
ரயில் பெட்டியின் பின்னால் இருக்கும் X குறியீட்டுக்கு என்ன அர்த்தம்?

பொதுவாக ரயில் பெட்டிகளில் X என்ற குறியீடு எழுதியிருப்பதை பார்த்திருப்போம். சிலர் பார்த்திருக்க மாட்டார்கள்.

இந்த எழுத்திற்கான காரணம் என்னவாக இருக்கும் என்பதை யாராவது யோசித்தது உண்டா?

இந்திய ரயில்வே புள்ளிவிபரங்களின் அடிப்படையில் தினமும் சுமார் 22,593 ரயில்கள் இயங்கும். சுமார் 13,452 ரயில்கள் பயணிகளுக்காக இயங்கும்.

இதில் ஒரு நாளைக்கு ரயிலில் சுமார் 2 கோடியே 40 லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் பயணிக்கின்றனர்.

பெட்டியின் கடைசி பெட்டியில் X என்ற எழுத்து பெரிய வடிவில் எழுதப்பட்டிருக்கும்.

ரயில் நிலையத்தை விட்டு ஒரு ரயில் கடந்து செல்லும் போது அங்குள்ள அதிகாரிகள் பெட்டியில் இந்த "X" குறியீடு இருக்கிறதா என்பதை பார்ப்பார்கள்

ரயில்களில் இந்த குறியீடு இருந்தால், ரயில் முழுவதும் எந்தப் பெட்டியும் வழியில் கழன்றுவிடாமல் பாதுகாப்பாக வந்துள்ளது என்பது உறுதியாகும்.

ஒருவேளை ரயில் பெட்டிகளில் இந்த குறியீடு இல்லாவிட்டால் ரயிலின் கடைசிப் பெட்டி வழியில் எங்கோ கழன்று விழுந்துவிட்டது என்று அர்த்தம்.