1979 புரட்சிக்குப் பிறகு உருவான இஸ்லாமிய குடியரசு பல நெருக்கடிகளையும் கடந்து இன்னும் அதிகாரத்தில் நீடிக்கிறது.
1979-இல் நடந்த புரட்சி இரானில் புதிய மத அரசை உருவாக்கியது. அதன் பிறகு 40 ஆண்டுகளுக்கும் மேலாக அதே அமைப்பு ஆட்சியை பிடித்துள்ளது.
உச்சத் தலைவர் கொல்லப்பட்டாலும் அமைப்பு உடனே சிதைவதில்லை. ஏனெனில், மாற்று தலைவர்கள் முன்கூட்டியே தயார் நிலையில் உள்ளனர்.
இரான் ஒரே நபர் ஆட்சி அல்ல. மதகுருக்கள், ராணுவம், பொருளாதார அமைப்புகள் எல்லாம் அதிகாரத்தை பகிர்ந்து கொண்டுள்ளன.
இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) ஆட்சியின் முதுகெலும்பாக கருதப்படுகிறது. இது ராணுவ சக்தியுடன் அரசியல் மற்றும் பொருளாதாரத்திலும் செல்வாக்கு கொண்டது.
இரானில் தேர்தல்கள் இருக்கின்றன. ஆனால் வேட்பாளர்களை Guardians Council ஆய்வு செய்து அரசுக்கு விசுவாசமானவர்களை மட்டுமே அனுமதிக்கிறது.
போனியாட்ஸ் (Bonyads) எனப்படும் அரசு தொடர்புடைய அறக்கட்டளைகள் ஆயிரக்கணக்கான நிறுவனங்களை கட்டுப்படுத்தி ஆட்சிக்கு ஆதரவானவர்களுக்கு வேலை வழங்குகின்றன.
இஸ்லாமிய புரட்சியின் கருத்தியல் ஒற்றுமை, தியாகம், மத அடையாளம் ஆகியவற்றை ஆட்சியை பாதுகாக்க பயன்படுத்துகிறது.
இரானின் எதிர்க்கட்சிகள் பல குழுக்களாகப் பிளவுபட்டுள்ளன. மையத் தலைமையில்லாததால் பெரிய அரசியல் மாற்றம் உருவாக கடினமாகிறது.
நிபுணர்கள் கூறுவது: ஒவ்வொரு ஆட்சியும் ஒருநாள் முடிவடையும். ஆனால் இரானின் அமைப்பு வீழ்ச்சியை தாமதப்படுத்தும் மிக வலுவான கட்டமைப்பைக் கொண்டுள்ளது.