விலையுயர்ந்த கிளீனர்கள் தேவையில்லை. இந்த எளிய டிப்ஸ் மூலம் உங்கள் சிங்கை சுத்தமாக வைத்துக் கொள்ளலாம்.
சமையலறை சிங்கில் காய்கறி, பாத்திரம் கழுவுதல் உள்ளிட்ட பல வேலைகள் செய்யப்படுகிறது. இரவில் சுத்தம் செய்துவிட்டு சென்றாலும், காலையில் துர்நாற்றம் வீசுவது பொதுவான பிரச்சனை. காரணம், வடிகாலில் தேங்கும் நீரும், குழாயில் ஒட்டிக்கொள்ளும் எண்ணெய், மசாலா, உணவுத்துகள்களும்தான்.
இரவு உறங்கச் செல்லும் முன், சிங் தொட்டியில் ஒரு கைப்பிடி உப்பை சேர்க்கவும். உப்புக்கு ஈரப்பதத்தை உறிஞ்சும் தன்மையும், அழுக்கை தளர்த்தும் இயற்கையான திறமையும் உண்டு. இது குழாய்களில் உள்ள பிசுபிசுப்பான அழுக்கை நீக்க உதவுகிறது.
குழாய்களில் உள்ள ஈரப்பதத்தை நீக்கும். பிசுபிசுப்பை குறைக்கும். அடைப்புகளைச் சரி செய்யும். துர்நாற்றத்தைக் கட்டுப்படுத்தும். பூச்சிகள், கரப்பான் பூச்சிகளையும் கட்டுப்படுத்தும்.
ண்ணெய் நிறைந்த உணவுகள், பயன்படுத்திய எண்ணெய்களை நேரடியாக சிங்கில் கொட்டக் கூடாது. வாரத்திற்கு ஒருமுறை சுடு தண்ணீர் கொண்டு சிங்கை கழுவ வேண்டும். சிங் குழாயில் சிறிய வடிகட்டிகளை பயன்படுத்த வேண்டும்.