" rel="stylesheet">
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்றுகள் முடிந்து தற்போது அரையிறுதி போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் அரையிறுதியில் தென் ஆப்பிரிக்காவை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அணி இறுதிக்கு முன்னேறியது.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது அரையிறுதியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின.
சஞ்சு சாம்சன் 15 ரன்களில் இருந்தபோது கொடுத்த கேட்சை இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக் தவறவிட்டார். அதனைத் தொடர்ந்து சாம்சன் அரைசதம் அடித்து அசத்தினார்.
அதிரடியாக விளையாடிய சஞ்சு சாம்சன் 42 பந்துகளில் 89 ரன்கள் குவித்து அவுட்டானார்.
கடந்த போட்டியில் 97 ரன்களில் அவுட்டாகாமல் இருந்த அவர், இந்த போட்டியிலும் சதம் அடிக்க தவறியது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.