1,000 கி.மீ (620 மைல்கள்) நீளம் (ஏறக்குறைய பிரான்ஸ் நாட்டின் அகலத்திற்குச் சமம்) கொண்ட பாவி புயல், பசிபிக் பெருங்கடலைக் கடந்து தைவானை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.
சனிக்கிழமையன்று தென்கிழக்கு சீனாவில் கரையைக் கடப்பதற்கு முன்பு, தைவானின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளிலும், ஜப்பானின் தொலைதூரத் தீவுத் தொடரிலும் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பல்வேறு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன, அதே நேரத்தில் இப்பகுதி முழுவதும் பள்ளிகளில் வகுப்புகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
புயலுக்கு முன்னதாக மக்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்கிச் சேமித்து வைப்பதால், பல்பொருள் அங்காடிகளின் அலமாரிகள் காலியாகிவிட்டன.
வார இறுதி முழுவதும் நாட்டின் சில பகுதிகளில் மிதமானது முதல் கனமழை வரை தொடர்ந்து பெய்யும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.