கிழக்கு

அலைபேசிகளை திருடி விற்பனை செய்த கும்பல் சிக்கியது

கைதானவர்களின் வாக்குமூலத்தின் படி, வைத்தியசாலைகள் நோயாளிகள் மற்றும் பார்வையாளர்களை பிரதானமாக இலக்கு வைத்து, சக நோயாளர்களாகவும் சிற்றூழியர்களாகவும் நடித்து, சூட்சுமமாக அலைபேசிகளை திருடியுள்ளனர்.

மனித புதைகுழிக்கு நீதி கோரிய பேரணிக்கு அழைப்பு

வெள்ளிக்கிழமை, வட்டுவாகல் பாலத்தில் ஆரம்பித்து, முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தை நோக்கிப் பேரணி மேற்கொள்ளப்படவுள்ளது.

கிழக்கு கூட்டுறவு ஆணைக்குழு உறுப்பினராக ஊடகவியலாளர் ஹுதா உமர்

கிழக்கின் பல்வேறு சமூக பிரச்சினைகளை வெளிக்கொண்டுவரும் ஊடகவியலாளர்களில் ஒருவரான நூருல் ஹுதா, ஆய்வு, விமர்சன, விவரண தொடர் கட்டுரைகளையும் பத்திரிகைகளில் தொடர்ச்சியாக எழுதி வரும் ஒருவராவார்.

நாபீர் பவுண்டேஷன் அமைப்பினால் உணவுப் பொதிகள் வழங்கிவைப்பு

நாபீர் பவுண்டேஷன் ஸ்தாபகரும் பொறியியலாளருமான உதுமான் கண்டு நாபீரின் வழிகாட்டலின் கீழ் நடைபெற்ற இந்நிகழ்வு, நாபீர்‌ பவுண்டேஷனின் சம்மாந்துறை கோரைக் கோவில் மகளிர் அமைப்பின் தலைவியான ரஹீமாவின் தலைமையில் நடைபெற்றது.

கிழக்கு முஸ்லிம்களை புறக்கணிக்கும் ரணில்; இம்ரான் எம்.பி குற்றச்சாட்டு 

தற்போதும் கிழக்கு மாகாண அதிகார சபைகள், ஆணைக்குழுக்கள் என்பவற்றுக்கான தவிசாளர் மற்றும் பொது முகாமையாளர்கள் நியமனத்தில் முஸ்லிம்கள் எவரும் உள்வாங்கப்படவில்லை.

சிறுமி வன்புணர்வு; தந்தை - மாமனார் கைது

சிறுமியின் தாயார் கடந்த 3 மாத்துக்கு முன்னர் உயிரிழந்துள்ள நிலையில், தந்தையுடன் வாழ்ந்துள்ளார்.

அரச நிறுவனங்களை உரிய இடங்களுக்கு மாற்ற குழு அமைப்பு

இக்குழுவானது சாய்ந்தமருது பொலிஸ் நிலையம் உட்பட அரச நிறுவனங்கள் நிரந்திரமாக அமைக்கப்பட வேண்டிய இடங்களை ஆராயவுள்ளது.

மட்டக்களப்பில் 'தராக்கி' ஈழத் தமிழ் ஊடக முன்னோடி நூல் வெளியீடு

நூல் வெளியீட்டைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், செல்வராசா கஜேந்திரன், இராசபுத்திரன் சாணக்கியன் ஆகியோரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சேனாதிராஜா ஜெயானந்தமூர்த்தி மற்றும் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் ஆகியோர் உரையாற்றவுள்ளனர்.

யுத்தத்தில் இடம்பெயர்ந்த கனகர் கிராம மக்களை மீள்குடியேற்ற நடவடிக்கை

யுத்த சூழ்நிலை காரணமாக 1987ஆம் ஆண்டு, அம்பாறை - கனகர் கிராமத்தில் இருந்து இராணுவத்தினரால் வெளியேற்றப்பட்ட மக்களை மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கிழக்கு ஆளுநரின் சர்வதேச விவகாரங்களுக்கான இணைப்பு செயலாளர் நியமனம்

கிண்ணியாவை சேர்ந்த  ஏ.எல்.எம்.லாபீர், இலங்கை வெளிவிவகார செயலகத்தில் 25 வருடம் சேவையாற்றியுள்ளதோடு, தாய்லாந்து, கனடா மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளில் இராஜதந்திரியாகவும் செயற்பட்டுள்ளார். 

நிர்வாக சேவை அதிகாரிகளிடம் கிழக்கின் கேடயம் விடுத்துள்ள கோரிக்கை

கிழக்கு மாகாண சபையிலும், தேசிய ரீதியாகவும் முஸ்லிம் சிவில் நிர்வாக சேவை அதிகாரிகள் கடுமையான மன உளைச்சலுடன் பணியாற்ற நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்.

அம்பாறை மாவட்ட புதிய அரசாங்க அதிபர் கடமையை பொறுப்பேற்றார்

முன்னாதாக இவர் தொகை மதிப்பு புள்ளிவிவரவியல் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றியிருந்தார்.

மனம்பிடிய பேருந்து விபத்து; அறிக்கை சமர்ப்பிக்குமாறு செந்தில் பணிப்புரை

வடமத்திய மாகாண பொலன்னறுவை - கதுருவெல பகுதியிலிருந்து காத்தான்குடிக்கு சென்ற பேருந்தொன்று மனம்பிடிய பகுதியில் நேற்று(09) இரவு விபத்திற்குள்ளாகியது.

திடீரென சரிந்து விழுந்த தொலைதொடர்பு கோபுரம்! ஐவர் படுகாயம்

10 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட மிக உயரமான கோபுரமே இவ்வாறு பலத்த காற்றினால் தபால் நிலையத்தின் மேற்கூரையில் விழுந்துள்ளது.

யாத்திரை சென்ற நபர் பாம்பு தீண்டி மரணம்

பொத்துவில் உகந்த முருகன் ஆலையத்தில் இருந்து  கதிர்காமத்துக்கு காட்டுவழியாக பாதை யாத்திரை சென்ற குடும்பஸ்தரை, குமுக்கன் வனப்பூங்கா இந்துகோவில் பகதியில் வைத்து பாம்பு தீண்டியுள்ளது. 

திருகோணமலை மாவட்ட ஹோட்டல் வலையமைப்பு அமைப்பு அங்குரார்ப்பணம்

தலைவராக திருப்பதி துறையும், செயலாளராக எஸ்.சக்தீபன், பொருளாளராக எஸ்.பிரியதர்சினி உட்பட ஏனைய நிர்வாக குழு உறுப்பினர்கள் மற்றும் ஆலோசனை குழு என தெரிவுகள் நடைபெற்றன.