
40 பேர் மட்டுமே வருஷத்துக்கு வருகை தரும் உலகின் மோசமான நாடு

உலகில் மிகக் குறைவாகப் பார்வையிடப்படும் நாடு பசிபிக் பெருங்கடலின் நடுவில் உள்ளது, அது துவாலு என்று அழைக்கப்படுகிறது.

ஒன்பது தீவுகளைக் கொண்ட ஒரு சிறிய தீவு நாடான துவாலு, ஆஸ்திரேலியாவிற்கும் ஹவாய்க்கும் இடையில் அமைதியாக அமைந்துள்ளது.

2021 ஆம் ஆண்டில் இந்த நாட்டுக்கு 40 சுற்றுலாப் பயணிகள் மட்டுமே வந்துள்ளனர்.

சமீபத்திய ஆண்டுகளில் ஒவ்வொரு வருடமும் 200 க்கும் குறைவான சுற்றுலாப் பயணிகள் மட்டுமே இங்கு வருகை தருகின்றனர்.

துவாலு உண்மையில் ஒரு அழகான நாடாகும். ஆனால் அதன் தொலைதூர இடம், மக்களின் வருகையை தவிர்க்க வைக்கிறது.

துவாலு, பிஜி தீவின் வடகிழக்கில் தெற்கு பசிபிக் பகுதியில் அமைந்துள்ளது. மேலும் பூமத்திய ரேகைக்கு மிக அருகில் உள்ளது.

இந்த தீவு கூட்டங்களின் முக்கிய தீவு ஃபுனாஃபுட்டி ஆகும், அங்கு ஒரு சர்வதேச விமான நிலையம் ஒரு குறுகிய நிலப்பகுதியில் அமைந்துள்ளது.

இது வெறும் 26 சதுர கிலோமீட்டர் பரப்பளவு மட்டுமே உள்ள நாடாகும். கடல் மட்டத்திலிருந்து சராசரியாக 6.5 அடி உயரத்தில் உள்ள தீவு.

காலநிலை மாற்றம் மற்றும் கடல் உயர்வு ஆகியவற்றால் மிகவும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் நாடுகளில் ஒன்றாகும்.

ஒவ்வொரு வாரமும் பிஜி ஏர்வேஸிலிருந்து ஒரு சில விமானங்கள் மட்டுமே இங்கு தரையிறங்குகின்றன.

அங்கு தங்குவதற்கு ஆடம்பர ஹோட்டல்கள் எதுவுமில்லை, மிகவும் சாதாரண ஹோட்டல்கள் மட்டுமே உள்ளது.

முக்கிய தீவான ஃபனாஃபுட்டியில் ஒரே ஒரு சாலை மட்டுமே உள்ளது, அதில் போக்குவரத்து விளக்குகளும் இல்லை.