உத்தரபிரதேசம் மாநிலத்தின் பந்தா மாவட்டம் பட்டியலில் முதல் இடம் பிடித்துள்ளது

உலகளாவிய வெப்ப அலையின் மையப்பகுதியாக இந்தியா மாறியுள்ளது

பல பகுதிகளில் வெப்பத்தின் அளவு 40 டிகிரி செல்சியஸுக்கு அதிகமாகவும் சில இடங்களில் 45 டிகிரி செல்சியஸுக்கு அருகிலும் பதிவாகியுள்ளது.

டெல்லி, உத்தரபிரதேசத்தின் பரிதாபாத், சண்டிகர், ஜம்மு, ஆக்ரா, அயோத்தி, குவாலியர், கோட்டா மற்றும் ராய்ப்பூர் ஆகிய பகுதிகளில் கடும் வெப்ப அலை வீசுவதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

உத்தரபிரதேசம் மாநிலத்தின் பந்தா மாவட்டம் உலகில் அதிக வெப்பம் பதிவாகும் நகரங்களில் முதல் இடத்தை பிடித்துள்ளது.

இந்த நிலைக்கு உலர்ந்த காற்று, மேகமின்மை, மழை இல்லாமை மற்றும் முன்-மழைக்கால செயல்பாடுகள் உள்ளிட்டவை காரணம்

வெப்பம் சார்ந்த நோய்களுக்கு எதிராக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு மக்களுக்கு அறிவுறுத்தல்