனில் என்ற பிள்ளை பராமரிப்பு மற்றும் பாலர் பாடசாலையை ஆரம்பித்தோம். எனினும், கட்டடத்துக்கான வாடகை இரண்டு மடங்காக அதிகரித்த நிலையில், பொருளாதார நெருக்கடியால் எமது பாலர் படசாலையை கிராமத்துக்கு இடமாறினோம்” என்றார்.
கடந்த வருடம் ஆசிரியர்களுக்கான சம்பள உயர்வுகோரி நாடளாவிய ரீதியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அதில் தரம் 1 முதல் 5 வரையான முன்பள்ளி ஆசிரியர்கள் ஓரளவு நன்மை அடைந்தனர். எனினும், 1 1/2 வயது முதல் 5 1/2வயது வரையான பிள்ளைகளுக்கான சிறுவர் பராமரிப்பு மற்றும் பாலர் பாடசாலை ஆசிரியர்களின் நிலை இன்று வரை திண்டாட்டமாகத்தான் உள்ளது என்கிறார் வவுனியா நகர் ஆசிரியை ஏஞ்சல் ஜோசப்.
ஆரம்ப காலங்களில் 6 வயதைப் பூர்த்தியான பிள்ளைகளேயே பாடசாலைகளில் பெற்றோர் சேர்ப்பிப்பிக்கும் நிலையொன்று காணப்பட்ட போதும், இன்று, கல்வித்துறையில் உள்ள போட்டிகளை சமாளிக்க இரண்டரை வயதிலேயே தமது குழந்தைகளுக்கு கல்வியை விதைக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு பெற்றோர்கள் ஆளாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
“6 மாதங்களிலேயே குழந்தையை கொண்டு வந்து ஒப்படைக்கின்றனர். அவர்களுக்கு எந்தக் குறையும் இருக்கக் கூடாது என்பதில் நாங்கள் கவனமாக இருக்கிறோம்” என இரண்டரை வயதுப் பிள்ளையை தனது இடுப்பில் அமர்த்தியிருந்தவாறே, தனது ஆசிரியர் பணியை விவரித்தார் ஏஞ்சல் ஜோசப்.
கொரோனா தொற்று மற்றும் அண்மைய பொருளாதார நெருக்கடிக்கு பின்னரான காலப்பகுதியில் குடும்பத்தில் கணவன் – மனைவி இருவரும் வேலைக்குப் போனால்தான் குடும்ப செலவுகளை ஈடுகட்டலாம் என்கின்ற நிலை தோன்றியுள்ளது.
இதனால், பால்மனம் மாறாத 6 மாத குழந்தையைகூட சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் விட்டுச் செல்ல வேண்டிய கட்டாயத்துக்கு பெண்கள் தள்ளப்பட்டுள்ளனர். அது மாத்திரமில்லாமல், தனது உழைப்பில் அதிகளவிலான பணத்தை அதற்கான கட்டணமாகவும் அவர்கள் செலுத்துகின்றனர்.
பொருளாதார நெருக்கடிக்கு பின்னர் இலங்கையில் சேவைகளின் கட்டணங்கள் அதிகரித்த நிலையில், பாலர் பாடசாலை கட்டண அதிகரிப்பின் பயன் அந்த ஆசிரியர்களை முழுமையாக சென்றடையவில்லை என்பதை எமது களவிஜயத்தில் நேரில் காண கிடைத்தது.
பெரும்பாலான குழந்தை பராமரிப்பு நிலையங்கள் மற்றும் பாலர் பாடசாலைகள் என்பன வாடகைக்கு பெறப்படும் வீடுகள் அல்லது கட்டடங்களிலேயே நடத்தப்படுகின்றன. அண்மைய காலமாக அதிகரித்துள்ள வாடகை, மின்சாரக் கட்டணம் மாத்திரமின்றி கற்றல் உபகரணங்களின் விலை அதிகரிப்பு என்பனவற்றால் பாலர் பாடசாலை பராமரிப்பு என்பது பாரிய சுமையாக மாறியுள்ளதாக ஆசிரியைகள் அங்கலாய்கின்றனர்.
இவ்வறான நிலையில், பெற்றோரிடம் அறவிடும் சிறு தொகை பணத்தில் நிர்வாக செலவுகளை ஈடுசெய்யவே திண்டாடும் நிலையில், முன்பள்ளி அதிபர்கள், ஆசிரியர்களின் தியாகத்துக்கு மத்தியிலேயே இதனை திறம்பட நடத்த முடிவதாக கூறுகின்றனர்.
கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் பாலர் பாடசாலை ஆசிரியர் பயிற்சிகளுக்கு தனியார் நிறுவனங்களில் சுமார் 45 ரூபாய் வரை கட்டணங்கள் அறவிடப்படுவதுடன், இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தால் கற்பிக்கப்படும் பயிற்சிகளுக்கு மாதாந்தம் 6,000 ரூபாய் வீதம் 1 வருடத்துக்கு 72,000 ரூபாய் அறவிடப்படுகிறது. மேலும், Association Montessori Internationale (AMI) எனும் சர்வதேச டிப்ளோமா சான்றிதழைப் பொறுவதற்கான பாலர் வகுப்பு ஆசிரியர் பயிற்சிகளுக்கு சுமார் 3 இலட்சம் ரூபாய் வரை செலவாகிறது.
2012ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் மாதாந்தம் 4,000 ரூபாய் செலவு செய்து ஒரு வருடத்துக்கும் மேலான முன்பள்ளி ஆசிரியர் கற்கைநெறியை தான் பயின்றதாகக் கூறும் உக்குளாங்குளம் ஜீனியஸ் பாலர் பாடசாலை ஆசிரியையான டோஞ்சினா பிரியா, தனது சேவையில் 11 வருடங்கள் ஆகியும் தற்போதும் மாதம் 6,000 ரூபாய் மாத்திரமே அரசாங்கத்திடம் இருந்து கொடுப்பனவாக பெற்றுக்கொள்வதாக கவலையுடன் குறிப்பிடுகின்றார்.
இவ்வாறு பாலர் வகுப்பு ஆசிரியர் பயிற்சியை பெற்றுக்கொள்வதற்காக செலவாகிய பணத்தை மீளப் பெறுவதற்கே தமது சேவைக்காலத்தில் பாதி கழிந்ததாக வவுனியா பாலர் பாடசாலை ஆசிரியர்கள் பலரும் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
பாலர் பாடசாலை ஆசிரியர்கள் தமது பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வருவதற்கு சுயதொழில் உள்ளிட்ட விடயங்களில் கவனம் செலுத்த நேரமின்மை பிரச்சினை பிரதானமாக முன்வைக்கப்படுகின்றது.
“கணவனை இழந்த மற்றும் நலிவடைந்த நிலையில் உள்ள பல பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கு உதவக்கூடிய சுயதொழில் உற்பத்தி திட்டங்களை அறிமுகப்படுத்திய போதும், அதற்கான நேரத்தை ஒதுக்கிக் கொள்ள முடியாமை காரணமாக அதனை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியாமல் உள்ளனர்” – இவ்வாறு கூறுகின்றார் வவுனியா வடக்கில் இருந்து இயங்கிவரும் அன்னை தெரேசா பெண்கள் அமைப்பின் தலைவரான லூசியா மைக்கல்.
“வாரத்தின் ஐந்து நாட்கள் பெரும்பாலான நேரத்தை பாடசாலையில் கழிக்கும் பாலர் பாடசாலை ஆசிரியர்கள், சனி மற்றும் ஞாயிறு தினங்களில் வலயக் கல்வி பணிமனையினால் நடத்தப்படும் பயிற்சிகளுக்கு கட்டாயம் செல்லவேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாகியுள்ளனர். இவ்வாறான நிலையில் சுயதொழில் முயற்சிகளை அவர்களால் நினைத்துகூட பார்க்க முடியாத நிலை உள்ளது” என்கின்றார் லூசியா.
இவ்வாறு பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள இந்த ஆசிரியர்களுக்கு உதவிகளை வழங்க அரசாங்கம் மற்றும் ஏனைய அரச சார்பற்ற நிறுவனங்கள் முன்வர வேண்டும் என்று கூறிய லூசியா, அன்னை தெரேசா பெண்கள் அமைப்பின் தலைவர் என்ற ரீதியில் தம்மை நாடிவரும் ஆசிரியைகளுக்கு பொருளாதார ரீதியாக உதவ தாம் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
தவிர, சாதாரண தர பொதுப் பரீட்சையில் 6 பாடங்களை சித்தியடைந்து, பாலர் பாடசாலை ஆசிரியர் பயிற்சிகளுடாக இப்பணிக்கு வந்த பல யுவதிகள், உதவி ஆசிரியர் அரச நியமனங்கள் வழங்கப்படுவதாக தேர்தல் கால வாக்குறுதிகளால் ஏமாற்றப்படுகின்றனர் என்றும் அவர் சாடினார்.
“இப்பணிக்கு என்று ஒரு தரம் இருக்கின்றது. அதை அவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும். O/L, AL தகுதிகளுடம் பாலர் பாடசாலை ஆசிரியர் பணிக்கு வந்து தற்காலத்திலும் மாதம் 2,000 ரூபாய் கொடுப்பனவு வாங்கும் பல யுவதிகள் உள்ளனர். அதிலும் 3 மாதங்களுக்கு ஒரு முறை 6,000 வாங்குபவர்களும் இருக்கின்றனர். இவ்வாறான ஆசிரியர்கள் NVQ level 4, 5 உள்ளிட்டவற்றை நிறைவு செய்ய வேண்டும்” என்று லூசியா ஆலோசனை வழங்கினார்.
கல்வியமைச்சின் கீழ் இயங்கும் மூன்றாம் நிலைக்கல்வி, தொழிற்கல்வி ஆணைக்குழு (TVEC) நாடளாவிய ரீதியில் உள்ள பயிற்சி நிலையங்கள் கூடாக இதற்கான வாய்பை வழங்குகின்றது. எனினும், வவுனியா மாவட்டத்தில் அவ்வாறான பயிற்சி நிலையங்கள் குறித்த தகவல்கள் இன்மையானது, இம்மாவட்ட யுவதிகளுக்கான துரதிர்ஷ்டமாகவே காணப்படுகிறது.
கொரோனா காலத்தில் பல சிறுவர் பராமரிப்பு மற்றும் பாலர் பாடசாலைகள் வவுனியாவிலும் மூடப்பட்டன. அத்துடன், சம்பள பற்றாக்குறை, போக்குவரத்துச் செலவு அதிகரிப்பு உள்ளிட்ட பொருளாதாரத் தாக்கங்களால் பல ஆசிரியர்கள் இடைவிலகிச் செல்கின்றமையால் தமது பிள்ளைகள் உள ரீதியான பாதிப்புகளுக்கு உள்ளாவதாக பெற்றோர் சுட்டிக்காட்டுகின்றனர்.
“முதல் இருந்த ஆசிரியையுடன் எனது பிள்ளை மிகவும் அன்பாக இருப்பார். அவரை பிள்ளைக்கு மிகவும் பிடிக்கும். ஆனால், அந்த ஆசிரியை விட்டுச் சென்னதால் புது ஆசிரியையுடன் எனது மகன் சேர மாட்டேன் என்கிறார். பாடசாலை வர விருப்பம் இன்மை காட்டுகிறார்” என்கிறார் ஜீனியஸ் பாலர் பாடசாலையில் கல்வி பயிலும் மாணவனின் தந்தையான விஜிதரன்.
2 வயது முதல் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் அறிவு விருத்தியாகும் திறன் மிகவும் உத்வேகம் கொண்டதாக உளவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதாவது, புதிதாக பல விடயங்களை கற்றுக்கொள்ளக்கூடிய வகையில் மூளை விருத்தியாகும் காலப்பகுதியாக இது உள்ளது. இக்காலப்பகுதியில் அந்தக் குழந்தைகளின் அறிவுக்கு வித்திட்டு அவர்களில் எதிர்காலம் சிறப்பதற்கு வழிகாட்டுபவர்களாக பாலர் பாடசாலை ஆசிரியர்களே உள்ளனர்.
இதேவேளை, இலங்கையை பொறுத்தவரையில் பிள்ளை பராமரிப்பு மற்றும் பாலர் பாடசாலை கற்றல் நடவடிக்கையில் பெரும்பாலும் பெண்களே ஈடுபடுகின்றனர். 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பராமரிக்க பொறுமை, சகிப்புத் தன்மை, அர்ப்பணிப்புகள் அவசியமாகும்.
தாயாகவும், பராமரிப்பாளர்களாகவும், சில நேரங்களில் தாதியர்களாகவும் செயற்படும் பாலர் பாடசாலை ஆசிரியர்கள் இன்று விளிம்பு நிலை மக்களாக பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தங்கள் வாழ்க்கையை நடத்திச் செல்வதுடன், தங்கள் மனதில் உள்ள ரணங்களை புன்னகையால் மறைத்து சிரித்த முகத்துடன் சிறுவர்களை அள்ளியணைப்பது, அர்ப்பணிப்பின் உச்சம் என்றே கூறலாம்.
இந்தக் கட்டுரை, நியூஸ் 21 இணையத்தளத்தில் 04.04.2023 திகதியன்று பிரசுரிக்கப்பட்டதன் மீள் பிரசுரமாகும்.
ஜோதிடத்தில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படுபடும் புதன், ஆகஸ்ட் மாதத்தில் மகம் நட்சத்திரத்திற்கு செல்லவுள்ளார். அதுவும் இந்த மக நட்சத்திரத்திற்கு ஆகஸ்ட் 30 ஆம் தேதி செல்லவிருக்கிறார். இந்த மகம் நட்சத்திரத்தில் புதன் செப்டம்பர் 06 ஆம் தேதி வரை இருப்பார். நட்சத்திரங்களில் மகம் 10 ஆவது நட்சத்திரமாகும். இது முன்னோர்களைக் குறிக்கிறது. மகம் நட்சத்திரத்தின் அதிபதி கேது. புதன் கேதுவின் நட்சத்திரத்திற்கு செல்வதால், அதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும். அதில் சில ராசிக்காரர்களுக்கு மோசமாக இருந்தாலும், சிலருக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு புதனின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. புத்திசாலித்தனத்தால் பல வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். இதுவரை உணர்வுகளை மற்றவர்களிடம் தெரிவிக்காமல் மறைத்திருந்தால், இக்காலத்தில் வெளிப்படுத்துவீர்கள். உங்களின் தைரியம் அதிகரிக்கும். மனதில் பட்டதை மறைக்காமல் வெளிப்படையாக பேசுவீர்கள். உணர்ச்சி ரீதியாக சிறப்பாக உணர்வீர்கள். வியாபாரிகளுக்கு சிறப்பாக இருக்கும். எடுக்கும் வேலைகளில் வெற்றி கிடைக்கும். சிம்மம் சிம்ம ராசிக்காரர்களுக்கு புதனின் நட்சத்திர பெயர்ச்சியால் தொழில் ரீதியாக சிறப்பாக இருக்கும். அறிவாற்றல் மேம்படும். புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வீர்கள். உங்களின் பேச்சு மிகவும் சுவாரஸ்மாக இருக்கும். பேச்சால் பல வேலைகளை சிறப்பாக முடிப்பீர்கள். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். நிதி நிலை மேம்படும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தேவையற்ற விஷயங்களில் நுழைந்து மன அழுத்தப்படுவதைத் தவிர்த்திடுங்கள். மேலும் இக்காலத்தில் மன அழுத்தத்தைக் குறைக்க யோகா, உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள். விருச்சிகம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு புதனின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கப் போகிறது. புத்திசாலித்தனம் அதிகரிக்கும். பேச்சால் பல வேலைகளில் வெற்றி பெறுவீர்கள். நீண்ட காலமாக இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். நிதி நிலை நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் ரீதியாக பல சிறப்பான பலன்களைப் பெறுவீர்கள். தொழிலதிபர்கள் எதிர்காலத்தில் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும்.
கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, கோட்டை நீதவான் நீதிமன்றத்தைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நான்கு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த வாக்குமூலத்திற்குப் பிறகு, விக்ரமசிங்க கைது செய்யப்பட்டார். இதனையடுத்து, அவர் விரைவில் அவர் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சீனாவின் ஷான்சி மாகாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு, மோசடி வழக்கில் 2020ஆம் ஆண்டில் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது அவர் கர்ப்பமாக இருந்ததால், சிறைக்கு வெளியே தண்டனை அனுபவிக்க அனுமதிக்கப்பட்டார். இப்படி ஒரு வசதி இருப்பதைப் பயன்படுத்தி, ஒவ்வொரு முறையும் தனது மகப்பேறு காலம் முடிவடையும்போது அவர் மீண்டும் மீண்டும் கர்ப்பம் தரித்து வந்துள்ளார். இவ்வாறு, அவர் கடந்த 4 ஆண்டுகளில் 3 முறை கர்ப்பம் தரித்து சிறைக்கு போவதை தவிர்த்து வந்துள்ளார். இந்நிலையில், இந்து தொடர்பில் நடத்திய விசாரணையில், சிறைக்கு செல்வதை தவிர்க்க அவர் அவ்வாறு செய்வது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவரை கைது செய்து பொலிஸார் சிறையில் அடைத்தனர். அப்பெண், தான் பெற்ற 3 குழந்தைகளில் 2 குழந்தைகளை விவாகரத்தான கணவரிடமும், மேலும் ஒரு குழந்தையை அவரது சகோதரரிடமும் கொடுத்துள்ளார். சீனாவின் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி, ஒரு பெண் குற்றவாளி கர்ப்பமாக இருந்தால் அல்லது ஒரு குழந்தைக்கு பாலூட்டினால் அவருக்கு வீட்டுக் காவல் வழங்கப்படுகிறது.
நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகத்தின் 2ஆவது மாநாடு, மதுரையில் நாளை வியாழக்கிழமை (21) நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளின் கட்சித் தொண்டர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மதுரை மாநாட்டு திடலில் த.வெ.க.வின் 100 அடி கொடிக்கம்பத்தை இன்று (20) நட ஏற்பாடு செய்யப்பட்டது. இதனால், கிரேன் மூலம் கொடிக்கம்பம் நிறுத்தும் பணி நடைபெற்று வந்தது. அப்போது, யாரும் எதிர்பாராத நேரத்தில், கிரேனின் பெல்ட் திடீரென அறுந்ததில், கொடிக்கம்பம் சாய்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது. கொடிக்கம்பம் சாய்ந்து கார் ஒன்றின் மீது விழுந்ததால், கார் சுக்கு நூறாக நொறுங்கியது. இந்த விபத்தால் மதுரை மாநாட்டு திடலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விபத்தில் யாருக்கும் உயிர் சேதம் இல்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.
உலகைச் சுற்றி வந்த இளைய துணை விமானியாக மாறுவதற்கான வரலாற்று முயற்சியில் இறங்கியுள்ள அவுஸ்திரேலியா - பிரிஸ்பேனைச் சேர்ந்த 15 வயதான பைரல் வொல்லர் (Byron Waller) இலங்கை வந்துள்ளார். கொழும்பு, இரத்மலானை விமான நிலையத்தை நேற்று முன்தினம் (17) வந்தடைந்த அவரை, விமான நிலைய அதிகாரிகள் வரவேற்றனர். இந்தியப் பெருங்கடலில் 11 மணி நேர விமானப் பயணத்திற்குப் பின்னர் நேற்று முன்தினம் பைரன் வாலர் விமான நிலையத்தை வந்தடைந்ததார். பைரன், 45,000 கிலோ மீட்டர்கள், 7 கண்டங்களிலும் 30 நாடுகளை சுற்றிவர சுமார் 2 மாதங்கள் எடுக்கும் ஒரு பயணத்தை மேற்கொள்கிறார்.