“வாக்களித்த பிறகு: உள்ளூராட்சி மன்றங்களில் ஏ(மா)ற்றமா?”

ஜே.ஏ.ஜோர்ஜ்

ஆகஸ்ட் 23, 2025

Vote

ஜே.ஏ.ஜோர்ஜ்

“எல்லாம் தேர்தல் கால வாக்குறுதிகள் தம்பி, நானும் காலம் காலமாக இதனை பார்த்து வருகின்றேன். அவர்கள் தேர்தலுக்கு முன்னதாக சொல்வது ஒன்று தேர்லுக்கு பின்னர் செய்வது ஒன்று, இதை பற்றி கதைத்து வேலையில்லை” - ஒரு 60 வயது முதியவரின் ஆதங்கமே இது.

பொகவந்தலாவை பொலிஸ் பிரிவிலுள்ள லின்போட் தோட்டத்துக்கு செல்லும் பாதை வருடக்கணக்கில் செப்பனிடப்பாடாதவாறு உள்ளதுடன், குறித்த பாதையை தார் வீதியாக மாற்றியமைத்து தருமாறு மலையகத்தில் மாறி மாறி ஆட்சிக்கு வரும் கட்சிகளிடம் மக்கள் கோரிக்கை விடுத்த போதும் இதுவரை எந்தவோர் அரசியல்வாதியும் அதனை காதில் வாங்கிக்கொள்ளவில்லை.

குறித்த வீதியில் உள்ள பாலமொன்று சில வருடங்களுக்கு முன்னர் புனரமைக்கப்பட்ட போது, அந்த வீதியும் புனரமைக்கப்படும் என்று வாக்குறுதி வழங்கப்பட்ட போதும், இதுவரை அதனை செய்யவில்லை என அப்பகுதி மக்கள் விசனம் வெளியிடுகின்றனர்.

தேர்தல்கள் காலங்களில் அங்கு வரும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பாதையை புனரமைப்பதாக வாக்குறுதி வழங்குவதும், பின்னர் அதனை மறந்துவிடுவதும் காலம் காலமாக நடைபெற்றுவருவதுடன், பாதை சீரின்மை காரணமாக அப்பகுதியில் வாகனங்கள் பயணிப்பதில் பெரும் சிரமம் உள்ளதுடன், அந்தப் பாதையின் ஊடாக பஸ் போக்குவரத்தும் இல்லை என்பதால், முச்சக்கரவண்டியில் பயணம் செய்ய ஒன்று – இரண்டு கிலோமீற்றர் பயணிக்க 400 ரூபாய் கட்டணமாக அறவிடப்படுவதால், போக்குவரத்துக்கு அதிக பணத்தை செலவிடவேண்டிய துர்ப்பாக்கிய நிலை தொடர்வதாக தோட்டத் தொழிலாளியான கணேசன் தெரிவிக்கின்றார்.

“நாட்டில் இப்போது ஆட்சி மாற்றம் வந்துவிட்டது. இதற்கு முன்னர் எமது வாக்குகளை பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாதையை புனரமைப்பார்கள் என்று எதிர்பார்த்தோம் அது நடக்கவில்லை. புதிய அரசாங்கத்தின் ஊடாகவாவது அதனை செய்வார்கள் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது. இருந்தாலும், ஐந்து வருங்களில் எமது நம்பிக்கை வெறும் நம்பிக்கையாகவே இருந்து விடுமோ என்று தெரியவில்லை” என்கிறார் மோகன்.

இலங்கையில் 2025 மே மாதம் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்குப் பிறகு, இன்று மூன்று மாதங்கள் கடந்துவிட்டன. இத்தேர்தல், பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் நிலையற்ற தன்மை ஆகியவற்றில் இருந்து மீள் எழுச்சிப்பெற்று வந்த நமது நாட்டில், மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் நடைபெற்றது. ஆனால், மக்கள் எதிர்பார்த்த மாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளனவா? உள்ளூராட்சி உறுப்பினர்கள் தங்கள் பொறுப்புகளை சுயாதீனமாக நிறைவேற்றுகிறார்களா, அல்லது கட்சி அரசியலின் கீழ் செயல்படுகிறார்களா?  என்ற கேள்விகளை முன்வைத்தால். அதற்கு இன்னும் சில காலம் தேவை என்பதே பெரும்பாலான மக்களின் கருத்தாக உள்ளது.

இலங்கையில் இழுத்தடிப்பு செய்யப்பட்டு நடத்தப்பட்ட உள்ளூராட்சி மன்ற தேர்தல் முடிவுகள் நாட்டில் பெரும் அரசியல் நெருக்கடியை உருவாக்கிவிட்டதுடன், பெரும்பாலான உள்ளூராட்சி  மன்றங்களில் ஓர் அரசியல் கட்சி தனியாக ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மையை பெற்றிராத நிலையொன்றை காணமுடிந்தது.

அத்துடன், உள்ளுராட்சி தேர்தல்கள் நிறைவடைந்த நிலையிலும், அனைத்து உள்ளூராட்சி மன்றங்களிலும் ஆட்சியமைக்கப்பட்டு நிர்வாக நடவடிக்கைகள் தொடங்குவதற்கு சுமார் ஒரு மாதத்துக்கும் அதிக காலம் இழுபறி நிலையொன்று காணப்பட்டிருந்தது.  

தேர்தல் பிரசாரத்தின் போது கடுமையாக எதிர் பிரசாரத்தை மேற்கொண்ட அரசியல் கட்சிகள் வேறு வழியின்றி நேரடியாகவும் மறைமுகமாகவும் ஒப்பந்தங்களை மேற்கொண்டு, உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிக்கொண்டன.

ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மையை வெற்றிகொண்ட தேசிய மக்கள் சக்தியும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் இந்தச் சுழலில் சிக்கிகொண்டது. ஏனென்றால் கொள்கை பிடிப்புடன் ஏனைய கட்சிகளுடன் கூட்டுச் சேரமாட்டோம் எனக்கூறி வந்த ஆளும் தேசிய மக்கள் சக்தி, ஏனைய கட்சிகளுடன் வாய்மூல ஒப்பந்தம் செய்து  பல உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை கைப்பற்றியதை அவதானிக்க முடிந்தது.

மலையகத்தில் மாறி மாறி ஆட்சிக்கு வந்த இரண்டு பிரதான கட்சிகள் மக்களை ஏமாற்றி வந்த நிலையில், அந்தக் கட்சிகளை கடந்த தேர்தல்களில் மக்கள் புறக்கணித்தனர். இவ்வாறான நிலையில், மக்கள் புறக்கணித்த கட்சிகளுடன் ஆளும் தேசிய மக்கள் சக்தி, கைகோர்த்து சில உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைத்தமை மலையக மக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.
நாட்டில் இருவரை ஆட்சியில் இருந்தவர்கள் இலஞ்சம், ஊழல், மோசடி செய்ததாகக் கூறிய தேசிய மக்கள் சக்தி, உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமது இறுக்கமான கொள்கையை கைவிட நேரிட்டது. 

மலையகத்தில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களின் ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக, எதிரணியான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களின் ஆதரவுடன் ஏழு உள்ளூராட்சி மன்றங்களின் ஆட்சியை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளதுடன், சில உள்ளூராட்சி மன்றங்களின் துணை தவிசாளர் பதவிகளையும் பெற்றுக்கொண்டுள்ளது.

இவ்வாறான ஒரு நிலையில், தேசிய மக்கள் சக்தியின் தலைமையில், தமது பகுதியில் பாரிய அபிவிருத்தி மாற்றம் ஏற்படுத்தப்படும் என்ற நம்பிக்கையில் மலையக பெருந்தோட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் உள்ளனர்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, மலையக பெருந்தோட்ட மக்களின் அபிவிருத்தி தொடர்பில் தொடர்ந்து தனது உரைகளில் குறிப்பிடுவதுடன், அண்மையில் நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில் மலையக மக்களுக்கு காணி, வீடு மற்றும் பொது வசதிகளை பெற்றுக்கொடுத்து, அவர்களுக்கு காணி உட்பட உரிமைகளை வழங்க வேண்டும் எனக் கூறியிருந்தார்.

அத்துடன், தேசிய மக்கள் சக்தியின் “வளமான நாடு அழகான வாழ்க்கை” என்ற கொள்கைப் பிரகடனத்திலும் மலையக மக்களின் அபிவிருத்தி தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், ஆட்சி பீடம் ஏறுவதற்கு முன்பதாக மலையக மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் பிரகடனமொன்றையே வெளியிட்டு இருந்தது. 

இவ்வாறானதொரு நிலையில், எதிர்வரும் ஐந்து வருடங்களுக்குள் பிரதேச சபைகள் மூலமாக தோட்டக் குடியிருப்புகளில்  பல அடிப்படை அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்ள தேசிய மக்கள் சக்திக்கு வாய்ப்பு கிடைத்து உள்ளது.

வருடம் முழுவதும் தொடர்ச்சியான மழை வீழ்ச்சியை எதிர்நோக்கும் மலையத்தில் உள்ள பெருந்தோட்டங்களின் பிரதான வீதிகள் இன்றும் சேறும் சகதியுமாக மழை பெய்யும் நாட்களில் மக்கள் நடந்துசெல்ல முடியாத நிலையிலேயே உள்ளன. இதனால் பாடசாலை மாணவர்கள் மட்டுமல்லாது நோயாளர்கள், முதியவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் என அனைத்துத் தரப்பினரும் பாரிய சவால்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். கொழும்பு உள்ளிட்ட நகரப்புறங்களில் முச்சக்கரவண்களுக்கு கிலோமீற்றருக்கு 100 ரூபாய் கட்டணமாக அறவிடப்படும் நிலையில், மலையக பெருந்தோட்டங்களில் அதிகளவு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகின்றது. இதற்கு பிரதான காரணமாக பாதை சீரின்மையை சாரதிகள் சுட்டிக்காட்டுகின்றன.

காணிப் பிரச்சினையும் வீட்டுப் பிரச்சினையும் உட்கட்டமைப்பு பிரச்சினையும் மலையக மக்களின் தீராத பிரச்சினையாகத் தொடர்ந்து இருந்து வரும் நிலையில், பிறப்பு முதல் இறப்பு வரையிலான சேவைகளை வழங்கும் பிரதேச சபையின் தவிசாளராக, உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் தாம் நினைத்தால் தமக்குக் கிடைக்கும் நிதியைக் கொண்டு, மக்களுக்கு தேவையான அத்தியாவசிய சிறு வேலைத்திட்டங்களைத் காத்திரமான முறையில் முன்னெடுக்க முடியும்.

ஏனென்றால் ஊழலுக்கு எதிரான நடவடிக்கை எடுப்போம் என்ற ஆட்சியை கைப்பற்றிய தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தில், கடந்த ஆட்சிகளின் போது மேற்கொள்ளப்பட்டது போன்று இம்முறை பிரதேச சபைகளில் ஊழல்களை மேற்கொள்ள முடியாது. அவ்வாறு ஊழல் நடைபெற்றால் தேசிய மக்கள் சக்தியின் மீதான மக்களின் நம்பிக்கையில் அது கைவைத்துவிடக்கூடும்.

கடந்த தேர்தலில் புதிய முகங்களுக்கு வாக்களித்த இளைஞர்கள், ஆட்சி மாற்றத்தின் பின்னரும் காட்சி மாற்றம் தாமதமாகுவதால் ஏமாற்றம் அடைந்துள்ளனர். சமூக ஊடகங்களின் ஊடாக அவர்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருவதை காணமுடிகின்றது. 

இதேவேளை, பழைய அரசியல் கட்டமைப்புகளில் நம்பிக்கை வைத்திருக்கும் மூத்தவர்கள், கட்சி உத்தரவுகளுக்கு அடிபணிந்து செயல்படும் உறுப்பினர்களால் ஏமாற்றமடைந்துள்ள நிலையில், "மாற்றம் காலப்போக்கில் வரும்" என்று நம்பிக்கை கொண்டுள்ளனர்.

இத்தேர்தலில் பெண்களுக்கு 25% பிரதிநிதித்துவம் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், உள்ளூராட்சி மன்றத்தில் பெண் உறுப்பினர்கள் முடிவெடுக்கும் செயல்முறைகளில் முழுமையாக ஈடுபடுத்தப்படுகின்றார்களா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. 

தேர்தலில் வாக்களித்து விட்டோம் ஆட்சி மாற்றம் வந்துவிட்டது. இனி நமக்கென்ன என்று இருக்காமல், வாக்காளர்கள் என்ற ரீதியில், உள்ளூராட்சி மன்றங்களின் செயல்பாடுகளை பொதுமக்கள் கண்டறிய வேண்டும். அத்துடன், இளைஞர்கள் அரசியலில் தீவிரமாக பங்கேற்க வேண்டும். அப்போதுதான் எதிர்பார்த்த சமூக அரசியல் மாற்றங்களை காண முடியும்.

அத்துடன், உள்ளூர் தேவைகள் கட்சி நலன்களை கருத்தில் கொண்டு முன்னெடுக்காமல் மக்களின் நலன்களை கருத்தில் கொண்டு முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதுடன், உள்ளூராட்சி செயல்பாடுகளை கண்காணித்து அது தொடர்பான பக்கசார்பற்ற தகவல்களை  ஊடகங்கள் தொடர்ந்து வெளிக்கொண்டு வர வேண்டும். அப்போதுதான், அரசியலில் மக்களின் பங்களிப்புத் தொடர்ந்து அதிகரிக்கும். இல்லையென்றால், தேர்தல் மற்றும் அரசியல் கட்சிகளின் மீதான நம்பிக்கையின்மை மக்கள் மத்தியில் அதிகரித்து விடலாம்.

இலங்கையில் புதிதாக தெரிவான உள்ளூராட்சி மன்றங்கள், மக்களின் நம்பிக்கையை மீண்டும் பெற, தாம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில், அடுத்த தேர்தலில் மக்கள் மீண்டும் ஏமாற்றமடைய வாய்ப்புள்ளது.

"வாக்கு என்பது வெறும் உரிமை மட்டுமல்ல, மாற்றத்தின் ஆயுதம்" – இந்த உணர்வை மக்கள் மீண்டும் நினைவுகூர வேண்டிய நேரம் இதுவாகும். 

இந்தக் கட்டுரை, தமிழ் மிரர் E-paperஇல் 22.08.2025 திகதியன்று பிரசுரிக்கப்பட்ட கட்டுரையாகும்

0 Comments

Popular post
புதன் நட்சத்திர பெயர்ச்சி - இந்த 3 ராசிகளுக்கு வெற்றியும், செல்வமும் குவியப்போகுது...

ஜோதிடத்தில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படுபடும் புதன், ஆகஸ்ட் மாதத்தில் மகம் நட்சத்திரத்திற்கு செல்லவுள்ளார். அதுவும் இந்த மக நட்சத்திரத்திற்கு ஆகஸ்ட் 30 ஆம் தேதி செல்லவிருக்கிறார். இந்த மகம் நட்சத்திரத்தில் புதன் செப்டம்பர் 06 ஆம் தேதி வரை இருப்பார். நட்சத்திரங்களில் மகம் 10 ஆவது நட்சத்திரமாகும். இது முன்னோர்களைக் குறிக்கிறது. மகம் நட்சத்திரத்தின் அதிபதி கேது.  புதன் கேதுவின் நட்சத்திரத்திற்கு செல்வதால், அதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும். அதில் சில ராசிக்காரர்களுக்கு மோசமாக இருந்தாலும், சிலருக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது.  ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு புதனின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. புத்திசாலித்தனத்தால் பல வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். இதுவரை உணர்வுகளை மற்றவர்களிடம் தெரிவிக்காமல் மறைத்திருந்தால், இக்காலத்தில் வெளிப்படுத்துவீர்கள். உங்களின் தைரியம் அதிகரிக்கும். மனதில் பட்டதை மறைக்காமல் வெளிப்படையாக பேசுவீர்கள். உணர்ச்சி ரீதியாக சிறப்பாக உணர்வீர்கள். வியாபாரிகளுக்கு சிறப்பாக இருக்கும். எடுக்கும் வேலைகளில் வெற்றி கிடைக்கும். சிம்மம் சிம்ம ராசிக்காரர்களுக்கு புதனின் நட்சத்திர பெயர்ச்சியால் தொழில் ரீதியாக சிறப்பாக இருக்கும். அறிவாற்றல் மேம்படும். புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வீர்கள். உங்களின் பேச்சு மிகவும் சுவாரஸ்மாக இருக்கும். பேச்சால் பல வேலைகளை சிறப்பாக முடிப்பீர்கள். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். நிதி நிலை மேம்படும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தேவையற்ற விஷயங்களில் நுழைந்து மன அழுத்தப்படுவதைத் தவிர்த்திடுங்கள். மேலும் இக்காலத்தில் மன அழுத்தத்தைக் குறைக்க யோகா, உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள். விருச்சிகம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு புதனின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கப் போகிறது. புத்திசாலித்தனம் அதிகரிக்கும். பேச்சால் பல வேலைகளில் வெற்றி பெறுவீர்கள். நீண்ட காலமாக இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். நிதி நிலை நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் ரீதியாக பல சிறப்பான பலன்களைப் பெறுவீர்கள். தொழிலதிபர்கள் எதிர்காலத்தில் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும்.

ரணில் கைது: நீதிமன்ற வளாகத்தில் கடும் பாதுகாப்பு

கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, கோட்டை நீதவான் நீதிமன்றத்தைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நான்கு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த வாக்குமூலத்திற்குப் பிறகு,   விக்ரமசிங்க கைது செய்யப்பட்டார். இதனையடுத்து, அவர் விரைவில் அவர் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிறைக்கு போவதை தவிர்க்க 4 ஆண்டுகளில் 3 முறை கர்ப்பம் தரித்த பெண்!

சீனாவின் ஷான்சி மாகாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு, மோசடி வழக்கில் 2020ஆம் ஆண்டில் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது அவர் கர்ப்பமாக இருந்ததால், சிறைக்கு வெளியே தண்டனை அனுபவிக்க அனுமதிக்கப்பட்டார். இப்படி ஒரு வசதி இருப்பதைப் பயன்படுத்தி, ஒவ்வொரு முறையும் தனது மகப்பேறு காலம் முடிவடையும்போது அவர் மீண்டும் மீண்டும் கர்ப்பம் தரித்து வந்துள்ளார். இவ்வாறு, அவர் கடந்த 4 ஆண்டுகளில் 3 முறை கர்ப்பம் தரித்து சிறைக்கு போவதை தவிர்த்து வந்துள்ளார். இந்நிலையில், இந்து தொடர்பில் நடத்திய விசாரணையில், சிறைக்கு செல்வதை தவிர்க்க அவர் அவ்வாறு செய்வது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவரை கைது செய்து பொலிஸார் சிறையில் அடைத்தனர். அப்பெண், தான் பெற்ற 3 குழந்தைகளில் 2 குழந்தைகளை விவாகரத்தான கணவரிடமும், மேலும் ஒரு குழந்தையை அவரது சகோதரரிடமும் கொடுத்துள்ளார். சீனாவின் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி, ஒரு பெண் குற்றவாளி கர்ப்பமாக இருந்தால் அல்லது ஒரு குழந்தைக்கு பாலூட்டினால் அவருக்கு வீட்டுக் காவல் வழங்கப்படுகிறது. 

நடிகர் விஜய்யின் கட்சி கொடிக்கம்பம் சாய்ந்து விழுந்ததில் கார் நொறுங்கியது!

நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகத்தின் 2ஆவது மாநாடு, மதுரையில் நாளை வியாழக்கிழமை (21) நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளின் கட்சித் தொண்டர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மதுரை மாநாட்டு திடலில் த.வெ.க.வின் 100 அடி கொடிக்கம்பத்தை இன்று (20) நட ஏற்பாடு செய்யப்பட்டது. இதனால், கிரேன் மூலம் கொடிக்கம்பம் நிறுத்தும் பணி நடைபெற்று வந்தது. அப்போது, யாரும் எதிர்பாராத நேரத்தில், கிரேனின் பெல்ட் திடீரென அறுந்ததில், கொடிக்கம்பம் சாய்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது. கொடிக்கம்பம் சாய்ந்து கார் ஒன்றின் மீது விழுந்ததால், கார் சுக்கு நூறாக நொறுங்கியது. இந்த விபத்தால் மதுரை மாநாட்டு திடலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விபத்தில் யாருக்கும் உயிர் சேதம் இல்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கைக்கு வந்த 15 வயது துணை விமானி!

உலகைச் சுற்றி வந்த இளைய துணை விமானியாக மாறுவதற்கான வரலாற்று முயற்சியில் இறங்கியுள்ள அவுஸ்திரேலியா - பிரிஸ்பேனைச் சேர்ந்த 15 வயதான பைரல் வொல்லர் (Byron Waller) இலங்கை வந்துள்ளார். கொழும்பு, இரத்மலானை விமான நிலையத்தை நேற்று முன்தினம் (17)  வந்தடைந்த அவரை, விமான நிலைய அதிகாரிகள் வரவேற்றனர். இந்தியப் பெருங்கடலில் 11 மணி நேர விமானப் பயணத்திற்குப் பின்னர் நேற்று முன்தினம் பைரன் வாலர் விமான நிலையத்தை வந்தடைந்ததார். பைரன், 45,000 கிலோ மீட்டர்கள், 7 கண்டங்களிலும் 30 நாடுகளை சுற்றிவர சுமார் 2 மாதங்கள் எடுக்கும் ஒரு பயணத்தை மேற்கொள்கிறார். 

Top week

ஆன்மிகம்

புதன் நட்சத்திர பெயர்ச்சி - இந்த 3 ராசிகளுக்கு வெற்றியும், செல்வமும் குவியப்போகுது...

Admin ஆகஸ்ட் 24, 2025 0

Voting poll

ரணில் விக்கிரமசிங்கவை கைது செய்தது?