2 டேபிள் ஸ்பூன் கடலை மாவு + பாதி எலுமிச்சை சாறு + 1 டேபிள் ஸ்பூன் மில்க் க்ரீம். முகத்தில் தடவி 15–20 நிமிடம் வைத்து கழுவுங்கள்.
கடலை மாவுடன் சிறிது பப்பாளி கூழ் மற்றும் ஆரஞ்சு சாறு சேர்த்து பேஸ்ட் செய்யுங்கள். முகத்தில் தடவி காய்ந்ததும் கழுவவும்.
2 ஸ்பூன் கடலை மாவு + மஞ்சள் + தயிர் + சிறிது தேன். முகத்தில் தடவி காய்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவுங்கள்.
கடலை மாவு, தேன், பாதாம் எண்ணெய், தயிர் மற்றும் முட்டை மஞ்சள் சேர்த்து கலக்கவும். முகத்தில் தடவி காய்ந்ததும் கழுவவும்.
கடலை மாவுடன் பால் சேர்த்து பேஸ்ட் செய்து 20 நிமிடம் முகத்தில் வையுங்கள். இது அதிக எண்ணெயை நீக்கி முகத்திற்கு உடனடி பொலிவு தரும்.